லைஃப்ஸ்டைல்
தொடர்கள்
தன்னம்பிக்கை
Published:Updated:

2K kids: லாக்டௌன் முடிஞ்சு காலேஜ் வந்தோம் டும் டும் டும் டும்!

2K kids
பிரீமியம் ஸ்டோரி
News
2K kids

ஹரிதா.வெ

நிலாவுக்குப் போறது, செவ்வாய்க்குப் போறதெல்லாம் இருக்கட்டும். லாக்டௌன் முடிஞ்சு காலேஜுக்கு போன எங்களோட அனுபவம் எப்படி இருந்ததுனு நீங்களும் தெரிஞ்சுக்க வேண்டாமா?!

கோவிட்-19 குட்டியூண்டு வைரஸ், 10 மாசமா நம்மள வீட்டுல அடைச்சிடுச்சு. பொதுவா எல்லார்கிட்டயும், உங்க வாழ்க்கையோட வசந்தகாலம் எதுனு கேட்டா, பெரும்பாலானவங்க காலேஜ் டேஸ்னுதான் சொல்லுவாங்க. ஆனா, எங்களோட அந்த மூணு, நாலு வருஷ வசந்தத்துல, ஒரு வருஷத்தை கொரோனா பறிச்சுக்கிட்டது நியாயமாரே?! காலேஜ், கிளாஸ், கல்சுரல்ஸ், ஃபிரெண்ட்ஸோட ஹேங் அவுட்னு என்ஜாய் பண்ணிட்டு இருந்த எங்களை, ஆன்லைன் கிளாஸ், ம்யூட், அன்மியூட்னு வேற ஆப்ஷனே இல்லாம உக்கார வெச்சிடுச்சு.

ஒவ்வொரு மாசமும் லாக் டௌனை நீட்டிச்சுட்டே வந்தப்போ, எங்களோட காலேஜ் லைஃப் கொரோனாலேயே முடிவுக்கு வந்துடுமோனு பயந்தோம். ஒருவழியா கொரோனா தாக்கம் குறைந்து, காலேஜ் ஓப்பன் பண்ணினப்போ, போன சந்தோஷமெல்லாம் திரும்பி வந்துச்சு. நீலாம்பரி தன்னோட கொலுசை தேடியெடுத்துப் போட்டுக்கிட்டு, அடைஞ்சு கிடந்த ரூமை விட்டு வெளிய வந்த மாதிரி, ஐடி கார்டை தேடியெடுத்துப் போட்டுக்கிட்டு மிடுக்கா காலேஜுக்குக் கிளம்பினோம்.

ரொம்ப காலம் கழிச்சு நல்லா டிரஸ் பண்ணிட்டு வாசலுக்கு வந்து ‘பை மம்மி’னு சொன்னா, அம்மா மாஸ்க், சானிட்டைஸர், கிளவுஸ், ஹாட் வாட்டர்னு ஒரு மூட்டையே கட்டிக்கொடுத்து, ‘பத்திரமா போயிட்டு வா’னு தமிழ் சினிமா ஏர்போர்ட் சீன் மாதிரி பை சொன்னாங்க.

காலேஜ்குள்ள காலடி வெச்ச நொடி... ‘ஞாபகம் வருதே ஞாபகம் வருதே’னு கேம்பஸ் எல்லாம் பிஜிஎம். அப்படியே நடையை ஸ்லோவாக்கி, மரம், ஸ்டோன் பென்ச், செடியை எல்லாம் ஃபீலிங்கோட பார்த்துட்டுப்போன மனசு, கிளாஸ்ரூம் பக்கத்துல வந்ததும் ஃபிரெண்ட்ஸை பார்க்கப் போற சந்தோஷத்துல கியர் மாத்தி ஓடுச்சு.

2K kids: லாக்டௌன் முடிஞ்சு காலேஜ் வந்தோம் டும் டும் டும் டும்!

வகுப்பறையில எல்லாரும் மாஸ்க்கோட உட்காந்திருக்க, எந்த மாஸ்குக்குள்ள யார் ஒளிஞ்சிருக்கானு கண்டுபிடிக்கிறதையே ஒரு கேம் ஆக்கி விளையாடினோம். ஒல்லியா இருந்தவ லாக்டௌன்ல ஃபுல் மீல்ஸ் கட்டி வெயிட் போட்டிருந்தது, குண்டா இருந்தவ லாக்டௌன்ல செம வொர்க் அவுட் பண்ணி ஸ்லிம் ஆகியிருந்ததுனு பல பல மாற்றங்கள். ஃபிரெண்ட்ஸை எல்லாம் பார்த்த சந்தோஷத்துல, இந்த உலகத்துல கொரோனா வாழ்ந்துட்டு இருக்கிறதே எங்களுக்கெல்லாம் மறந்துபோய் நொடிகள், நிமிஷங்கள் எல்லாம் கொண்டாட்டமாச்சு. லாக்டௌன்ல எல்லாரும் என்னவெல்லாம் பண்ணி னோம்ங்கிற பத்து மாசக் கதையை 10 நிமிஷத்துல பேசி முடிக்கிற ஸ்பீடோட ஆரம்பிச்சு, லாஸ்ட் பீரியட் வரைக்கும் சொல்லியும் முடிக்காதது தனிக்கதை.

கிளாஸுக்கு வந்த மேம் சப்ஜெட்டுக்குப் போறதுக்கு முன்னாடி, கொரோனா காலத்தில் நம்மள எப்படி காப்பாத்திக்கணும், நியூ நார்மலுக்கு எப்படி பழகணும்னு அட்வைஸ் கொடுத்தாங்க. இந்தக் கொரோனாவால ஃப்ரெ ஷர்ஸ் பார்ட்டியை மிஸ் பண்ணின ஜூனியர் ஸுக்கும், ஃபேர்வெல்லை மிஸ் பண்ணின சீனியர்ஸுக்கும் ஃபீல் பண்ணின நாங்க, ‘நாம ஜஸ்ட் எஸ்கேப்’னு பெருமூச்சு விட்டுக்கிட்டோம்.

ஆனா பாருங்க, அந்தக் கொரோனா இன்னும் அந்த மூலையிலேயே நின்னு எங்களை முறைச்சுப் பார்த்துட்டுதான் இருக்கு. ‘நம்பர்ஸ் கூடுது, மறுபடியும் லாக்டௌன்’னு எல்லாம் வர்ற செய்திகளைப் பார்க் குறப்போ காலேஜ் கேட்டை மறுபடியும் மூடிடுவாங்க ளோனு திக்குனு இருக்கு.

வேண்டாம்... விட்டுடு, அழுதுடுவோம்!