Published:Updated:

தனி விமானத்தில் சென்னை திரும்பிய ரஜினி! #NowAtVikatan

ரஜினி
ரஜினி

27-12-2020 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

27 Dec 2020 6 PM

தனி விமானத்தில் சென்னை திரும்பிய ரஜினி!

உயர் ரத்த அழுத்தம் காரணமாக ஹைதராபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் ரஜினிகாந்த், இரண்டு நாள் சிகிச்சைக்குப் பின்னர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதையடுத்து, அவர் ஹைதராபாத் ஹோட்டலில் மேலும் சில நாள்கள் தங்கியிருப்பார் என்று தகவல் வெளியானது.

ரஜினி
ரஜினி

இந்தநிலையில், சிகிச்சை முடிந்து ஹைதராபாத்திலிருந்து தனி விமானம் மூலம் நடிகர் ரஜினி சென்னை திரும்பினார். ஒரு வாரத்துக்கு முழு ஓய்வில் இருக்கும்படி அவருக்கு மருத்துவர்கள் அறிவுரை வழங்கியிருந்தனர்.

27 Dec 2020 4 PM

மருத்துவமனையிலிருந்து ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ்!

ஹைதராபாத் அப்போலோ மருத்துவமனையிலிருந்து நடிகர் ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

ரத்த அழுத்த மாறுபாடு சீராகி ரஜினியின் உடல்நிலை தேறியிருக்கிறது. மன அழுத்தத்தைத் தவிர்த்து மிகக் குறைந்தபட்ச பணிகளை மட்டும் ரஜினி மேற்கொள்ளவும், உடல்நிலையைக் கருத்தில் கொண்டு ஒரு வாரம் ஓய்வு எடுக்கவும் மருத்துவமனை அறிவுரை.

அறிக்கை
அறிக்கை
27 Dec 2020 12 PM

என் எதிரில் இருக்கும் உங்களில் ஒருவர்கூட முதல்வராகலாம்!

சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்ற அ.தி.மு.க தேர்தல் பரப்புரைத் தொடக்கக் கூட்டத்தில் அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ``இந்தியாவிலேயே தொண்டன் முதல்வராக இருக்கக்கூடிய ஒரே கட்சி அ.தி.மு.க-தான். நாளை என் எதிரில் அமர்ந்திருக்கும் உங்களில் ஒருவர்கூட முதல்வர் ஆகலாம்’’ என்று பேசினார்.

ஓ.பி.எஸ் - இ.பி.எஸ்
ஓ.பி.எஸ் - இ.பி.எஸ்

மேலும், ``பல அரசியல் கட்சியினர், எதிரிகள்கூட இன்று எம்.ஜி.ஆர் பெயரைத்தான் உச்சரித்துக்கொண்டிருக்கிறார்கள். அ.தி.மு.க-வை யாராலும் வீழ்த்த முடியாது’’ என்று குறிப்பிட்ட அவர், கடந்த முறை கிராமசபைக் கூட்டம் நடத்தி மக்களிடம் தி.மு.க-வினர் பெற்ற மனுக்கள் எங்கே... அவை குப்பைத் தொட்டிக்குப் போய்விட்டதாகக் குற்றம்சாட்டினார். மேலும், ``தி.மு.க தலைவர் ஸ்டாலின் சென்னை மேயராக இருந்தபோது மழைநீர் தேங்காமல் இருக்க என்ன செய்தார்?’’ என்றும் கேள்வி எழுப்பினார்.

27 Dec 2020 11 AM

சென்னையில் அ.தி.மு.க-வின் முதல் தேர்தல் பொதுக்கூட்டம்!

சென்னை ராயப்பேட்டையில் அ.தி.மு.க-வின் முதல் தேர்தல் பிரசாரக் கூட்டம் தொடங்கியது. கூட்டத்தில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டிருக்கிறார்கள்ர். பிரசாரக் கூட்டத்தின் மேடையில் 94 இருக்கைகள் போடப்பட்டிருக்கின்றன.

அ.தி.மு.க பொதுக்கூட்டம்
அ.தி.மு.க பொதுக்கூட்டம்

கூட்டத்தில் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், `தி.மு.க தலைவர் ஸ்டாலின் அல்ல; பிரசாந்த் கிஷோர்தான்’ என்றார். முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி பேசுகையில், `அ.தி.மு.க கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான்’’ என்று தெரிவித்தார்.

`கழற்றிவிடும் கட்சிகள்; தொகுதி மாறும் எடப்பாடி?' - அ.தி.மு.க-வில் அடுத்த அதகளம்!
27 Dec 2020 11 AM

ரஜினி டிஸ்சார்ஜ் குறித்து பிற்பகலில் முடிவு!

 ரஜினி
ரஜினி

ஹைதராபாத் அப்போலோ மருத்துவமனை வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``நடிகர் ரஜினிகாந்தின் ரத்த அழுத்தம் சீராக இருக்கிறது. அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், கவலைப்படும்படி எதுவும் இல்லை. இன்று பிற்பகல் அவரைப் பரிசோதனை செய்த பிறகு டிஸ்சார்ஜ் செய்வது குறித்து முடிவு எடுக்கப்படும்’’ என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ரஜினி உடல்நிலையில் முன்னேற்றம்; டிஸ்சார்ஜ் குறித்து மாலையில் முடிவு! ஹைதராபாத் மருத்துவமனை
அடுத்த கட்டுரைக்கு