Published:Updated:

விஜய் சேதுபதியின் அன்பு முத்தத்துடன் மாஸ்டர் படக்குழு சொன்ன அப்டேட்... வைரல் போட்டோ! #NowAtVikatan

வைரல் போட்டோ
வைரல் போட்டோ

29-02-2020 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு....!

29 Feb 2020 10 PM

மாஸ்டர் படக்குழு சொன்ன அப்டேட்...

நடிகர் விஜய்க்கு விஜய் சேதுபதி முத்தமிடும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. மாஸ்டர் திரைப்படத்தின் கலை இயக்குநர் சதீஷ் குமார் பிறந்தநாள் சூட்டிங் ஸ்பாட்டிலேயே கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. இதில் நடிகர் விஜய் விஜய் சேதுபதி இயக்குனர் லோகேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது நடிகர் விஜய் சேதுபதி கலை இயக்குநர் சதீஷ் குமாருக்கு வாழ்த்துச் சொல்லி கட்டிப்பிடித்து கன்னத்தில் முத்தமிட அருகிலிருந்த விஜய் தனக்கும் ஒரு முத்தம் வேண்டும் என்று விஜய் சேதுபதியிடம் கேட்டதாகவும் அவருக்கு விஜய் சேதுபதி அன்பு முத்தமிட்டார் என்றும் தகவல் வெளியாகியிருந்தது. இத்தகவல் தீயாகப் பரவ இந்தப் புகைப்படம் எப்போது வெளிவரும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக்காத்திருந்தனர். இந்நிலையில் தற்போது அந்த முத்தப் புகைப்படத்தை படக்குழு வெளியிட்டு கூடவே அப்டேட் ஒன்றையும் கொடுத்துள்ளது. அது விஜய் மற்றும் விஜய்சேதுபதி தொடர்பான காட்சிகளின் படப்பிடிப்பு முடிவடைந்திருப்பது தான். இந்த அப்டேட்டும் விஜய் சேதுபதியின் புகைப்படமும் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.

29 Feb 2020 10 PM

தலிபான் - அமெரிக்கா அமைதி ஒப்பந்தம்!

விஜய் சேதுபதியின் அன்பு முத்தத்துடன் மாஸ்டர் படக்குழு சொன்ன அப்டேட்... வைரல் போட்டோ! #NowAtVikatan

ஆப்கானிஸ்தானில் சண்டையை நிறுத்த தலிபான் அமைப்புடன் அமெரிக்கா அமைதி ஒப்பந்தம் செய்துள்ளது. கத்தார் நாட்டின் தோஹாவில் தலிபான் அமைப்பு - அமெரிக்கா இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது.

29 Feb 2020 5 PM

ரூ.400 கோடி வருவாய் கண்டுபிடிப்பு!

சென்னை மாதவரம் அருகே இயங்கிவந்த ஜெயின் மெட்டல் நிறுவனத்தின் கடந்த 4 நாட்களாக நடந்து வந்த வருமான வரித்துறை சோதனை முடிவுக்கு வந்திருக்கிறது. சோதனையின் முடிவில் கணக்கில் காட்டாத ரூ.400 கோடி வருவாய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

தனிமென்பொருள் மூலம் வருமான வரித்துறைக்கு தெரியாமல் வருவாய் மறைக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. மேலும் பல்வேறு ஆவணங்களும், அதிகளவிலான காசோலைகளை சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதுதவிர கணக்கில் காட்டத 1 கோடி ரூபாய் பணத்தை பறிமுதல் செய்துள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

29 Feb 2020 5 PM

மாதவரம் ரசாயன கிடங்கில் பெரும் தீ விபத்து!

மாதவரம் ரவுண்டானா பகுதியில் ரசாயன கிடங்கில் திடீரென பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ கொளுந்துவிட்டு எரிந்துவருகிறது. 7 தீயணைப்பு வாகனங்களில் சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயைஅணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் 5 மெட்ரோ லாரிகள் மூலமாகவும் தீயை அணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. தீவிபத்தால் அதிகளவில் கரும்புகை வெளியேறி வருவதால் கண்எரிச்சல் ஏற்பட்டுள்ளதாக குடியிருப்புவாசிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

மாதவரம் ரவுண்டானா பகுதியில் ரசாயன கிடங்கில் திடீரென பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ கொளுந்துவிட்டு எரிந்துவருகிறது....

Posted by Vikatan EMagazine on Saturday, February 29, 2020

மாதவரம் ரவுண்டானா பகுதியில் ரசாயன கிடங்கில் திடீரென பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ கொளுந்துவிட்டு எரிந்துவருகிறது....

Posted by Vikatan EMagazine on Saturday, February 29, 2020
29 Feb 2020 9 AM

இந்தியா பாகிஸ்தான் அணிகள் விளையாடும்!

ஆசிய கிரிக்கெட் அணிகள் மோதும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் செப்டம்பர் மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. சுழற்சி முறையில் இந்த முறை தொடரை பாகிஸ்தான் தான் நடத்த வேண்டும். எனினும் பாகிஸ்தானில் விளையாடுவதற்கு பாதுகாப்பு காரணங்களால் இந்தியா சம்மதம் தெரிவிக்கவில்லை. இதனால் இந்த விவகாரத்தில் குழப்பம் நிலவி வந்தது. இந்நிலையில் நேற்று கொல்கத்தாவில் இது தொடர்பாக பேசிய பிசிசிஐ தலைவர் கங்குலி, ``இந்த முறை ஆசிய கோப்பை துபாயில் நடைபெறும். இதில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் விளையாடும்" என்றார். பின்னர் அவர், துபாயில் மார்ச் மாதம் 3 -ம் தேதி நடைபெற உள்ள ஆசிய கோப்பை தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக புறப்பட்டுச் சென்றார்.

29 Feb 2020 7 AM

`ப்ரித்வி ஷா அதிரடி..!'

இந்தியா நியூஸிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டியானது கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி இந்திய அணியை முதலில் பேட் செய்ய பணித்தது. இந்திய அணியில் அஷ்வினுக்குப் பதிலாக ஜடேஜாவும், இஷாந்த் ஷர்மவுக்கு பதிலாக உமேஷ் யாதவும் சேர்க்கப்பட்டிருந்தனர். ஈரமான அவுட்ஃபீல்டு காரணமாக ஆட்டம் சற்று தாமதமாகத் தொடங்கியது. இந்திய அணிக்குத் தொடக்க ஆட்டக்காரர்களாக ப்ரித்வி ஷா மற்றும் மயங்க் அகர்வால் களமிறங்கினர். ப்ரித்வி வழக்கம் போல் அதிரடியாக விளையாடினார், ஒருநாள் போட்டி போல் ஆட்டம் சென்றுகொண்டிருக்க மயங்க் அகர்வால் போல்ட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய புஜாரா ப்ரித்வியுடன் ஜோடி சேர்ந்தார். ப்ரித்வி அதிரடியாக ஆட, வழக்கம் போல் புஜாரா நிதானத்தைக் கடைப்பிடித்தார், அரைசதம் அடித்த ப்ரித்வி ஷா ஜேமிசன் பந்தில் ஆட்டமிழந்தார். அவர் 64 பந்துகளில் 54 ரன்கள் எடுத்தார். இதில் 8 பவுண்டரிகளும் ஒரு சிக்ஸரும் அடக்கம். முதல் நாளின் உணவு இடைவேளை வரையில் இந்திய அணி 23 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 85 ரன்கள் எடுத்துள்ளது. கோலி, புஜாரா தற்போது களத்தில் உள்ளனர்!

அடுத்த கட்டுரைக்கு