Published:Updated:

`தமிழகத்தில் 42 -ஆக அதிகரித்த எண்ணிக்கை!’ -அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் #Corona #NowAtVikatan

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

28.3.2020 |இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு!

28 Mar 2020 11 PM

அவசர கால பயணங்களுக்கு....!

`தமிழகத்தில் 42 -ஆக அதிகரித்த எண்ணிக்கை!’ -அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் #Corona #NowAtVikatan

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அவசர கால பயணங்களுக்காக தமிழக அரசு அனுமதி வழங்க முடிவு செய்துள்ளது. குடும்ப உறுப்பினர்களின் பிறப்பு இறப்பு மற்றும் அவசர மருத்துவ காரணங்களாக பயணம் செய்பவர்கள் மேற்கண்ட எண் மூலமாக அனுமதி பெற்று பயணம் மேற்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது!

28 Mar 2020 7 PM

தமிழகத்தில் 42 ஆக அதிகரித்த கொரோனா எண்ணிக்கை!

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 42 -ஆக அதிகரித்துள்ளது. சென்னை மேற்கு மாம்பலத்தை சேர்ந்த 25 வயது இளைஞருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

28 Mar 2020 6 PM

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 42 ஆக அதிகரித்துள்ளது. சென்னை மேற்கு மாம்பலத்தை சேர்ந்த 25 வயது இளைஞருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.தமிழகம் தற்போது 2-வது நிலையில் இருக்கிறது

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்ந்து பரவி வருகிறது. இந்நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, ``தமிழகத்தில் இதுவரை 41 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 10 மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் கொரோனா தொடர்பான சிகிச்சைப் பெற்று வருகின்றனர். தமிழகம் தற்போது இரண்டாவது நிலையில் இருக்கிறது. வீடு, வீடாக சென்று யாருக்காவது காய்ச்சல், இருமல் பிரச்னை இருக்கிறதா என கண்காணிக்கப்படும்.

தமிழக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ்
தமிழக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ்

காய்ச்சல், இருமல் இருந்தால் அவர்களை கண்டறிந்து மருத்துவப் பரிசோதனை செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. கொரோனா பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் குறித்தும் விசாரித்து வருகிறோம். கொரோனா அறிகுறிகள் அதிக நபருக்கு வந்தால் அவர்களை தனிமைப்படுத்த தேவையான வசதிகளையும் செய்தி வருகிறோம். மூன்றாவது நிலைக்கு செல்லாமல் இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தும் செய்யப்பட்டு வருகின்றன” என்று கூறியுள்ளார்.

28 Mar 2020 5 PM

`நிதி அளியுங்கள்....!’ - மோடி

நாடு முழுவதும் மக்கள் கொரோனா காரணமாக வீட்டிலே அடைந்து கிடக்கிறார்கள். கொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியா தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் பிரதமர் மோடி, நாட்டு மக்களிடம் கொரோனாவுக்கு எதிரான போருக்காக மக்களிடம் நிதி கேட்டுள்ளார்.

`தமிழகத்தில் 42 -ஆக அதிகரித்த எண்ணிக்கை!’ -அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் #Corona #NowAtVikatan

இது தொடர்பாக அவர், `கொரோனாவுக்கு எதிரான யுத்தத்தில் கலந்துகொண்டு நிதியளிக்கப் பலரும் விருப்பம் தெரிவித்துள்ளனர். உங்களின் நிதி ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்க உதவும். உங்களால் இயன்ற உதவியைத் தாருங்கள்’ எனக் கோரிக்கை வைத்திருக்கிறார்.

28 Mar 2020 12 PM

கொரோனாவுக்குக் கேரளாவில் முதல் பலி!

கேரளாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த முதியவர் உயிரிழந்துள்ளார். கொச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அந்த முதியவர் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டதாக கேரள அரசு அறிவித்துள்து. அம்மாநிலத்தில் 100க்கும் மேற்பட்டோர் கொரோனா காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் கேரளாவில்தான் முதன் முறையாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.

28 Mar 2020 11 AM

873-ஐ தொட்ட கொரோனா பாதிப்பு!

கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை இந்தியாவில் 873-ஐ தொட்டுள்ளது. இறந்தவர்களின் எண்ணிக்கையும் 19 ஆக மாறியுள்ளது. குறிப்பாக கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 149 பேருக்குக் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 150 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கடுத்த இடத்தில் கேரளா உள்ளது. தமிழகத்தில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 35 ஐ தாண்டியுள்ளது.

28 Mar 2020 10 AM

கமல் தனிமைப்படுத்தப்பட்டதாக நோட்டீஸ்!

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனின் ஆழ்வார்பேட்டை வீட்டில் அவர் உட்பட அவர் வீட்டில் உள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. முறையாக தகவல் தெரிவிக்காமல் நோட்டீஸ் ஒட்டப்பட்டதாக மக்கள் நீதி மய்யம் கட்சியினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் மாநகராட்சி நிர்வாகம் அதைத் தற்போது அகற்றியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு