Published:Updated:

வேளாண் மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்! - அரசிதழில் வெளியிட்டது மத்திய அரசு #NowAtVikatan

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

27-09-2020 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு...!

27 Sep 2020 6 PM

தமிழகத்தில் கொரோனா நிலவரம்!

கொரோனா
கொரோனா

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 5,791 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தின் மொத்த கொரோனா பாதிப்பு 5,80,808 ஆக உயர்ந்திருக்கிறது. மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 80 பேர் கொரோனா காரணமாக உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 9,313- ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மேலும் 1,280 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் 4,511 பேருக்கு தொற்று பாதிப்பு பதிவாகி உள்ளது!

27 Sep 2020 6 PM

வேளாண் மசோதாக்களுக்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல்!

வேளாண் மசோதா
வேளாண் மசோதா

நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மூன்று வேளாண் மசோதாக்கள் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் நிறைவேறியது. இந்த நிலையில் தற்போது குடியரசுத் தலைவர் இந்த மூன்று வேளாண் மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளித்திருக்கிறார். குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து, மத்திய அரசு அரசிதழிலும் வெளியிட்டது. குடியரசுத் தலைவரின் ஒப்புதலை அடுத்து வேளாண் மசோதாக்கள் தற்போது சட்டமாகியுள்ளது.

27 Sep 2020 3 PM

எல். முருகன் கண்டனம்!

திருச்சியில் பெரியார் சிலைக்கு காவி சாயம் பூசப்பட்டு, காலணி மாலை போடப்பட்டு அவமதிக்கப்பட்ட சம்பவத்துக்கு பல அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இது தொடர்பாக விசாரணையும் நடைபெற்று வருகிறது.

வேளாண் மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்! -  அரசிதழில் வெளியிட்டது மத்திய அரசு #NowAtVikatan

இந்த நிலையில் தமிழக பா.ஜ.க தலைவர் எல். முருகன் இந்த விவகாரம் தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ``இந்த அநாகரிக செயல் யார் செய்திருந்தாலும் அவர்களை காவல்துறையினர் விரைவில் கைது செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். காவி புனிதமானது. அனைவரையும் ஆதரிக்கும் தியாகப் பண்பின் குணமே காவி. காவியை தவறான சிந்தனையோடு பயன்படுத்துவது பண்பல்ல” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

27 Sep 2020 10 AM

பாஜக தேசிய நிர்வாகிகள்: தமிழகத்தைச் சேர்ந்த யாருக்கும் இடம் இல்லை!

பாஜக தேசிய நிர்வாகிகள் அறிவிப்பு: தமிழகத்தைச் சேர்ந்த யாருக்கும் இடம் இல்லை! பாஜக தேசிய நிர்வாகிகளை அக்கட்சியின்...

Posted by Junior Vikatan on Saturday, September 26, 2020
27 Sep 2020 10 AM

இந்தியாவில் கொரோனா நிலவரம்!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 88,600 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. இதனால் இந்தியாவில் மொத்த கொரோனா வைரஸ் பாதிப்பு என்பது 59,92,533 -ஆக அதிகரித்திருக்கிறது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 1,124 மரணங்கள் கொரோனா காரணமாக நிகழ்ந்திருக்கின்றன. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் பலி எண்ணிக்கை 94,503 -ஆக அதிகரித்திருக்கிறது. இதுவரை 49,41,628 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்திருக்கிறார்கள்.

கோவிட்-19 பரிசோதனை
கோவிட்-19 பரிசோதனை

நேற்று ஒரே நாளில் 9,87,861 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதாக ஐசிஎம்ஆர் தெரிவித்திருக்கிறது. நேற்று வரை இந்தியாவில் 7,12,57,836 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டிருக்கின்றன.

27 Sep 2020 10 AM

பெரியார் சிலைக்கு காவி சாயம் பூசிய மர்ம நபர்கள்!

வேளாண் மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்! -  அரசிதழில் வெளியிட்டது மத்திய அரசு #NowAtVikatan

திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஒன்றியம், இனாம் குளத்தூர் ஊராட்சியிலுள்ள பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் உள்ள பெரியார் சிலைக்கு மர்ம நபர்கள் காவி சாயம் பூசியதோடு, அவமதிப்பும் செய்துள்ளனர். தற்போது அங்கு பாதுகாப்பு பணிக்கு போலீஸ் குவிக்கப்பட்டுள்ளனர். தமிழக அரசியல் கட்சிகள் இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

27 Sep 2020 9 AM

ஜஸ்வந்த் சிங் காலமானார்!

ஜஸ்வந்த் சிங்
ஜஸ்வந்த் சிங்

முன்னாள் மத்திய அமைச்சரும் பா.ஜ,க மூத்த தலைவருமான ஜஸ்வந்த் சிங் இன்று காலமானார். அவருக்கு வயது 82. கடந்த சில நாள்களாக உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டிருந்த இவர், டெல்லி ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இவர் வெளி்யுறவு, பாதுகாப்பு, நிதித்துறை ஆகிய மத்திய அமைச்சர் பொறுப்புகளை வகித்தவர். மேலும் தொடர்ந்து 30 ஆண்டுகளுக்கும் மேலாக நாடாளுமன்றத்தில் உறுப்பினராக இருந்தவர்ஜஸ்வந்த் சிங்.

முன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட பல அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது பதிவில், ``ஜஸ்வந்த் சிங், எங்கள் தேசத்திற்காக முதலில் ஒரு ராணுவ வீரராகவும் பின்னர் நீண்டகால அரசியல்வாதியாகவும் விடாமுயற்சியுடன் பணியாற்றினார். வாஜ்பாய் அரசாங்கத்தின் போது, அவர் முக்கியமான இலாகாக்களைக் கையாண்டார் மற்றும் நிதி, பாதுகாப்பு மற்றும் வெளி விவகாரங்களில் ஒரு வலுவான அடையாளத்தை பதிவு செய்தார்” என குறிப்பிட்டிருக்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு