Published:Updated:

கொரோனா சிகிச்சைக்காக சென்னையில் 350 படுக்கை வசதிகளுடன் சிறப்பு மருத்துவமனை! #NowAtVikatan

சிறப்பு மருத்துவமனை
சிறப்பு மருத்துவமனை

27.3.2020 |இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு!

27 Mar 2020 12 PM

தமிழகத்தில் மேலும் 6 பேருக்குக் கொரோனா!

தமிழகத்தில் மேலும் 6 பேருக்குக் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மதுரை, ஈரோடு, சென்னையைச் சேர்ந்த தலா 2 பேருக்குக் கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. இதனால் ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 29 லிருந்து 35 ஆக உயர்ந்துள்ளது. மதுரையில் கொரோனாவால் உயிரிழந்த நபரின் குடும்பத்தினர் 2 பேருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை அமைச்சர் விஜயபாஸ்கர் ட்விட்டரில் உறுதிப்படுத்தியுள்ளார். இதனால் மக்கள் மேலும் அச்சத்தில் மூழ்கியுள்ளனர்.

27 Mar 2020 7 PM

சென்னையில் 350 படுக்கை வசதிகளுடன் சிறப்பு மருத்துவமனை!

கொரோனா வைரஸ் சிகிச்சைக்காக சென்னையில் அரசு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் 350 படுக்கைகளோடு சிறப்பு பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் இன்று தொடங்கிவைத்து பார்வையிட்டனர்.

படங்கள் & வீடியோ - வி.ஸ்ரீனிவாசுலு

அடுத்த கட்டுரைக்கு