Published:Updated:

குடியுரிமை சட்டத்துக்கு எதிராகத் தீர்மானம்?! - ஐரோப்பிய யூனியனுக்கு எதிராகக் கொதிக்கும் இந்தியா #CAA #NowAtVikatan

ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றம்
ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றம் ( Twitter )

27.1.2020 - இன்றைய முக்கிய நிகழ்ச்சிகளின் தொகுப்பு!

27 Jan 2020 8 AM

ஐரோப்பிய யூனியனுக்கு எதிராகக் கொதிக்கும் இந்தியா #CAA

மத்திய அரசு சமீபத்தில் கொண்டுவந்த குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டுவர எம்.பிக்கள் சிலர் திட்டமிட்டிருக்கிறார்கள். இதற்கு இந்தியா கடும் எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறது.

இந்தியா முழுவதும் என்.ஆர்.சி அமல்படுத்தப்பட்டால் குடியுரிமை எப்படி வழங்கப்படும்? #Walkthrough

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக எந்தவொரு முடிவுக்கும் வரும் முன்னர் தங்களின் கருத்துகளைக் கேட்க வேண்டும் எனவும், அந்தச் சட்டம் முழுக்க முழுக்க இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் எனவும் இந்தியா சார்பில் எதிர்ப்புப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. மேலும், அந்தச் சட்டம் எந்த மதத்தையும் சிறுமைப்படுத்துவது அல்ல என்றும் விளக்கமளிக்கப்பட்டிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு