Published:Updated:

Unlock 3.0: திரையரங்குகள், மெட்ரோ ரயில் சேவைக்குத் தடை! - மூன்றாம் கட்ட தளர்வுகள் அறிவிப்பு #NowAtVikatan

மத்திய அரசு
மத்திய அரசு

29.7.20202 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

29 Jul 2020 8 PM

மூன்றாம் கட்ட தளர்வுகள் அறிவிப்பு!

அன்லாக் 3.0 என்ற பெயரில் ஊரடங்கின் மூன்றாம் கட்ட தளர்வுகளை மத்திய அரசு அறிவித்தது.

அதன்படி, பள்ளி, கல்லூரிகளைத் திறப்பதற்கான தடை ஆகஸ்ட் 31ம் வரை நீடிக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. மேலும், திரையரங்கும்கள், மெட்ரோ ரயில் சேவைகளுக்கான தடையும் நீட்டிக்கப்பட்டிருக்கிறது. விமான சேவையைப் பொறுத்தவரை, உள்நாட்டில் குறைந்த அளவில் மட்டுமே விமானங்களை இயக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. சர்வதேச விமான சேவைக்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், வெளிநாடு வாழ் இந்தியர்களை அழைத்துவரும் பணி தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கு
கொரோனா ஊரடங்கு

அதேபோல், நாடு முழுவதும் இரவு நேரங்களில் வெளியே வர விதிக்கப்பட்டிருந்த தடை, வரும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் நீக்கப்படுகிறது. கொரோனா பாதிப்பு சூழலை கருத்தில் கொண்டு மாநில அரசுகள் முடிவு எடுத்துக்கொள்ளலாம் என்றும் மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது. ஆகஸ்ட் 5ம் தேதி முதல் யோகா மையங்கள், உடற்பயிற்சிக் கூடங்களைத் திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. கொரோனா கட்டுப்பாட்டுப் பகுதிகளில் கடுமையான கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு வரும் ஆகஸ்ட் 31ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தமிழகம், புதுவையில் 120 நாள்களைக் கடந்த ஊரடங்கு! எப்படி இருந்தது? #VikatanClicks
29 Jul 2020 2 PM

இந்தியா வந்தது ரஃபேல்:

இந்தியா, பிரான்ஸ் நாட்டின் டசால்ட் விமான நிறுவனம் இடையே 2016-ம் ஆண்டு, 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்க ஒப்பந்தம் கையெழுத்தானது. ஒப்பந்தத்தின்படி இந்த வருடம், மே மாதம் வரவிருந்த ரஃபேல் விமானங்கள், கொரோனா ஊரடங்கால் தாமதமானது. இதனிடையே முதல்கட்டமாக பிரான்ஸ் நாட்டில் இருந்து அதிநவீன 5 ரஃபேல் போர் விமானங்கள், நேற்று முந்தினம் பிரான்சில் இருந்து இந்தியாவுக்குப் புறப்பட்டன.

இந்திய வான் எல்லையில் ரஃபேல்!
இந்திய வான் எல்லையில் ரஃபேல்!

இந்திய விமானிகளே இயக்கிக்கொண்டு இந்தியா வருகிறார்கள். ரஃபேல் போர் விமானங்கள் ஹரியானாவின் அம்பாலாவில் உள்ள இந்திய விமானப்படை தளத்தில் ஒப்படைக்கப்படுகிறது. இதன் காரணமாக அம்பாலாவில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தப் பகுதியில் சுமார் 3 கிலோ மீட்டர் சுற்றளவில் ட்ரோன் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்திய வான் எல்லைக்குள் வரும்போது, இந்தியாவில் சுகோய் ரக போர் விமானங்கள் ரஃபேல் விமானங்களை வரவேற்றது குறிப்பிடத்தக்கது.

29 Jul 2020 10 AM

மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை!

வரும் 31-ம் தேதியுடன் ஊரடங்கு நிறைவடையும் நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார். நாளை 30-ம் தேதி மருத்துவ நிபுணர் குழுவிடமும் கருத்துகளைக் கேட்க உள்ளார். அப்போது, கூடுதல் தளர்வுகள் வழங்குவது குறித்து ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது.

 முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

மேலும், கொரோனா தடுப்புப் பணியைத் தீவிரப்படுத்துவது தொடர்பாக மருத்துவக்குழு பரிந்துரை வழங்கும் என்றும் இந்த ஆலோசனைக் கூட்டங்களுக்குப் பிறகு, தமிழகத்தில் செய்யப்பட்டுள்ள பொதுப் போக்குவரத்து தொடர்பாக முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. மீண்டும் மண்டல வாரியாகப் பொது போக்குவரத்து தொடங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

29 Jul 2020 10 AM

அரசிதழில் வெளியீடு!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லம் போயஸ் கார்டனில் உள்ளது. இந்த இல்லம் ஜெயலலிதா நினைவிடமாக மாற்றப்பட உள்ளதாக அறிவித்த தமிழக அரசு, அதை அரசுடைமையாக்கியது. இந்நிலையில் வேதா இல்லம் அரசுடைமையாக்கியது தொடர்பாக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இதை அரசுடைமையாக்கும் வகையில் ஏற்கெனவே நீதிமன்றத்தில் இழப்பீடு தொகை செலுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வேதா இல்லம்
வேதா இல்லம்

இந்நிலையில் வேதா நிலைய இல்லத்தில் 4 கிலோ தங்கம், 601 கிலோ வெள்ளி, 38 ஏசி, 556 பர்னிச்சர், 11 டிவி, 10 பிரிட்ஜ் உள்ளிட்ட 32,721 பொருள்களின் விபரமும் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு