Published:Updated:

கங்கை- காவிரி இணைப்பு: ராமநாதபுரம் பிரசாரத்தில் மோடி உறுதி!

Vikatan Correspondent
கங்கை- காவிரி இணைப்பு: ராமநாதபுரம் பிரசாரத்தில்  மோடி உறுதி!
கங்கை- காவிரி இணைப்பு: ராமநாதபுரம் பிரசாரத்தில் மோடி உறுதி!

ராமநாதபுரம்: கங்கை- காவிரி இணைப்பு திட்டம் தொடங்கப்பட்டு விவசாயிகளின் பிரச்னை தீர்க்கப்படும் என்று ராமநாதபுரம் பிரசார கூட்டத்தில் பா.ஜ.க பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி உறுதி அளித்தார்.

கன்னியாகுமரியில் பிரசாரம்

பாரதிய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி கன்னியாகுமரி தொகுதியில் பிற்பகலில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, சுற்றுலாவை மேம்படுத்தினால் கன்னியாகுமரியில் பலரின் வாழ்க்கைத் தரம் உயரும் என்றும், சுற்றுலா மேம்பட்டால் குமரி இளைஞர்கள் வேலை தேடி வேறு இடங்களுக்குச் செல்ல மாட்டார்கள் என்றும் கூறினார்.

மக்களைப் பற்றி கவலைப்படாத அ.தி.மு.க, தி.மு.க கட்சிகளிடம் இருந்து தமிழகம் விடுபட வேண்டும் என்றும் நரேந்திர மோடி பிரசாரம் செய்தார்.
 

கங்கை- காவிரி இணைப்பு: ராமநாதபுரம் பிரசாரத்தில்  மோடி உறுதி!

முன்னதாக, தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து இன்று மதியம் ராமநாதபுரத்தில் பிரசாரம் மேற்கொண்டபோது இவ்வாறு பேசிய மோடி, அ.தி.மு.க, தி.மு.க. பிடியில் இருந்து தமிழக மக்கள் விடுபட வேண்டும் என்றும், தமிழக மக்களின் நலனில் அக்கறை காட்டுவதாக கூறியவர்கள் அதை செய்யவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.

தேர்தல் அறிவிப்பின்போது பாஜகவுக்கு சூறாவளியாக இருந்த ஆதரவு தற்போது சுனாமியாகியுள்ளது என்று கூறிய மோடி, நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் புதிய சரித்திரம் படைக்கும் என்றார்.

கங்கை- காவிரி இணைப்பு: ராமநாதபுரம் பிரசாரத்தில்  மோடி உறுதி!

சிறுபான்மையினருக்கு காங்கிரஸ் அரசு எதையும் செய்யவில்லை என்று குற்றம்சாட்டிய மோடி, தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி சின்னத்துடன் வீடுகளில் வாட்சுகள் விநியோகம் செய்து வருகிறது என்றும், ஏழைகளை பார்ப்பது என்பது காங்கிரசாருக்கு சுற்றுலா செல்வது போல் என புகார் கூறினார்.

கங்கை- காவிரி இணைப்பு: ராமநாதபுரம் பிரசாரத்தில்  மோடி உறுதி!

தமிழக மீனவர்களை காக்க பலவீனமான மத்திய அரசு தவறிவிட்டது என்று குற்றம்சாட்டிய நரேந்திர மோடி, மீன்வளம் எங்கு உள்ளது என்று கூறும் தொழில்நுட்பம் நாடு முழுவதும் கொண்டுவரப்படும் என்றும், சாட்டிலைட் தொழில்நுட்பம் மூலம் மீனவர்கள் தங்களை பாதுகாத்து கொள்ளலாம் என்றும் கூறினார்.

பா.ஜ.க வெற்றி பெற்றால் சிவகாசியில் பட்டாசு தொழிலை காக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்த மோடி, கங்கை- காவிரி இணைப்பு திட்டம் தொடங்கி விவசாயிகள் பிரச்னை தீர்க்கப்படும் என்றார்.

ஈரோட்டில் பிரசாரம்

ஈரோட்டில் இன்று காலையில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பேசினார்.

கங்கை- காவிரி இணைப்பு: ராமநாதபுரம் பிரசாரத்தில்  மோடி உறுதி!

அப்போது, தமிழகத்தில் மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்புத் தேவைகளுக்கு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அந்த பெண்தான் முட்டுக்கட்டையாக இருந்தார் என்றும், அவர் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்றும் மத்திய முன்னாள் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெயந்தி நடராஜனை, மறைமுகமாக தாக்கிப்பேசினார் மோடி.

நாட்டில் வேலையில்லா திண்டாட்டம், சுற்றுப்புறச்சூழல் பாதிப்புக்கு யார் பொறுப்பு? என்று கேள்வி எழுப்பிய நரேந்திர மோடி, தமிழகத்தை போல் குஜராத்தில் மின்வெட்டு இல்லை என்றார்.

இந்த தேர்தலில் கட்சிகள், வேட்பாளர்கள் போட்டியில்லை, மக்கள்தான் போட்டியிடுகின்றனர் என்று கூறிய மோடி, பா.ஜ.க வெற்றி பெற்றால் துணிகளின் உற்பத்தி மையமாக ஈரோடு மாறும் என்றார்.

படங்கள்: உ.பாண்டி