Published:Updated:

2K kids: ஆறு ஆண்டுகள் கழித்து அவளைச் சந்தித்தபோது... நினைவடுக்கில் சிலிர்க்கும் நட்புத் தருணம்!

நட்பு
பிரீமியம் ஸ்டோரி
நட்பு

வெ.அக்க்ஷிதாபெல்ஜெஸ்; ஓவியம்; திவ்யா கணேசன்

2K kids: ஆறு ஆண்டுகள் கழித்து அவளைச் சந்தித்தபோது... நினைவடுக்கில் சிலிர்க்கும் நட்புத் தருணம்!

வெ.அக்க்ஷிதாபெல்ஜெஸ்; ஓவியம்; திவ்யா கணேசன்

Published:Updated:
நட்பு
பிரீமியம் ஸ்டோரி
நட்பு

ஒரு நல்ல நட்பு அமைஞ்சிட்டா, அம்மா, அப்பா, அண்ணன், அக்கா, தம்பி, தங்கைனு எல்லா உறவுகளும் கிடைச்ச மாதிரி வாழ்க்கை நிறைஞ்சு போயிடும். அப்படி எனக்குக் கிடைச்ச ஒரு தோழி பத்திதான் உங்ககிட்ட பகிர்ந்துக்கப்போறேன்.

அவளைக் கடைசியா, ஆறு வருஷம் முன்னாடி பார்த்தது இப்பவும் ஞாபகம் இருக்கு. சர்ச்சில் பத்து நாள் திருவிழா நடந்துட்டு இருந்துச்சு. சர்ச் மண்டபத்துல நடனப் பயிற்சி செய்துட்டு இருந்தப்போ, அவ என்னைக் கூப்பிடுற குரல் கேட்டது. அவ அந்த ஊரை விட்டுக் கிளம்புறதுக்கு முன்னாடி, கடைசியா என்னைப் பார்த்துட்டுப் போகத் தேடி, ஓடி வந்திருந்தா. சோகமான பிரிவுக்கான காரணத்தை சொல்றதுக்கு முன்னாடி, எங்களோட சுவாரஸ்யமான முதல் சந்திப்பை சொல்லிடுறேன்.

எங்களோட முதல் சந்திப்பு ஒரு பஸ் ஸ்டாப்லதான் நடந்தது. அன்னிக்கு என் பாட்டி வீட்டுக்குப் போறதுக்காக பஸ் ஸ்டாப்ல நின்னுட்டு இருந்தேன். ‘அடுத்த பஸ் எப்போ...?’னு ஸ்டாப்ல நிக்கிறவங்ககிட்ட பேசிக்கிற சாதாரண வார்த்தைகள்லதான் ஆரம்பிச் சோம். அது இப்படி ஓர் ஆத்மார்த்த நட்பா வளரும், இறுகும்னு நினைச்சும் பார்க்கல. எங்க ரெண்டு பேரோட பள்ளியும் பக்கத்துல இருந்தது. தினமும் சாயங்காலம் ஸ்கூல் கிரவுண்ட்ல விளையாடிட்டு, பேசித் தீர்த்துட்டுத்தான் வீட்டுக்குத் திரும்புவோம். எல்லா ஞாயிற்றுக்கிழமையும் சர்ச்சுக்கு ஒண்ணா போவோம். அன்னிக்கு முழுக்கப் பேசுவோம் பேசுவோம் பேசிக்கிட்டே இருப்போம். ரெண்டு பள்ளிக்கூடப் பொண்ணுங்களுக்கு வாழ்க்கையில அப்படி என்னதான் இருக்கும் பேசிக்கனு நினைக்கிறவங்க எல்லாம், அப்படியே கொஞ்சம் உங்களோட ஸ்கூல் டேஸை ரீவைண்ட் பண்ணிப் பாருங்க.

ஆரம்பத்துல, ரசனைகள்ல, எண்ணங்கள்ல, இயல்புல எங்களுக்குள்ள இருந்த வேறுபாடுகள் எல்லாம், எங்க நட்பு வளர வளர ஒரு பொருட்டே இல்லாமப் போயிடுச்சு. அவளோட பள்ளித் தோழி களோ, என்னோட பள்ளித் தோழிகளோ... யாரா இருந்தாலும் நாங்க ஒருத்தருக்கு ஒருத்தர் விட்டுக்கொடுக்க மாட்டோம்.

ஒரு விஷயம் சொல்லாம விட்டுட்டேனே... பொதுவா தோழிகள்னா அவங்க நம்ம வயசு, அல்லது நம்ம வகுப்பா இருப்பாங்க இல்ல... ஆனா, என் தோழி என்னைவிட மூணு வருஷம் சின்னவ. அவளோட இயல்பை பத்தி சொல்ல ணும்னா, அவ பத்து பேருல ஒருத்தியா நின்னு, அந்த பத்து பேர்கிட்டயும் ஒரு கேள்வி கேட்கும் போது, ஒன்பது பேரோட பதிலும் பெரும்பாலும் ஒரே மாதிரி தான் இருக்கும். ஆனா, என் தோழி பதில் மட்டும் ‘வேற மாரி’ இருக்கும். எந்த ஒரு விஷயத்தையும் தனித்தன்மை யோட அணுகுறவ, ரொம்ப புத்தி சாலி. ஆனாலும், ரொம்ப எளிமையா, எப்பவும் சிரிச்சுட்டே இருப்பா. அவ வருத்தத்தை எப்பவுமே மத்தவங்க கிட்ட காமிக்கணும்னு நினைக்க மாட்ட. ஆனா, யாராவது வருத்தமா இருந்தா அவங்களை சரிபண்ண எல்லா முயற்சியும் எடுப்பா.

அப்போ எங்களுக்குப் பிடிச்ச விளையாட்டு, வீடு கட்டி விளை யாடுறது. எங்கம்மா விறகுக்கு வெச்சிருக்கும் மூணு மட்டைய எடுத்து, நல்லா இறுக்கிக் கட்டி, அது மேல கிழிஞ்ச பெட்ஷீட் எல்லாம் போட்டுனு இதுதான் நாங்க கட்டுற வீடு. சிரட்டையில மணத்தக்காளி காய், பழங்களை போட்டு சமையல் ஆக்குவோம். வருங்காலத்துல நாங்க எவ்வளவு பெரிய வீடு கட்டுனாலும், அந்த ‘வெளாட்டு வீட்டு’ நினைவுகள விட சுகமா எதுவும் இருக்காது.

சரி, இப்போ பிரிவைப் பத்தி சொல்றேன். பொதுவா நாம ஒருத்தர் மேல ரொம்ப அன்பு வெச்சா அவங்க நம்மள விட்டுப் போயிடுவாங்க, இல்லைனா கடவுள் அவங்களை தூரம் ஆக்கிடுவாங்கனு சொல்லுவாங்க. அப்படித்தான், என் தோழியும் குடும்பச் சூழ்நிலை காரணமா தன் அம்மா, அப்பாவோட ஊரை விட்டே கிளம்ப வேண்டியதா போச்சு. அதுக்கு அப்புறம் என் நாள்கள்ல சந்தோஷமெல்லாம் கரைஞ்சு போச்சு.

2K kids: ஆறு ஆண்டுகள் கழித்து அவளைச் சந்தித்தபோது... நினைவடுக்கில் சிலிர்க்கும் நட்புத் தருணம்!

நாங்க பிரிஞ்சதுக்கு அப்புறம், ஒரு நாள் என் போனுக்கு ஒரு நம்பர்ல இருந்து ஒரு கால் வந்துச்சு. குரலைக் கேட்டப்போ, நான் துள்ளிக்குதிக்காத குறைதான். என் தோழிதான் பேசினா. அவ இருக்குற ஊரைப் பத்தியும், அவளோட புது ஸ்கூல் பத்தியும் சொன்னா. இப்படியே அப்பப்போ போன்ல பேசிக்கிட்டாலும், நேர்ல பார்க்க முடியாத வருத்தம் ரெண்டு பேருக்குமே இருந்தது.

ஆறு வருஷத்துக்கு அப்புறம், இப்போ நாங்க சந்திச்சுக்க ஒரு சந்தர்ப்பம் அமைஞ்சது. என்னதான் நட்பா இருந்தாலும், இந்த ஆறு வருஷத்துல அவ எவ்ளோ மாறியிருப்பாளோ, அவ வாழ்க்கையில என்னென்ன விஷயங்கள் மாறியிருக்குமோனு ஒரு தயக்கம் மனசுல உருண்டுட்டே இருந்தது. ஆனா, அவளைப் பார்த்த அந்த ரெண்டே நிமிஷத்துல, ‘இவ என்னோட அவளேதான்... ஆறு வருஷம் இல்ல, அறுபது வருஷமானாலும் எங்க அன்புல துளியும் மாற்றம் வராது’னு நான் உணர்ந்த அந்தத் தருணம்... வாழ்வின் அற்புத அனுபவம். அவ்வளவு சந்தோஷமான ஒரு பொழுதை நான் அதுக்கு முன்னாடி நேருக்கு நேர் சந்திச்சதில்லைனு தோணுச்சு. அப்போதான் ஒரு விஷயம் புரிஞ்சது... உண்மை யான நட்புக்கு, அன்புக்கு தூரம் ஒரு விஷயமே இல்லை.

அதே நேரம், முக மூடியான ஒரு அன்பு பக்கத்துலயே இருந்தாலும் தூரமாதான் உணரவைக்கும்.