Published:Updated:

`4 மாவட்டங்கள்; 22 இடங்கள்!’ - வருமானவரித் துறை அதிகாரிகள் திடீர் ரெய்டு #NowAtVikatan

ஐ.டி ரெய்டு!
ஐ.டி ரெய்டு!

28-10-2020 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு...!

28 Oct 2020 6 PM

சுப்பையா சண்முகம் நியமனம்,  கண்டனத்திற்குரியது! -ஸ்டாலின்

ஸ்டாலின்
ஸ்டாலின்

``மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகக்குழுவில் நாடாளுமன்ற உறுப்பினர்களைப் புறக்கணித்துவிட்டு, பெண்ணினத்தையே அவமதித்த சுப்பையா சண்முகம் என்ற நபரை நியமித்திருப்பது கண்டனத்திற்குரியது" என்றும் ``மருத்துவர் சுப்பையா சண்முகத்தை நீக்கி விட்டு, தமிழக எம்.பி.க்களுக்கு நிர்வாகக்குழுவில் இடமளிக்க வேண்டும் என்று முதலமைச்சர் பழனிசாமி அவர்கள் உடனடியாக பிரதமருக்கு கடிதம் எழுதி அழுத்தம் கொடுக்க வேண்டும்” என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருக்கிறார்.

28 Oct 2020 2 PM

22 இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் திடீர் ரெய்டு!

தமிழகத்தில் சென்னை, ஈரோடு, திருப்பூர் மற்றும் கோவை ஆகிய நான்கு மாவட்டங்களில் 22 இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் திடீர் ரெய்டு நடத்தி வருகிறார்கள். கோவை மாநகர் மேற்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் பையா கவுண்டர் வீட்டிலும் அதிகாரிகள் ரெய்டு நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த திடீர் ரெய்டு காரணமாக பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது!

28 Oct 2020 10 AM

உயிருக்கு ஆபத்து - இயக்குநர் சீனு ராமசாமி

தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், முதல்வர் தனக்கு உதவ வேண்டும் எனவும் இயக்குநர் சீனு ராமசாமி ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்.

இயக்குநர் சீனு ராமசாமி
இயக்குநர் சீனு ராமசாமி

`என் உயிருக்கு ஆபத்து இருப்பதாக உணர்கிறேன். முதல்வர் அய்யா உதவ வேண்டும். அவசரம்’ என சீனு ராமசாமி ட்விட்டரில் பதிவிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படமான `800’ படத்தில் விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது என சீனு ராமசாமி சமீபத்தில் வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Vikatan
அடுத்த கட்டுரைக்கு