Published:Updated:

Corona Live Updates: தமிழகத்தில் 2.27 லட்சத்தைக் கடந்த பாதிப்பு! - புதிதாக 6,972 பேருக்குத் தொற்று

corona
corona

28.7.2020 | கொரோனா வைரஸ் தொடர்பான முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

28 Jul 2020 6 PM

தமிழகத்தில் 2.27 லட்சத்தைக் கடந்த பாதிப்பு!

தமிழகத்தில் இன்று மட்டும் 6,972 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,27,688-ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,707 பேர் குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,66,956 ஆக உயர்ந்தது. தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை 88 அதிகரித்த நிலையில், மொத்த எண்ணிக்கை 3,659-ஆக அதிகரித்துள்ளது.

Corona
Corona
Unsplash

சென்னையில் மேலும் 1,107 பேருக்குத் தொற்று!

சென்னையில் மட்டும் இன்று 1,107 பேருக்கு பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 96,438 ஆக அதிகரித்துள்ளது.

28 Jul 2020 6 PM

சென்னை மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமிக்கு கொரோனா பாதிப்பு!

சென்னை ஆட்சியர் சீதாலட்சுமி
சென்னை ஆட்சியர் சீதாலட்சுமி

சென்னை மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் கிண்டி கிங் இன்ஸ்டிடியூட் கொரோனா சிறப்பு மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஏற்கெனவே, காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையா மற்றும் கோவை ஆட்சியர் இராசாமணி ஆகியோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது.

WHO: `கொரோனா வைரஸ் உலகத்தையே மாற்றிவிட்டது!’ - டெட்ரோஸ்
28 Jul 2020 9 AM

இந்தியாவில் 15 லட்சத்தை நெருங்கிய பாதிப்பு!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14,83,157 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் 24 மணி நேரத்தில் 47,704 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

கொரோனா
கொரோனா

கொரோனா தொற்றால் 24 மணி நேரத்தில் மட்டும் 654 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 33,425 ஆக அதிகரித்திருக்கிறது. அதேபோல், தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 9,52,744 ஆகவும் உயர்ந்துள்ளது.

அடுத்த கட்டுரைக்கு