Election bannerElection banner
Published:Updated:

`தமிழகத்தில் ஒருவருக்கு உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பு!’ - சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் #NowAtVikatan

ராதாகிருஷ்ணன் ஆய்வு
ராதாகிருஷ்ணன் ஆய்வு ( File Pic )

29-12-2020 | இன்றைய முக்கியச் செய்திகளின் தொகுப்பு..!

29 Dec 2020 10 AM

தமிழகத்தில் ஒருவருக்கு உருமாறிய கொரோனா

பிரிட்டனில் உருமாறிய வைரஸின் பரவலால் கடும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இந்தநிலையில், பிரிட்டனிலிருந்து இந்தியா திரும்பியவர்களில் ஆறு பேருக்கு உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியானதாக மத்திய அரசு இன்று அறிவித்தது.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்
Representational Image

இந்தச் சூழலில் தற்போது சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், ``பிரிட்டனிலிருந்து தமிழகம் வந்தவர்களில் 17 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது. அவர்களில் ஒருவருக்கு உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டிருக்கிறது. அந்த நபருக்கு தனி அறையில் சிகிச்சை வழங்கப்பட்டுவருகிறது. அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுவருகிறது” என்றார்.

29 Dec 2020 9 AM

ஆறு பேருக்கு உருமாறிய கொரோனா பாதிப்பு!

பிரிட்டனில், உருமாறிய வைரஸின் பரவலால் கடும் ஊரடங்கு உத்தரவு பிறப்புக்கப்பட்டிருக்கிறது. பல நாடுகள் பிரிட்டனிலிருந்து விமானம் மற்றும் கப்பல் போக்குவரத்தைத் தற்காலிகமாக நிறுத்தியுள்ளன. இந்தியாவிலும் பிரிட்டன் விமானங்களுக்குத் தடை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், சமீபகாலத்தில் பிரிட்டனிலிருந்து இந்தியா வந்தவர்களைச் சோதனை செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவந்தன.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

பிரிட்டனிலிருந்து இந்தியா வந்தவர்களில் யாருக்காவது கொரோனா பாசிட்டிவ் எனக் கண்டுபிடிக்கப்பட்டால், அவர்களின் சளி மாதிரி, புனேவில் இருக்கும் ஆய்வகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டு, அங்கு உருமாறிய கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறதா என்று ஆய்வு மேற்கொண்டனர். இந்தநிலையில், பிரிட்டனிலிருந்து இந்தியா திரும்பியவர்களில் ஆறு பேருக்கு உருமாறிய கொரோனா பாதிப்பு உறுதியானது என்றும், அவர்கள் ஆறு பேரும் தனித்தனி அறைகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர் என்றும் மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. மேலும், கடந்த நவம்பர் மாதம், 25-ம் தேதி முதல் டிசம்பர் 23-ம் தேதி வரை பிரிட்டனிலிருந்து இந்தியா திரும்பிய 33,000 பேருக்குச் சோதனை நடத்தப்பட்டது என்றும், அவர்களில், 114 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், ஆறு பேருக்கு உருமாறிய கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருப்ப்பதாக மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு