Published:Updated:

2K kids: அவளும் நானும்!

2K kids: அவளும் நானும்!
பிரீமியம் ஸ்டோரி
2K kids: அவளும் நானும்!

பெ.ஜெஸ்ரில் பாஸ்டினா

2K kids: அவளும் நானும்!

பெ.ஜெஸ்ரில் பாஸ்டினா

Published:Updated:
2K kids: அவளும் நானும்!
பிரீமியம் ஸ்டோரி
2K kids: அவளும் நானும்!

நட்புக்கு சாதி, மதம், இனம், வயது, பாலினம் என்று எதுவும் பார்க்கத் தெரியாது. எண்ணங்கள் பொருந்தினாலே போதும். எனக்கு அப்படி கிடைத்த தோழிதான், திருநங்கை டெல்பினா.

நான் பி.எஸ்ஸி சைக்காலஜி மாணவி. எங்கள் கல்லூரியில் நடைபெற்ற பாலியல் கல்வி தொடர்பான பயிலரங்குக்கு சிறப்பு விருந்தினர்களில் ஒருவராக வந்தவர்தான் 42 வயது டெல்பினா. அவரது ஆங்கிலப் புலமையும், தூய தமிழ்மொழி நடையும் என்னை வியப்பில் ஆழ்த்தின. வகுப்பில் மாற்றுப் பாலினத் தவர்கள் பற்றிய கலந் துரையாடல் வந்தபோது, திருநர், திருநங்கை, திருநம்பி என்று அவர்களைக் குறிப்பிட வேண்டிய வார்த்தைகள் பற்றி திருத்தம் செய்து எனக்குக் கற்றுக்கொடுத்தார்.

2K kids: அவளும் நானும்!

என் தந்தை ஓர் உளவியல் ஆலோசகர். அவர் தனது தொண்டு நிறுவனத்தின் சார்பாக, பாலியல் சிறுபான்மை சமூகத்தோடு தொடர்புடைய ஓர் அமைப்பை தொடர்பு கொள்ளச் சென்றபோது, நானும் விரும்பி அவருடன் சென்றேன். அங்கே மீண்டும் டெல்பினாவைச் சந்தித்தேன். அவருடன் திருநம்பி சிவா இருந்தார். அவரை டெல்பினா எனக்கு அறிமுகம் செய்தார். நாங்கள் மூவரும் பல கருத்துகளைப் பரிமாறிக்கொண்டோம். ‘உன் அப்பாவுக்கும் உனக்கும் இருக்கும் இந்த உறவைப் பார்ப்பதற்கு வியப்பாக இருக்கிறது. உன் ஒவ்வொரு செயலுக்கும் உன் அப்பா உனக்கு ஆதரவாக இருப்பதைப் பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது’ என்றார் சிவா.

மீண்டும் ஒரு நாள், என் புராஜெக்ட்டில் ஒரு விளக்கம் கேட்பதற்காக, டெல்பினாவை சந்தித்தேன். சென்ற வருடம், உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் மற்றும் அவர் மனைவி, தங்கள் குழந்தையை பாலின பேதமற்ற (Gender Neutral) குழந்தையாக வளர்க்க விரும்புவதாக அறிவித்தனர். பிங்க் நிறம் பெண் குழந்தைகளுக்கானது, கார் பொம்மை ஆண் குழந்தைகளுக்கானது என்ற வேறுபாடுகள் அற்ற குழந்தையாக தங்கள் குழந்தையை வளர்க்க விரும்புவதாக அவர்கள் தெரிவித்தது பற்றி பேசிய நாங்கள், ‘வருங்காலத்தில் எல்லா பெற்றோரும் இதுபோல தங்கள் குழந்தை களை வளர்த்தால் சமுதாயம் சிறப்பாக இருக்குமே..?’ என்று மாற்றத்துக்கான உலகம் பற்றி நிறைய பேசினோம்.

2K kids: அவளும் நானும்!
2K kids: அவளும் நானும்!

சென்னையில் இருந்த என் தோழி டெல்பினா ஒரு முறை கோயம்புத்தூர் வந்திருந்தபோது, என் அம்மா அவரை வீட்டுக்கு அழைத்து இருந்தார். எங்கள் சமையலறையில் நான், அம்மா, டெல்பினா மூவரும் சேர்ந்து ஆப்பமும் குருமாவும் சமைத்தோம். அப்பா, அம்மா, அக்கா, நான், டெல்பினா அனை வருமாக உணவு உண்டோம். என் அக்காவின் கரடி பொம்மையை, ‘இதை நான் வெச்சுக்கட்டுமா...’ என்று கேட்டு வாங்கிக் கொண்டார் டெல்பினா. அவர் பேசிய ஆங்கிலக் கலப்பில்லாத தூய தமிழுக்கு எங்கள் வீட்டில் அனைவரும் ரசிகர்கள் ஆனோம்.

‘அழகிய குடும்பம் ஒன்றில் என் பொழுது இனிமையாகக் கழிந்தது மகிழ்ச்சியாக உள்ளது, மீண்டும் சந்திப்போம்’ என்று என்னையும் அக்காவையும் மென்மையாக அணைத்து ரயில் நிலையத்தில் டெல்பினா விடைபெற்றபோது, எங்களுக்கும் அத்துணை மகிழ்வாக இருந்தது. பின்னர் நாங்கள் ஒருமுறை சென்னை சென்றபோது, என் அக்கா டெல்பினாவுக்காக ஒரு கரடி பொம்மையைத் தேடி அலைந்து வாங்கியது ஒரு கவிதைக் காட்சி.

பாலின சிறுபான்மையினருக்கும் ஆனதே இந்த உலகம். டெல்பினாவுடனான என் அழகான நட்பு மூலம், என் உலகத்தை அவருக்கும் பங்களிக்க முடிவதில் மகிழ்ச்சி. தன் பெற்றோர் பற்றி பகிர்ந்துகொண்டபோது, ‘என்னை டெல்பினாவாக மனதார ஏற்க முடியாவிட்டாலும், தங்கள் மகன் விக்ரமாக என் பெற்றோர் என்னை நேசிக்கிறார்கள்’ என்றார்.

2K kids: அவளும் நானும்!

இந்தச் சமூக மனநிலையை மாற்ற, பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் பாலின சிறுபான்மையினர் பற்றிய நேர்மறையான புரிந்துணர்வையும் விழிப்புணர்வையும் மாணவர்களிடம் ஏற்படுத்த வேண்டும். மேலும், கல்வி, வேலைவாய்ப்பு, வசிப்பிடம், பயணங்கள், கழிப்பறை, விளையாட்டு போன்ற அடிப்படை உரிமைகள் கூட திருநர்களுக்கு மறுக்கப்படும் நிலை மாற வேண்டும்.

நாம் அனைவரும் ஏதோ ஒரு வகையில் வேறுபட்டே இருக்கிறோம். ஏன் பாலின வேறுபாடுகளை மட்டும் குறைபாடாகப் பார்க்க வேண்டும்?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism