Published:Updated:

சாத்தான்குளம் சம்பவம்; சிபிஐ விசாரணை செய்ய அரசு முடிவு! - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி #NowAtVikatan

பென்னிக்ஸ் - ஜெயராஜ்
பென்னிக்ஸ் - ஜெயராஜ்

28-6-2020 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு...!

28 Jun 2020 4 PM

சிபிஐ விசாரணை செய்ய அரசு முடிவு!

சாத்தான்குளம் தந்தை-மகன் உயிரிழந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருக்கிறார்.

மர்ம மரணம் அடைந்த ஜெயராஜ், பென்னிக்ஸ்
மர்ம மரணம் அடைந்த ஜெயராஜ், பென்னிக்ஸ்

சாத்தான்குளத்தில் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீஸ் தாக்குதலில் உயிரிழந்ததாக சர்ச்சை எழுந்திருக்கிறது. இந்த விவகாரத்தில் துணை ஆய்வாளர்கள், பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும் நிலையில், ஆய்வாளர் ஸ்ரீதர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார். இந்த விவகாரம் தேசிய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

இந்தநிலையில், சேலத்தில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சாத்தாகுளம் விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு பரிந்துரை செய்ய இருப்பதாகத் தெரிவித்தார். மேலும், அவர் கூறுகையில், ``சாத்தான்குளம் வியாபாரிகள் மரணம் தொடர்பாக சிபிஐ விசாரிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் அரசு தெரிவித்து, நீதிமன்ற அனுமதி பெற்றபிறகு சிபிஐ விசாரணை பரிந்துரை செய்யப்படும்’’ என்று தெரிவித்தார்.

அடுத்த கட்டுரைக்கு