Published:Updated:

Corona Live Updates: `3,940 பேருக்கு பாசிட்டிவ்!’ - தமிழகத்தில் 80,000-த்தைக் கடந்த மொத்த எண்ணிக்கை

Corona
Corona

28.6.2020 | கொரோனா வைரஸ் தொடர்பான முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

28 Jun 2020 6 PM

தமிழகத்தில் 80,000-த்தைக் கடந்த மொத்த எண்ணிக்கை!

தமிழகத்தில் இன்று மட்டும் 3,940 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 82,275 -ஆக உயர்ந்துள்ளது.

Corona test
Corona test
Representational Image

சென்னையில் மட்டும் இன்று 1,992 பேருக்கு பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 53,762 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,079 -ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,443 பேர் குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

28 Jun 2020 1 PM

புதுச்சேரி முதல்வர் அலுவலகம் மூடல்!

புதுச்சேரி
புதுச்சேரி

புதுச்சேரியில் முதல்வர் அலுவலக ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, முதல்வர் அலுவலகம் இரண்டு நாள்களுக்கு மூடப்பட்டு கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட இருக்கிறது. புதுச்சேரியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 648 ஆக இருக்கிறது. இதனால், 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

28 Jun 2020 1 PM

ஜூன் 29 முதல் ஜூலை 15 வரை சிறப்பு ரயில்கள் ரத்து!

ரயில்
ரயில்

தமிழக அரசின் கோரிகையை ஏற்று மாநிலத்துக்குள் இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் ஜூன் 29-ம் தேதி முதல் ஜூலை 15-ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாகத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதித்தோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அரசின் ரயில்வே துறைக்கு கோரிக்கை வைத்திருந்தது.

ரத்து செய்யப்பட்டுள்ள ரயில்கள்

தமிழகத்தில் திருச்சி-செங்கல்பட்டு-திருச்சி (வழி-விருதாச்சலம்), அரக்கோணம் - கோயம்புத்தூர் - அரக்கோணம், மதுரை - விழுப்புரம் - மதுரை, கோயம்புத்தூர் - காட்பாடி - கோயம்புத்தூர், கோயம்புத்தூர் - மயிலாடுதுறை - கோயம்புத்தூர் மற்றும் திருச்சி - நாகர்கோவில் - திருச்சி சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

28 Jun 2020 12 PM

சென்னை, மதுரை, தேனியில் முழு ஊரடங்கு!

சென்னை - முழு ஊரடங்கு
சென்னை - முழு ஊரடங்கு

சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் இன்று தளர்வுகள் அற்ற ஊரடங்கு அமலில் இருக்கிறது. இதனால், சென்னை உள்ளிட்ட முக்கிய இடங்களில் சாலைகள் வாகனப் போக்குவரத்தின்றி வெறிச்சோடின. அதேபோல், மதுரை, தேனியிலும் இன்று தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருக்கிறது.

28 Jun 2020 12 PM

கர்நாடகா அறிவித்த புதிய விதிமுறைகள்!

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

மற்ற மாநிலங்களில் இருந்து மாநிலத்துக்கு வருபவர்களுக்கு புதிய தனிமைப்படுத்தல் விதிமுறைகளை கர்நாடகா அறிவித்திருக்கிறது. மகாராஷ்டிராவில் இருந்து கர்நாடகாவுக்கு வருபவர்கள் 7 நாள்கள் தனிமைப்படுத்தல் முகாம்களிலும் 7 நாள்கள் வீடுகளிலும் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற இடங்களில் இருந்து வருபவர்கள் 14 நாள்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்படுவார்கள் எனக் கர்நாடகா அறிவித்திருக்கிறது.

28 Jun 2020 10 AM

ஒரு கோடியைத் தாண்டிய மொத்த பாதிப்பு!

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,00,75,115 ஆக உயர்ந்திருக்கிறது. தொற்று பாதிப்பில் இருந்து 54,53,247 பேர் குணமடைந்திருக்கிறார்கள். உலக அளவில் இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,00,626ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா:`1 கோடி பேர் பாதிப்பு; 5 லட்சம் பேர் பலி!’ - திணறும் அமெரிக்கா, பிரேசில், இந்தியா

உலக அளவில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவில் 25,96,537 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதேநேரம், இதனால் பலியானோர் எண்ணிக்கையும் 1,28,152 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், பிரேசிலில் கடந்த 24 மணிநேரத்தில் 46, 860 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், பாதிப்பின் மொத்த எண்ணிக்கை 12,80,000-த்தைத் தொட்டிருக்கிறது. ஒட்டுமொத்த பாதிப்பில் 25 சதவிகிதத் தொற்று அமெரிக்காவிலும் 12.85 சதவிகிதத் தொற்று பிரேசிலிலும் பதிவாகி இருக்கிறது.

கொரோனா
கொரோனா

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,08,953-லிருந்து 5,28,859 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் 24 மணி நேரத்தில் 19,906 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. கொரோனா தொற்றால் 24 மணி நேரத்தில் மட்டும் 418 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 15,685-லிருந்து 16,095 அதிகரித்திருக்கிறது. அதேபோல், தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3,09,713 ஆகவும் உயர்ந்துள்ளது. உலக பாதிப்பில் இந்தியாவின் பங்கு 5.30 சதவிகிதமாகும்.

அடுத்த கட்டுரைக்கு