Election bannerElection banner
Published:Updated:

தனி யூ-டியூப் சேனல் - விஜய் மக்கள் இயக்கம் முடிவு #NowAtVikatan

விஜய் மக்கள் இயக்கம் - யூடியூப் சேனல்
விஜய் மக்கள் இயக்கம் - யூடியூப் சேனல்

29-11-2020 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

29 Nov 2020 1 PM

தனி யூடியூப் சேனல்! விஜய் மக்கள் இயக்கம் முடிவு

விஜய் மக்கள் இயக்கம் - யூடியூப் சேனல்
விஜய் மக்கள் இயக்கம் - யூடியூப் சேனல்

`விஜய் மக்கள் இயக்கம்’ என்ற பெயரில் யூ-டியூபில் சேனல் தொடங்கப்படவிருப்பதாக அதன் அகில இந்தியப் பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்த் அறிவித்திருக்கிறார். விஜய்யின் முடிவுகள் அனைத்தும் இனி அதில்தான் வெளியாகும் எனவும், விஜய் மக்கள் இயக்கம் செய்யும் நற்பணிகளையும் வெளியிடத் திட்டமிடப்பட்டிருப்பதாகவும் அவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

`எஸ்.ஏ.சி-க்கு செக்; விஜய்-யின் மெசேஜ்!’ - மக்கள் இயக்கத்தின் திடீர் ஆலோசனைக் கூட்டம் ஏன்?
29 Nov 2020 9 AM

ரஜினி நாளை ஆலோசனை!

ரஜினி
ரஜினி

ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் சென்னையில் ரஜினி நாளை ஆலோசனை நடத்தவிருப்பது குறிப்பிடத்தக்கது. கோடம்பாக்கம் ராகவேந்திரா மண்டபத்தில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில், மக்கள் மன்றத்தின் முக்கியப் பொறுப்பாளர்கள் கலந்துகொள்வார்கள் என்று தெரிகிறது. அரசியல் பிரவேசம் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து இந்தக் கூட்டத்தில் மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ரஜினி ஆலோசனை நடத்தவிருப்பதாகக் கூறப்படுகிறது.

29 Nov 2020 9 AM

விழுப்புரத்தில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் ஆலோசனை!

விழுப்புரத்தில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது.

மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் நடிகர் விஜய்
மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் நடிகர் விஜய்

விஜய் மக்கள் இயக்கத்தின் அகில இந்தியப் பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்துக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள், இளைஞரணி நிர்வாகிகள் என முக்கியப் பொறுப்பாளர்களுக்கு அழைப்புவிடுக்கப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே பனையூர் அலுவலகத்தில் இயக்கப் பொறுப்பாளர்களுடன் விஜய் ஆலோசனை நடத்திய நிலையில், இன்று இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறவிருக்கிறது. நடிகர் விஜய் பெயரில் அரசியல் கட்சி பதிவு செய்யப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது. ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் சென்னையில் ரஜினி நாளை ஆலோசனை நடத்தவிருப்பது குறிப்பிடத்தக்கது.

'தைப் பொங்கலுக்குப் பிறகு  தலைவரின் பிளான்'... பொடிவைத்துப் பேசும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள்!
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு