Published:Updated:

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் அரங்கநாயகம் காலமானார் #NowAtVikatan

அரங்கநாயகம்
அரங்கநாயகம்

29-04-2021 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

29 Apr 2021 7 PM

அ.தி.மு.க   முன்னாள் அமைச்சர் அரங்கநாயகம் காலமானார்

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா அமைச்சரவையில், கல்வி அமைச்சராக இடம்பெற்ற அரங்கநாயகம் (90) இன்று காலமானார். கிண்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல் நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். தொண்டமுத்தூர் தொகுதியில் இருந்து 2 முறையும் கோவை மேற்குத் தொகுதியில் இருந்து 2 முறையும் சட்டமன்றத்துக்கு தேர்வானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அரங்கநாயகம்
அரங்கநாயகம்
29 Apr 2021 9 AM

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம்..!

இந்தியாவில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்துவருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் மேலும் புதிதாக 3,79,257 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. இதன் காரணமாக, இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு 1,83,76,524 என்ற எண்ணிக்கையை எட்டியிருக்கிறது.

கொரோனா தடுப்பூசி
கொரோனா தடுப்பூசி

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 3,645. இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பு காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 2,04,832-ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வந்தவர்களின் எண்ணிக்கை 1,50,86,878 -ஆக இருக்கிறது. தற்போது மருத்துவமனைகளில் 30,84,814 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள். ஒரே நாளில் 2,69,507 பேர் பாதிப்பிலிருந்து மீண்டு, வீடு திரும்பியிருக்கிறார்கள்.

இந்தியாவில் இதுவரை 15,00,20,648 பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது.

29 Apr 2021 9 AM

கொரோனா பாதிப்புகள் அதிகமுள்ள மாவட்டங்களில் கூடுதல் கட்டுப்பாடுகள்?!

தலைமைச் செயலகம்
தலைமைச் செயலகம்

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகமுள்ள மாவட்டங்களில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது தொடர்பாக தலைமைச் செயலாளர் இன்று ஆலோசனை நடத்தவிருக்கிறார். நேற்றைய தினம், தலைமைச் செயலாளர் ஆளுநரைச் சந்தித்து ஆலோசனை நடத்தியது குறிப்பிடதக்கது.

தமிழகத்தைப் பொறுத்தவரை சென்னை, செங்கல்பட்டு, கோவை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா தொற்றுப் பரவல் அதிகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு