Published:Updated:

`காயம் எதுவும் இல்லை!' - விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த் பேட்டி #NowAtVikatan

Man vs Wild Rajini
Man vs Wild Rajini

28.1.2020 - இன்றைய முக்கிய நிகழ்ச்சிகளின் தொகுப்பு!

28 Jan 2020 8 AM

குரூப் - 4 தேர்வு முறைகேடு! மேலும் ஒருவர் கைது

குரூப் - 4 தேர்வு முறைகேடு தொடர்பாக தலைமறைவாக இருந்த சிவராஜ் என்பவரை பண்ருட்டி பேருந்து நிலையத்தில் போலீஸார் கைது செய்திருக்கிறார்கள்.

சிவராஜ்
சிவராஜ்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட குரூப் 4 தேர்வில் நடந்த முறைகேடுகள் குறித்து சி.பி.சி.ஐ.டி போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். இதுவரை நடத்தப்பட்ட விசாரணை அடிப்படையில் சென்னை டி.என்.பி.எஸ்.சி அலுவலகத்தில் வேலை பார்த்த வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ஓம்காந்தன், ஆவடியைச் சேர்ந்த தரகர் வெங்கட்ராமன், கல்வித்துறை அலுவலகத்தில் பணியாற்றும் ரமேஷ், எரிசக்தித்துறையில் பணியாற்றிய திருக்குமரன், தேர்வு எழுதிய திருவல்லிக்கேணியைச் சேர்ந்த நிதிஷ்குமார் மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த திருவேல்முருகன், கடலூர் பண்ருட்டியைச் சேர்ந்த ராஜசேகர், ஆவடியைச் சேர்ந்த காலேஷா, தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பாலசுந்தர் ராஜ் உள்ளிட்ட 12 பேரை சி.பி.சி.ஐ.டி போலீஸார் கைது செய்துள்ளனர்.

28 Jan 2020 11 AM

பெட்ரோல் குண்டு வீச முயன்ற 4 பேர் கைது

பெட்ரோல் குண்டு வீசியவர்கள்
பெட்ரோல் குண்டு வீசியவர்கள்

சென்னை மயிலாப்பூரில் குடியிருப்பவர் துக்ளக் பத்திரிகை ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி. குடியரசுதினத்தன்று இவரின் வீட்டிற்கு பைக்கில் வந்த மர்மநபர்கள் பெட்ரோல் குண்டு வீச முயன்றனர். இதுதொடர்பான புகாரின்பேரில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீஸார், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த, ஐசிஎஃப் பகுதியைச் சேர்ந்த ஜனா, ராயப்பேட்டை பகுதியைச் சேர்ந்த சசி, தமிழ் (எ) செல்லக்கண்ணா, பாபு உள்ளிட்ட 4 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

28 Jan 2020 12 PM

சிபிசிஐடி விசாரித்தால் உண்மை வெளியில் வராது!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட குரூப் 4 தேர்வில் நடந்த முறைகேடுகள் குறித்து சி.பி.சி.ஐ.டி போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். இதுவரை நடத்தப்பட்ட விசாரணை அடிப்படையில் 9 பேரை சி.பி.சி.ஐ.டி போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில், தேர்வு எழுதிய வகையில் முறைகேடு குற்றச்சாட்டில் சிக்கிய 99 பேரும் போலீஸாரின் சந்தேக வளையத்தில் உள்ளனர். இந்நிலையில் டிஎன் பிஎஸ்சி குரூப்-4 முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முகமது ரஸ்வி என்பவர் மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் "சிபிசிஐடி விசாரித்தால் உண்மை வெளியில் வராது என்பதால் சிபிஐக்கு விசாரணையை மாற்ற வேண்டும்" என கோரிக்கை விடுத்துள்ளார்.

28 Jan 2020 1 PM

ஆளுநருக்கு நினைவூட்டல் கடிதம் அனுப்பிய பேரறிவாளன்

தன்னை விடுதலை செய்யக் கோரி கடந்த 2015ம் ஆண்டு டிசம்பர் 30ம் தேதி பேரறிவாளன் தமிழக அரசுக்கு மனு அளித்திருந்தார். பேரறிவாளனின் ஒப்புதல் வாக்குமூலத்தை தான் முழுமையாக பதிவு செய்யத் தவறிவிட்டதாகவும் ராஜீவ் கொலை சதி குறித்து தனக்கு முன்கூட்டியே ஏதும் தெரியாது என்று பேரறிவாளன் சொன்ன வரிகளை பதிவுசெய்யவில்லை என விசாரணை அதிகாரி தியாகராஜன் ஐபிஎஸ் உச்ச நீதிமன்றத்தில் அபிடவிட் தாக்கல் செய்திருந்தார்.

அக்காள் மகள் திருமணம்; பிரபலங்களுடன் செல்ஃபி! - `பறை’ இசைத்துக் கலக்கிய பேரறிவாளன்

இதுதொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் பேரறிவாளன் மனு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தமிழக அரசு 2 வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என கடந்த 21ம் தேதி உத்தரவிட்டிருந்தது. இந்தநிலையில், உச்ச நீதிமன்ற உத்தரவை சுட்டிக்காட்டி, தமிழக ஆளுநருக்கு பேரறிவாளன் நினைவூட்டல் கடிதம் ஒன்றை அனுப்பியிருக்கிறார்.

28 Jan 2020 2 PM

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் தை தெப்ப உற்சவத்தின் கொடியேற்ற நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

படங்கள்: என்.ஜி.மணிகண்டன்

28 Jan 2020 5 PM

அயனாவரம் சிறுமி பாலியல் வழக்கில் 1ம் தேதி தீர்ப்பு!

`காயம் எதுவும் இல்லை!' - விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த் பேட்டி #NowAtVikatan

சென்னை அயனாவரத்தில் உள்ள, அடுக்குமாடிக் குடியிருப்பில், மாற்றுத்திறனாளி சிறுமியை ஐந்து மாதமாக அடுக்குமாடி குடியிருப்பின் வளாகத்திலேயும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் வைத்து பாலியல் கொடுமை செய்த வழக்கில், 17 பேர் கைது செய்யப்பட்டனர். சிறுமியின் தாய் அளித்த புகாரின் அடிப்படையில், 17 பேரின் மீதும் போக்ஸோ உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் குற்றவாளிகள் அனைவரும் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாள்கள் நீதிமன்றக் காவல் வழங்கப்பட்டதால், சிறையில் அடைக்கபட்டனர். புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளை பாதிக்கப்பட்ட சிறுமி அடையாளம் காட்டியதையடுத்து, 17 பேரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தப்பட்டது. போலீஸ் காவல் முடிவடைந்ததையடுத்து அவர்கள் மீண்டும் மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் 7 சாட்சிகளும், அரசு தரப்பில் 36 சாட்சிகளும் விசாரிக்கப்பட்டன. இரு தரப்பிலும் 43 சாட்சிகளும் விசாரிக்கப்பட்டு 120 ஆவணங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன. சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கடந்த 2018 ஜூலையில் 17 பேர் கைது செய்யப்பட்டனர். போக்சோ சட்டத்தின்கீழ் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மகளிர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. இவ்வழக்கின் வாதப் பிரதிவாதங்கள் கடந்த மாதம் முடிவடைந்த நிலையில், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட நிலையில்வரும் 1ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட 17 பேரில் ஒருவர் இறந்து விட்டதால் 16 பேர் மீதான குற்றச்சாட்டில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

28 Jan 2020 6 PM

குரூப் 4 தேர்வு முறைகேடு!

`காயம் எதுவும் இல்லை!' - விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த் பேட்டி #NowAtVikatan

குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பாக இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா சேந்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த விக்கி என்ற விக்னேஷ் வயது 25, கடலூர் மாவட்டம் பண்ருட்டி தாலுகா தனலட்சுமி நகரைச் சேர்ந்த சிவராஜ் வயது 31 ஆகியோர் இடைத்தரகர்கள் மூலம் தலா 7,50,000 ஆயிரம் கொடுத்து முறைகேடு செய்து தேர்ச்சி பெற்றதாக கூறி இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குரூப் 4 தரவரிசை பட்டியல் வெளியான போது ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை மற்றும் ராமேஸ்வரம் மையங்களில் தேர்வு எழுதியவர்கள் அதிக அளவில் 100 இடங்களில் வந்த முறைகேடு குறித்த புகாரின் பேரில் சிபிசிஐடி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளது. இதுவரை முறைகேடு செய்ததாக 12 பேரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

28 Jan 2020 8 PM

ஸ்டாலின் மீது அவதூறு வழக்கு!

தி.மு.க தலைவர் ஸ்டாலினுக்கு எதிராக தமிழக அரசு சார்பில் இரு அவதூறு வழக்குகள் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் நல்லாட்சிக்கான விருதை மத்திய அரசு தமிழக அரசுக்கு கொடுத்திருந்தது. `இந்த விருதை கொடுத்தவர்களை முதலில் அடிக்கணும்' என்று மத்திய அரசின் விருது குறித்து தி.மு.க தலைவர் ஸ்டாலின் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். இதேபோல் கடந்த டிசம்பரில் குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக முகநூலில் ஸ்டாலின் கருத்து கூறி இருந்தார். இந்த நிலையில் இந்த இரு விவகாரங்கள் தொடர்பாக ஸ்டாலின் மீது அவதூறு வழக்கு பதியப்பட்டுள்ளது.

28 Jan 2020 9 PM

அரையிறுதிக்கு தகுதிபெற்ற இந்திய அணி!

U19 உலகக்கோப்பையில் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த காலுறுதியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 233 ரன்கள் எடுத்தது. இதன்பின் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 159 ரன்கள் எடுப்பதற்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் 74 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது. இந்திய அணி தரப்பில் இரண்டு பேர் அரைசதம் அடித்தனர். அதேபோல் பௌலிங்கில் இந்திய அணி வீரர் கார்த்திக் தியாகி 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

28 Jan 2020 9 PM

ரஜினிக்கு காயம்?

மேன் Vs வைல்டு (Man vs Wild) நிகழ்ச்சியின் சிறப்பு எபிஸோடுகளில், பல்வேறு நாட்டுத் தலைவர்கள் மற்றும் நட்சத்திரங்கள் பங்கேற்பது வழக்கம். சென்ற ஆண்டு, பிரதமர் மோடியும் அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டது மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அந்த வரிசையில், தற்போது நடிகர் ரஜினிகாந்த், பியர் கிரில்ஸுடன் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.

கர்நாடகாவின் பந்திப்பூர் புலிகள் சரணாலயத்தில் இதற்கான படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்தப் படப்பிடிப்பில் கலந்துகொண்ட போது ரஜினி காந்துக்கு சிறிய காயம் ஏற்பட்டதாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. கூடுதல் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

28 Jan 2020 10 PM

முள் குத்தியது..காயம் எதுவும் இல்லை!

`Man Vs Wild ஷூட்டிங் போது முள் குத்திவிட்டது. மற்றபடி அடி ஏதும் படவில்லை' என சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். முன்னதாக இந்நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பில் நடிகர் ரஜினிக்கு காயம் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியானது.

அடுத்த கட்டுரைக்கு