Published:Updated:

Corona Live Updates: கொரோனாவால் பாதிக்கப்பட்ட 21வது எம்.எல்.ஏ! - நாகர்கோவில் சுரேஷ்ராஜனுக்கு சிகிச்சை

சுரேஷ் ராஜன்
சுரேஷ் ராஜன்

27.7.2020 | கொரோனா வைரஸ் தொடர்பான முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

27 Jul 2020 7 PM

நாகர்கோவில் எம்.எல்.ஏ சுரேஷ்ராஜனுக்கு கொரோனா!

நாகர்கோவில் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ சுரேஷ் ராஜனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

சுரேஷ் ராஜன்
சுரேஷ் ராஜன்

முன்னதாக, கிள்ளியூர் தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ் குமாருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இதனால், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட அமைச்சர்கள் உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 21ஆக உயர்ந்துள்ளது.

புதுச்சேரி: `எம்.எல்.ஏ-வுக்கு கொரோனா!’ - மரத்தடியில்  சட்டப்பேரவைக் கூட்டம்
27 Jul 2020 6 PM

தமிழகத்தில் 2.20 லட்சத்தைக் கடந்த பாதிப்பு!

தமிழகத்தில் இன்று மட்டும் 6,993 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,20,716-ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,471 பேர் குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,62,249 ஆக உயர்ந்தது. தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை 77 அதிகரித்த நிலையில், மொத்த எண்ணிக்கை 3,571-ஆக அதிகரித்துள்ளது.

Corona
Corona

சென்னையில் மேலும் 1,138 பேருக்குத் தொற்று!

சென்னையில் மட்டும் இன்று 1,138 பேருக்கு பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 94,695 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா: 6 கி.மீ-க்கு ரூ.9,200; ஆக்ஸிஜனை அகற்றிய ஆம்புலன்ஸ் ஊழியர்! - குழந்தைகளுக்கு நேர்ந்த அவலம்
27 Jul 2020 9 AM

இந்தியாவில் 14 லட்சத்தை கடந்த பாதிப்பு!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14,35,453 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் 24 மணி நேரத்தில் 49,931 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

இந்தியா -  கொரோனா வைரஸ்
இந்தியா - கொரோனா வைரஸ்

கொரோனா தொற்றால் 24 மணி நேரத்தில் மட்டும் 708 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 32,771 ஆக அதிகரித்திருக்கிறது. அதேபோல், தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 9,17,568 ஆகவும் உயர்ந்துள்ளது.

27 Jul 2020 9 AM

கொரோனா - உலக நிலவரம்!

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,64,18,867ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 1,00,47,304 ஆக அதிகரித்திருக்கிறது. 6,52,256 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா - உலகம்
கொரோனா - உலகம்

அதிகம் பாதிக்கப்பட்ட அமெரிக்காவில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 43,71,839 ஆக அதிகரித்திருக்கிறது. இதனால் 1,49,849 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு