Published:Updated:

Tamil News Today: `மாணவி தற்கொலை விவகாரத்தில் மதம் தொடர்பான பரப்புரை எதுவும் இல்லை!' - பள்ளிக்கல்வித்துறை

தற்கொலை செய்துகொண்ட மாணவி படித்த பள்ளி
Live Update
தற்கொலை செய்துகொண்ட மாணவி படித்த பள்ளி

27-01-2022 இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

27 Jan 2022 6 PM

`மாணவி தற்கொலை விவகாரத்தில் மதம் தொடர்பான பரப்புரை எதுவும் இல்லை!' - பள்ளிக்கல்வித்துறை

தஞ்சையில் அரசு உதவி பெறும் பள்ளியில் படித்த அரியலூர் மாணவி தற்கொலை விவகாரம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மாணவியைப் பள்ளி நிர்வாகம் மதம் மாறச் சொல்லி வற்புறுத்தியதால்தான் அவர் தற்கொலை செய்துகொண்டார் என்று பாஜக, வலதுசாரி அமைப்புகள் குற்றம்சாட்டி இந்த விவகாரத்தை கையிலெடுத்துப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றன.

தஞ்சை மாணவி தற்கொலைச் சம்பவம்
தஞ்சை மாணவி தற்கொலைச் சம்பவம்

இந்த நிலையில், அரியலூர் மாணவி தற்கொலை விவகாரம் தொடர்பாக நடத்தப்பட்ட விரிவான விசாரணையில் மதம் தொடர்பான பரப்புரை எதுவும் இல்லை எனத் தமிழக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்திருக்கிறது. அந்தக் குறிப்பிட்ட பள்ளியில் மாணவர்களிடம் மதரீதியான பரப்புரைகளில் ஆசிரியர்களோ, தலைமை ஆசிரியரோ யாரும் ஈடுபடவில்லை என்று தஞ்சை மாவட்டக் கல்வி அலுவலர் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

27 Jan 2022 2 PM
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கடலூரில் பழைய கட்டடம் இடிந்து விழுந்து இரண்டு சிறுவர்கள் பலி!

கடலூர் அருகே எஸ்.புதூர் கிராமத்தில் தனியார் தொண்டு நிறுவனங்கள் சார்பில் இலங்கைத் தமிழர்கள் மறுவாழ்வுக்கு வீடு கட்டிக் கொடுக்கப்பட்டிருக்கிறது. கடந்த 2013-ம் ஆண்டு, அந்த வீடுகள் சரியில்லை என்று அதில் இலங்கை தமிழர்கள் குடியேற மறுத்துவிட்டனர்.

சிறுவன்
சிறுவன்

இந்த நிலையில், இன்று பாழடைந்திருந்த அந்த வீட்டுக்கு 17 வயது சிறுவர்கள் மூன்று பேர் சென்றனர். அப்போது, யாரும் எதிர்பாராதவிதமாக அந்தச் சிறுவர்கள்மீது திடீரென சுவர் இடிந்து விழுந்தது. அதில், வீரசேகரன், சுதீஷ் குமார் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். புன்வேஷ் என்ற சிறுவன் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism