Published:Updated:

புதிய பகுதி! - 1: 2K Kids

2K Kids
பிரீமியம் ஸ்டோரி
News
2K Kids

கட்டுரைகள், பேட்டிகள், அனுபவங்கள், புகைப்படங்கள், கார்ட்டூன்கள், மீம்கள் என அனைத்துக்கும் வெல்கம்.

ளமையின் சிந்தனையும் வேகமும் எப்போதும் ஆச்சர்யமளிக்கக் கூடியவை. கூடவே, உற்சாகப்படுத்தப்பட வேண்டியவை. இதழியலில் விருப்பம்கொண்ட கல்லூரி மாணவிகளைத் தட்டிக்கொடுக்கத்தான் இந்த `2கே கிட்ஸ்' பக்கங்கள். கேர்ள்ஸ்... இந்த எட்டு பக்கங்களிலும் என்னென்ன இடம் பெறலாம் என நீங்களே யோசித்து, செயல்படுத்தி, எழுதி, எடிட் செய்து என்று உருவாக்கலாம். ஆம்... நீங்களேதான்!

கட்டுரைகள், பேட்டிகள், அனுபவங்கள், புகைப்படங்கள், கார்ட்டூன்கள், மீம்கள் என அனைத்துக்கும் வெல்கம். வீடியோவில் ஆர்வமும் தேர்ச்சியும் உள்ளவர்கள், அந்தக் களத்திலும் கலக்க கைகொடுக்கிறோம். உங்கள் மீடியா பயணத்தின் முதல் அடியை, அவள் விகடனிலிருந்து ஆரம்பிக்க வாழ்த்துகள். இனி ஒவ்வோர் இதழிலும் 2கே கிட்ஸ் படைக்கு எட்டு பக்கங்கள் காத்திருக்கின்றன.

இதழியலில் ஆர்வமுள்ள கல்லூரி மாணவிகள், ஆர்ஜே மற்றும் வீஜே என கல்லூரி மேடையில் கலக்கிக்கொண்டிருப்பவர்கள் ஒரு டீம் அமைத்து, இதில் பங்குபெற அன்புடன் அழைக்கிறோம். உங்களை பற்றிய தகவல்களை avalvikatan@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பிவைக்கவும். எடிட்டோரியலிலிருந்து அழைப்பு வரும்!

`2கே கிட்ஸ்' பக்கங்களை ஆரம்பிக்கலாங்ளா!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
புதிய பகுதி! - 1: 2K Kids
புதிய பகுதி! - 1: 2K Kids

இந்த இதழின் `2கே கிட்ஸ்'...

சென்னை கிறிஸ்துவ கல்லூரி இதழியல் துறை மாணவர்கள்

1) ஸ்ரீநிதி கணேசன்

2) பா.ர.கோபிகா ஸ்ரீ

3) சாய் சஹானா.அ.மு

4) மைத்ரேயி.ர

5) சுபஸ்ரீ.பா

6) கீர்த்தனா.அ

7) மேரி சாலினி.வே

8) ஸ்ரீ லோகநாதன் வேல்முருகன்