Published:Updated:

தமிழகத்தில் மழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம்

Vikatan Correspondent
தமிழகத்தில் மழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் மழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் மழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம்

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 அணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்து அரபிக் கடல் பகுதியில் நிலை கொண்டுள்ளது என்றும், காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வட கேரளா அருகே நிலை கொண்டுள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கேரளா, லட்சத்தீவு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ராமநாதபுரத்தில் 13 செ.மீட்டர் மழை பதிவாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.