Published:Updated:

பிரேமலதா விஜயகாந்துக்கு கொரோனா பாசிட்டிவ்! - தனியார் மருத்துவமனையில் அனுமதி #NowAtVikatan

பிரேமலதா விஜயகாந்த்
பிரேமலதா விஜயகாந்த்

28-09-2020 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு...!

28 Sep 2020 6 PM

தமிழகத்தில் கொரோனா நிலவரம்!

கொரோனா
கொரோனா

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 5,589 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தின் மொத்த கொரோனா பாதிப்பு 5,86,397 ஆக உயர்ந்திருக்கிறது. மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 70 பேர் கொரோனா காரணமாக உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 9383- ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மேலும் 1,283 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

28 Sep 2020 4 PM

பிரேமலதா விஜயகாந்துக்கும் கொரோனா!

பிரேமலதா விஜயகாந்த்
பிரேமலதா விஜயகாந்த்

தே.மு.தி.க பொதுச் செயலாளர் விஜயகாந்துக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் நிலையில், தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா விஜயகாந்துக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் தற்போது மணப்பாக்கம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

28 Sep 2020 11 AM

செயற்குழுக் கூட்டத்தில் 15 தீர்மானங்கள்!

அ.தி.மு.க-வின் செயற்குழுக் கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. விரைவில் சசிகலா விடுதலையாக இருக்கும் நிலையில், அவரை அ.தி.மு.க-வில் மீண்டும் சேர்ப்பது குறித்து இன்றைய கூட்டத்தில் பேசக் கூடாது என்று வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. செயற்குழுக் கூட்டத்தில் மொத்தம் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

அ.தி.மு.க வினர் ஒற்றுமையாக பணியாற்றி, மீண்டும் ஜெயலலிதா ஆட்சி மலர்ந்திட உழைப்போம், தமிழகத்திற்கு தேவையான நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும், தாய் மொமி தமிழ், உலகத்தோடு உறவாட ஆங்கிலம் என தமிழகத்தில் இருமொழிக் கொள்கைதான் பின்பற்றப்படும் , மத்திய அரசு நீட் தேர்வை கைவிட வேண்டும் உள்ளிட்ட 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

28 Sep 2020 10 AM

காஞ்சிபுரத்தில் ஸ்டாலின் போராட்டம்!

ஸ்டாலின்
ஸ்டாலின்

மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி தமிழகம் முழுவதும் தி.மு.க கூட்டணிக் கட்சிகள் சார்பில் போராட்டம் நடைபெறுகிறது. காஞ்சிபுரம் மாவட்டம், கீழம்பியில் நடைபெறும் போராட்டத்தில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் கலந்துகொண்டார். போராட்டத்துக்கு முன்பாக அங்கிருந்த வயலில் வேலை செய்துகொண்டிருந்த பெண்களுடன் வயலில் இறங்கி ஸ்டாலின் பேசினார்.

`சட்டப்பேரவையின் சூப்பர் ஸ்டார்... 8 மாதங்களில் ஆளுங்கட்சி!’ -தி.மு.க பொதுக்குழுவில் ஸ்டாலின் பேச்சு

போராட்டத்தில் பேசிய ஸ்டாலின்,``தன்னை விவசாயி என்று கூறிக்கொள்ளும் முதல்வர்தான், விவசாயிகளுக்கு எதிரான செயல்பாட்டை ஆதரிக்கிறார். விவசாயிகளுக்கு எதிரான சட்டத்துக்கு அ.தி.மு.க துணைபோயிருக்கிறது. ஏழைத்தாயின் மகன் என்று தன்னைக் கூறிக்கொள்ளும் பிரதமர் மோடியால்தான் புதிதாக ஏழைகள் உருவாகின்றனர். மத்திய அரசு கொண்டுவந்திருக்கும் வேளாண் சட்டங்களை இந்தியாவே எதிர்க்கிறது'' என்று பேசினார்.

திருச்சி வேளாண் சட்டத்தை எதிர்த்து திமுக கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்

Posted by Vikatan EMagazine on Sunday, September 27, 2020
28 Sep 2020 10 AM

போராட்டத்தில் டிராக்டர் எரிப்பு!

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. டெல்லி இந்தியா கேட் பகுதியில் பஞ்சாப் இளைஞர் காங்கிரஸார் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தின்போது டிராக்டர் ஒன்று தீவைத்து எரிக்கப்பட்டது.

`வேளாண் சட்டங்கள் மட்டுமே காரணம் அல்ல!’- பா.ஜ.க-வுடன் 24 வருட கூட்டணி, வெளியேறியது சிரோமணி அகாலிதளம்
அடுத்த கட்டுரைக்கு