Published:Updated:

தமிழகத்தில் இன்று 121 பேருக்கு கொரோனா... 121 பேரில் 103 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள்! #NowAtVikatan

கொரோனா
கொரோனா

28.4.2020 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

28 Apr 2020 6 PM

இன்று 121 பேருக்கு கொரோனா!

தமிழகத்தில் மேலும் 121 பேருக்கு கொரோனா பதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 121 பேரில் 103 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். இதன்மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2058 ஆக அதிகரித்துள்ளது.

28 Apr 2020 12 PM

`அகவிலைப்படி உயர்வு, ஈட்டிய விடுப்பு ஆகியவற்றை நிறுத்தி வைத்திருப்பது ஏற்புடையதல்ல’- டிடிவி

டிடிவி தினகரன்
டிடிவி தினகரன்

கொரோனா வைரஸ் காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலை கருத்தில் கொண்டு, அகவிலைப்படி உயர்வு, ஈட்டியவிடுப்பு ஆகியவற்றை நிறுத்தி வைத்து அரசு உத்தரவு பிறபித்தது. இது தொடர்பாக அமமும பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், ``நெருக்கடியான நேரத்தில் களத்தில் நின்று அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றிவரும் சுகாதாரம், உள்ளாட்சி, வருவாய், கூட்டுறவு துறை ஊழியர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் ஆகியோருக்கான அகவிலைப்படி உயர்வு, ஈட்டியவிடுப்பு ஆகியவற்றை நிறுத்தி வைத்திருப்பது ஏற்புடையதல்ல.

மேலும் இவர்களின் வருங்கால வைப்பு நிதிக்கு (P.F) வழங்கப்படும் வட்டியைக் குறைத்திருப்பதும் சரியானதல்ல. தங்கள் பிள்ளைகளின் கல்வி, திருமணம் போன்றவற்றிக்காக இந்தப்பணத்தை நம்பியிருக்கும் ஊழியர்கள் அரசின் முடிவால் பாதிக்கப்படுவார்கள்

தமிழக அரசு கஜானாவில் இருந்து தேவையற்ற முறையில் செல்லும் எத்தனையோ செலவீனங்களைக் கட்டுப்படுத்துவதை விட்டுவிட்டு, அரசு எந்திரத்திற்கு அச்சாணியாக இருப்பவர்கள் தலையிலேயே நிதி நெருக்கடியை சுமத்துவது எப்படி சரியாக இருக்க முடியும்?” எனக் கேள்வி எழுப்பினார்.

28 Apr 2020 8 AM

30 ஆயிரத்தை நெருங்கும் எண்ணிக்கை!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 29,435 ஆக அதிகரித்திருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. இந்தியாவில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கையும் 934 ஆக அதிகரித்து இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது. மேலும் 6,868 பேர் இந்தத் தொற்றிலிருந்து மீண்டு வந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

28 Apr 2020 7 AM

10 லட்சத்தைத் தாண்டிய பாதிப்பு!

அமெரிக்கா
அமெரிக்கா

உலகம் முழுவதும் கொரோனாவால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்ந்துதான் வருகிறது. கொரோனா வைரஸை நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து, ஒற்றுமையாக எதிர்த்தால்தான் இந்தப் போரில் வெல்ல முடியும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருக்கிறது. உலகம் முழுவதும் கொரோனாவால் 30 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் மட்டும் பாதிப்பு 10 லட்சத்தைத் தாண்டியுள்ளது. இதுவரை அமெரிக்காவில் 10,10,356 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கொரோனாவால் அந்நாட்டில் ஏற்பட்ட மரணங்கள் 56,797 ஆக இருக்கிறது. அமெரிக்காவில் தற்போது புதிதாகப் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை சற்று குறைந்திருப்பது நம்பிக்கை அளிக்கிறது. எனினும், தொடர்ச்சியாகக் குறைந்து கொரோனா இல்லாத நிலையை ஏற்படுத்த வேண்டும் என்பதே அனைவரது விருப்பமாக இருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு