Election bannerElection banner
Published:Updated:

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் தாயார் உடல்நலக் குறைவால் மரணம்! #NowAtVikatan

ஏ.ஆர்.ரஹ்மான் தாயார்
ஏ.ஆர்.ரஹ்மான் தாயார்

28-12-2020 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

28 Dec 2020 1 PM

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் தாயார் மரணம்!

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் தாயார் கரீமா பேகம் உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார்.

ஏ.ஆர்.ரஹ்மான் தாயார்
ஏ.ஆர்.ரஹ்மான் தாயார்

ஆஸ்கர் விருதுகள் வழங்கப்படுவதற்கு முன், `எப்படி உணர்கிறீர்கள்?’ என ஏ.ஆர்.ரஹ்மானிடம் கேட்டபோது, ``எனக்கொரு அன்னை இருக்கின்றாள்" என்றார். அதாவது, `நான் இந்த விருதை வென்றாலும் அல்லது வெல்ல முடியாமல் போய்விட்டாலும் என் அன்னையின் அன்பு மாறப்போவது இல்லை. அது போதும் எனக்கு’’ என்று ரஹ்மான் கூறியிருந்தார்.

28 Dec 2020 12 PM

இளையராஜா வருகை ரத்து!

சென்னை பிரசாத் ஸ்டியோ தரப்புக்கும், இசையமைப்பாளர் இளையராஜாவுக்கும் இடையே நிலவிவந்த பிரச்னை, கடந்த வாரம் இறுதிக்கட்டத்தை எட்டியது. இளையராஜா வழக்கை வாபஸ் பெற்றால் அவரை ஸ்டூடியோவுக்குள் அனுமதிப்போம் என பிரசாத் ஸ்டூடியோ தரப்பு நீதிமன்றத்தில் தெரிவிக்க, இளையராஜாவும் வழக்கை வாபஸ் பெற்றார். தொடர்ந்து உயர் நீதிமன்றம், இரு தரப்பினரும் கலந்து பேசி, குறிப்பிட்ட நாளில் காலை முதல் மாலை வரை இளையராஜா பிரசாத் ஸ்டூடியோவில் இருக்க அனுமதி வழங்கியது.

உயர் நீதிமன்ற அனுமதியைத் தொடர்ந்து பிரசாத் ஸ்டூடியோவிலிருந்து இசைக்கருவிகளை எடுத்துச் செல்லவும், தியானம் செய்யவும் இளையராஜா இன்று அங்கு செல்வார் எனக் கூறப்பட்டது. இந்தச் சூழலில், இளையராஜா தரப்பினர் வந்தபோது அறையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. தனது அறையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை அறிந்து இளையராஜா வருத்தமடைந்திருக்கிறார் எனவும் மன உளைச்சல் காரணமாக இன்றைய வருகை ரத்து செய்யப்படுவதாகவும் இளையராஜா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பூட்டு உடைக்கப்பட்டது தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து இளையராஜா முடிவெடுப்பார் எனவும் கூறப்படுகிறது.

இளையராஜா தரப்பு வழக்கறிஞர் செய்தியாளர் சந்திப்பு!

28 Dec 2020 11 AM

தமிழகத்தின் 38-வது மாவட்டம் - மயிலாடுதுறை உதயம்!

தமிழகத்தின் 38-வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் உதயமானது. அந்த மாவட்டத்தின் நிர்வாகப் பணிகளை சென்னையிலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார். இதன் மூலம், அம்மாவட்ட மக்களின் நீண்டநாள் கோரிக்கை நிறைவேறியது.

மயிலாடுதுறை
மயிலாடுதுறை

நாகப்பட்டினம் மாவட்டத்தின் நான்கு வருவாய் வட்டங்களை உள்ளடக்கிய புதிய மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்கப்பட்டது. இதற்கான அரசாணை கடந்த ஏப்ரல் 7-ம் தேதி வெளியிடப்பட்ட நிலையில், தற்போது நிர்வாகப் பணிகள் தொடங்கப்பட்டு அதிகாரபூர்வமாக புதிய மாவட்டமாக உருவாகியிருக்கிறது.

`மாம்பழங்களின் ராணி’ - மண் மணக்கும் மயிலாடுதுறை பாதிரி மாம்பழம்!
28 Dec 2020 11 AM

முதல்வர் - பா.ஜ.க தலைவர் இன்று சந்திப்பு..!

எல்.முருகன்
எல்.முருகன்

தமிழகத்தில் தேர்தல் திருவிழா தொடங்கிவிட்டது. கட்சிகள் தற்போதே பரபர பிரசாரத்தில் ஈடுபட்டுவருகின்றன. அ.தி.மு.க கூட்டணியில் பல்வேறு சர்ச்சைகள் தொடர்ந்து நிலவுகின்றன. குறிப்பாக முதல்வர் வேட்பாளர் குறித்த சர்ச்சைகள், கூட்டணிக் கட்சிகளுக்கு இடம் முதலியவை தொடர் விவாதப் பொருளாக இருக்கும் இந்தச் சூழலில் இன்று மதியம் 1 மணிக்கு முதல்வர் பழனிசாமியை சந்தித்துப் பேசுகிறார் தமிழக பா.ஜ.க தலைவர் முருகன். இந்தக் கூட்டத்தில் கூட்டணி நிலவரம் தொடர்பாக விவாதிக்கப்படலாம் எனத் தெரிகிறது. பரபரப்பான அரசியல் கட்டத்தில் இந்தச் சந்திப்பு நிகழவிருப்பது குறிப்பிடத்தக்கது.

28 Dec 2020 11 AM

உருமாறிய கொரோனா : முதல்வர் ஆலோசனை!

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

தமிழகத்தில் உருமாறிய கொரோனாவைத் தடுப்பது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட ஆட்சியர்களுடனான ஆலோசனைக் கூட்டம் தொடங்கி நடைபெற்றுவருகிறது. ஆட்சியர்களுடனான ஆலோசனைக்குப் பின்னர் மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் ஆலோசிக்கவிருக்கிறார். புதிய தளர்வுகள் வழங்கலாமா அல்லது கட்டுப்பாடுகளை அதிகரிக்க வேண்டுமா என்பது குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படும்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு