Published:Updated:

`மருத்துவ சிகிச்சை; பேரறிவாளனின் பரோல் நீட்டிப்பு!’ - உச்ச நீதிமன்றம் #NowAtVikatan

பேரறிவாளன்
பேரறிவாளன்

27-11-2020 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

27 Nov 2020 11 AM

பேரறிவாளனின் பரோல் நீட்டிப்பு!

மருத்துவ சிகிச்சை பெற்றுவரும் பேரறிவாளனுக்கு மேலும் ஒரு வாரம் பரோல் வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

பேரறிவாளன்
பேரறிவாளன்

ராஜீவ் கொலையில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பேரறிவாளன், பல்வேறு உடல்நலக் குறைபாடுகளால் அவதிப்பட்டுவருகிறார். அதற்கு சிகிச்சை பெறுவதற்காக பேரறிவாளனுக்கு பரோல் வழங்கப்பட்டது. சிகிச்சை பெற்றுவருவதால், மேலும் 90 நாள்கள் பரோல் வழங்க வேண்டும் என பேரறிவாளன் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. இந்தநிலையில், அவருக்கு மேலும் ஒரு வாரம் பரோல் வழங்க தமிழக சிறைத்துறைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

அக்காள் மகள் திருமணம்; பிரபலங்களுடன் செல்ஃபி! - `பறை’ இசைத்துக் கலக்கிய பேரறிவாளன்
27 Nov 2020 11 AM

மருத்துவ மேற்படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு இந்த ஆண்டு இல்லை!

மருத்துவ மேற்படிப்புகளில் தொலைதூரப் பகுதிகளிலும், ஊரகப் பகுதிகளிலும் பணிபுரியும் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுவந்தது. இந்த இட ஒதுக்கீட்டை 2000-ம் ஆண்டு மருத்துவப் பட்ட மேற்படிப்பு விதிகளைக் காரணம் காட்டி மத்திய அரசு ரத்து செய்திருந்தது. இதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் `அரசு மருத்துவர்களுக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கலாம்’ என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து, அரசு மருத்துவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தனியார் மருத்துவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், மருத்துவ மேற்படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு இந்த ஆண்டு 50 சதவிகித இட ஒதுக்கீடு கிடையாது என உத்தரவிட்டிருக்கிறது.

கோவை:`நான்கரை மணி நேர அறுவை சிகிச்சை' - புலம்பெயர் தொழிலாளியைக் காப்பாற்றிய அரசு மருத்துவர்கள்
அடுத்த கட்டுரைக்கு