Published:Updated:

38-ஐ தொட்ட பலி எண்ணிக்கை.. டெல்லி வன்முறையில் தொடரும் சோகம்! #NowAtVikatan

டெல்லி வன்முறை
டெல்லி வன்முறை

27-02-2020 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு...

27 Feb 2020 8 PM

தொடரும் சோகம்!

டெல்லி வன்முறையில் பலியானவர்களின் எண்ணிக்கை 38ஐ தொட்டுள்ளது. ஏற்கனவே 35 பேர் உயிரிழந்த நிலையில் சிகிச்சையில் இருந்த மேலும் 3 பேர் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். 34 பேர் GTB மருத்துவமனையிலும், 3 பேர் LNJP மருத்துவமனையிலும, ஒருவர் Jag Parvesh Chander மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். வன்முறை மேலும் ஏற்படாத வண்ணம் தற்போது கலவர பகுதிகளில் டெல்லி போலீஸ் பேரணி நடத்தி வருகின்றனர்.

27 Feb 2020 12 PM

இந்தியாவுக்கு மூன்றாவது வெற்றி!

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் மகளிர் டி20 போட்டியில் இன்றைய லீக் ஆட்டத்தில் இந்தியா - நியூஸிலாந்து அணிகள் மோதின. முதலில் ஆடிய இந்திய அணிக்கு நல்ல தொடக்கம் கிடைத்தும் நடுவரிசை வீராங்கனைகளின் சொதப்பல்களால் 133 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக ஷஃபாலி வெர்மா, 46 ரன்கள் குவித்தார்.

பின்னர், 134 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூஸிலாந்து அணிக்கு இந்திய அணி கடுமையான சவால் அளித்தது. இதனால் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்ததோடு, ரன்கள் சேர்க்கவும் சிரமப்பட்டது. இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 129 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் இந்திய அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இந்தத் தொடரில் விளையாடிய மூன்று போட்டிகளிலும் வெற்றிபெற்று இந்திய அணி ஏ க்ரூப்பில் டாப் பொசிஷனில் இருக்கிறது. இதனால் கிட்டத்தட்ட அரையிறுதி வாய்ப்பை இந்திய அணி உறுதி செய்துவிட்டது என்றே சொல்லலாம்!

27 Feb 2020 8 AM

தி.மு.க முன்னாள் அமைச்சர் கே.பி.பி.சாமி மரணம்!

தி.மு.க முன்னாள் அமைச்சர் கே.பி.பி.சாமி, உடல்நலக் குறைவால் மரணமடைந்தார். அவருக்கு வயது 58.

சூடுபிடிக்கும் மாநிலங்களவை தேர்தல்: அ.தி.மு.க. - தி.மு.க  வேட்பாளர்கள் யார்?
கே.பி.பி.சாமி
கே.பி.பி.சாமி

தி.மு.க ஆட்சிக் காலத்தில் மீன்வளத்துறை அமைச்சராக இருந்தவர், கே.பி.பி.சாமி. திருவொற்றியூர் எம்.எல்.ஏ-வான இவர், கடந்த சில நாள்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், திருவொற்றியூர் கே.வி.கே. குப்பம் அருகே உள்ள வீட்டில் இன்று அதிகாலை காலமானார்.

அடுத்த கட்டுரைக்கு