Published:Updated:

Corona Live Updates: தமிழகத்தில் 2.34 லட்சத்தை கடந்த பாதிப்பு! - புதிதாக 6,426 பேருக்குத் தொற்று

Corona
Corona ( Unsplash )

29.7.2020 | கொரோனா வைரஸ் தொடர்பான முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

29 Jul 2020 6 PM

தமிழகத்தில் 2.34 லட்சத்தை கடந்த பாதிப்பு!

தமிழகத்தில் இன்று மட்டும் 6,426 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,34,114 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,927 பேர் குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,72,883 ஆக உயர்ந்தது. தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை 82 அதிகரித்த நிலையில், மொத்த எண்ணிக்கை 3,741 ஆக அதிகரித்துள்ளது.

corona
corona

சென்னையில் மேலும் 1,117 பேருக்குத் தொற்று!

சென்னையில் மட்டும் இன்று 1,117 பேருக்கு பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 97,575 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா : `இது முதல் அலைதான்; இன்னும் பெரிதாக வரப்போகிறது!’ - WHO எச்சரிக்கை
29 Jul 2020 5 PM

இந்தியாவிலே அதிக பரிசோதனை!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர், ``கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள் அனைவருக்கும் பாராட்டுகள். நியாய விலைக் கடைகளில் அத்தியாவசிய பொருள்கள் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டது. ஏழை எளிய மக்களுக்கு விலையில்லா முகக்கவசம், மாநகராட்சி நகராட்சி பேரூராட்சிகளில் முதற்கட்டமாக வழங்கப்பட்டிருக்கிறது” என்றார்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

தொடர்ந்து பேசியவர், ``தமிழக அரசு மேற்கொள்ளும் தொடர்ச்சியான நடவடிக்கை காரணத்தால் கொரோனா இறப்பு சதவிகிதம் குறைந்திருக்கிறது. சென்னையில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதனால் தலைநகரில் கொரோனா பாதிப்பு குறைந்திருக்கிறது. சென்னையில் மட்டும் 70 நடமாடும் மருத்துவமனையின் மூலம் பரிசோதனைகள் செய்யப்படுகின்றன.

காய்ச்சல் முகாம்களால் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவிலே அதிக பரிசோதனைகள் தமிழகத்தில்தான் செய்யப்படுகின்றன. அரசு சொல்லும் வழிமுறைகளைப் பின்பற்றினால் இயல்பு நிலைக்கு நிச்சயம் திரும்ப முடியும். அதனால் அதைப் பின்பற்ற வேண்டுமென வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

29 Jul 2020 10 AM

இந்தியாவில் 15 லட்சத்தை கடந்த பாதிப்பு!

கொரோனா
கொரோனா

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15.31 லட்சமாக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 9.08 லட்சம் பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். 5,09,447 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

அடுத்த கட்டுரைக்கு