Published:Updated:

சாத்தான்குளம் வழக்கு: குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த சி.பி.ஐ! #NowAtVikatan

சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ்
சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ்

26-09-2020 | இன்றைய முக்கிய நிகழ்வுகலின் தொகுப்பு...!

26 Sep 2020 6 PM

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய நிர்வாகிகள் பட்டியல்!

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய நிர்வாகிகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர்கள் ராமன் சிங், வசுந்தரா ராஜே சிந்தியா, முன்னாள் மத்திய அமைச்சர் ராதா மோகன் சிங் உள்ளிட்டோர் துணைத் தலைவர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்த தேசிய நிர்வாகிகள் பட்டியலில் தமிழகத்தை சேர்ந்த யாரும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடதக்கது.

26 Sep 2020 4 PM

சாத்தான்குளம்: குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த சி.பி.ஐ!

சாத்தான்குளம்
சாத்தான்குளம்

சாத்தான்குளம் காவல்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்ட தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் கடந்த ஜூன் மாதம் 22, 23 -ம் தேதிகளில் அடுத்தடுத்து சிறையில் உயிரிழந்தனர். இந்த வழக்கை தற்போது சி.பி.ஐ விசாரித்து வருகிறது. இந்நிலையில், இந்த கொலை வழக்கில் சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருக்கிறது, இரு வழக்குகளில், அதிகாரிகள் உள்பட 9 காவல் அதிகாரிகள் சம்மந்தப்பட்டிருப்பதாக குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

26 Sep 2020 12 PM

எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல் நல்லடக்கம்!

எஸ்.பி.பி
எஸ்.பி.பி

திருவள்ளூர் மாவட்டம், தாமரைப்பாக்கத்திலுள்ள பண்ணை வீட்டில் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடலுக்கு தமிழக அரசு சார்பில் காவல்துறை அணிவகுப்பு மரியாதை செய்யப்பட்டது. தொடர்ந்து 72 குண்டுகள் முழங்க எஸ்.பி.பி உடலுக்கு காவல்துறையினர் அரசு மரியாதை செலுத்தினர். அதன் பின்னர் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

26 Sep 2020 9 AM

மறைந்த பாடகர் எஸ்.பி.பி உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தக் காத்திருக்கும் பொதுமக்களும் ரசிகர்களும்!

இடம்: தாமரைப்பாக்கம்

மறைந்த பாடகர் எஸ்.பி.பி. உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த காத்திருக்கும் பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் இடம்: தாமரை பாக்கம் #RIPSPB #SPBalasubramaniam

Posted by Vikatan EMagazine on Friday, September 25, 2020
26 Sep 2020 9 AM

இந்தியாவில் கொரோனா நிலவரம்!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 85,362 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. இதனால் இந்தியாவில் மொத்த கொரோனா வைரஸ் பாதிப்பு என்பது 59,03,933 -ஆக அதிகரித்திருக்கிறது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 1,089 மரணங்கள் கொரோனா காரணமாக நிகழ்ந்திருக்கின்றன. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் பலி எண்ணிக்கை 93,379 -ஆக அதிகரித்திருக்கிறது. இதுவரை 48,49,585 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்திருக்கிறார்கள்.

கோவிட் தடுப்பூசி
கோவிட் தடுப்பூசி

நேற்று ஒரே நாளில் 13,41,535 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதாக ஐசிஎம்ஆர் தெரிவித்திருக்கிறது. நேற்று வரை இந்தியாவில் 7,02,69,975 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டிருக்கின்றன.

அடுத்த கட்டுரைக்கு