Published:Updated:

குடியாத்தம் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ காத்தவராயன் காலமானார்! #NowAtVikatan

காத்தவராயன்
காத்தவராயன்

28-02-2020 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு...!

28 Feb 2020 10 AM

குடியாத்தம் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ காத்தவராயன் காலமானார்!

தி.மு.கவைச் சேர்ந்த திருவெற்றியூர் எம்.எல்.ஏ கே.பி.பி.சாமி நேற்று காலமானார். இந்த அதிர்ச்சியிலிருந்து மீளாத நிலையில் தி.மு.க-வைச் சேர்ந்த மற்றொரு எம்.எல்.ஏ-வான காத்தவராயனும் இன்று காலமானார் என்ற செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2019 மே மாதம் நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தலில் குடியாத்தம் தொகுதியில் போட்டியிட்டு இவர் வெற்றிபெற்றார். இதய அறுவை சிகிச்சைக்காக சென்னையிலுள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவரை தி.மு.க தலைவர் ஸ்டாலின் அடிக்கடி சென்று உடல் நலம் குறித்து விசாரித்துவந்தார். இந்நிலையில், தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று காலையில் உயிரிழந்தார். அடுத்தடுத்த நாள்களில் தொடர்ந்து இரண்டு எம்.எல்.ஏக்கள் இறந்துள்ளது, தி.மு.க-வினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சட்டமன்றப் பேரவையில் தி.மு.க உறுப்பினர்களின் எண்ணிக்கை 98-ஆகவும் குறைந்துள்ளது.

அடுத்த கட்டுரைக்கு