தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

2K Kids: வேலைபார்க்கப் போறீங்களா, வேலைகொடுக்கப் போறீங்களா?!

2K Kids
பிரீமியம் ஸ்டோரி
News
2K Kids

நச்சலூர் சி.கிருஷ்ணகுமார்

பெற்றோர் குழந்தைகள்கிட்ட, ‘நல்லா படிச்சு நல்ல மார்க் வாங்கினாதான் நல்ல வேலை கிடைக்கும்’னு சொல்லி வளர்க்கிறாங்க. ஆனா ஏன் அவங்க, ‘நல்லா படிச்சு, அனுபவ அறிவையும் வளர்த்துக்கிட்டா நாலு பேருக்கு வேலை கொடுக்குற மாதிரி தொழிலை ஆரம்பிக்க முடியும்’னு சொல்றதில்ல? ஏன் நாம நம்ம இளைய இந்தியாவை வேலைக் காரங்களா இருக்க வளர்த்தெடுக்குறோம்? ஏன் நாம அவங்களை முதலாளியா ஆக ஊக்கப்படுத்துறதில்லை? எல்லாருமே வேலை கேட்டா, யார்தான் வேலை கொடுக்குறது?

நம்ம நாட்டுல ஒவ்வொரு வருஷமும் லட்சக்கணக்கான பட்டதாரிகள் உருவாகு றாங்க. வேலை தேட ஆரம்பிக்கிறாங்க. ஏன் அவங்களே ஒரு தொழிலைத் தொடங்குறதை பத்தி யோசிக்கிறதில்லை? ‘செபி’ (The Securities and Exchange Board of India)-ன் செயல் இயக்குநர் ஜி.பி.கார்க், ‘நம் பிள்ளைகளுக்கு பள்ளி, கல்லூரி என 15+ வருடங்களில், வேலைக்குச் சென்று சம்பளம் வாங்குவதற்கான கல்வியைத்தான் கற்றுக் கொடுக்குறோம். ஆனால், இந்தக் கல்வி பணம் சம்பாதிப்பதை பற்றி அவர்களுக்கு எதுவும் சொல்லித் தருவது இல்லை’னு சொல்றார். பணம் பற்றிய அறிவை ‘ஃபைனான்ஷியல் லிட்ரசி’ (Financial

Literacy)னு சொல்வோம். இந்திய மக்களின் ஃபைனான்ஷியல் லிட்ரசி 27% தான். உலகில் பல நாடுகள்ல பணம் பற்றிய கட்டாயக் கல்வி அமலில் இருக்கு. ஆனா, இந்தியாவில் அப்படி எதுவும் இல்ல.

அமெரிக்காவைச் சேர்ந்த தொழிலதிபர் எம்.ஜெ.டிமார்கோ, தான் எழுதின ‘தி மில்லியனர் ஃபாஸ்ட்லேன்’ (The Millionaire Fastlane) புத்தகத்துல, ‘நம் அனைவரிடமும் ஒரு விலைமதிக்க முடியாத சொத்து இருக்கிறது. அதை இழந்துவிட்டால் திரும்பப் பெற முடியாது. அந்தச் சொத்து... காலம்’. அதாவது, காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்னு சொல்றாரு. ஒரு வேலையில சேர்ந்து, கடிவாளம் கட்டின மாதிரி அதிலேயே ஓடிட்டு இருந்தா, உலகத்துல பணம் சம்பாதிக்க இருக்குற மத்த வாய்ப்புகளை எல்லாம் பத்தி அறியாம நம்ம காலமும் ஓடிட்டே இருக்கும். ஒரு சராசரி இந்தியரோட மாத வருமானம் 16,000 ரூபாய். 50 வயசுல, ‘நான் அப்போவே வேற ஏதாச்சும் யோசிச்சு டிராக் மாறியிருக் கணும்’னு சொல்றதுல பலனில்லை.

இந்த உலகமே கொரோனாவால முடங்கிப் போயிருந்தப்போ, ‘டெஸ்லா’ (Tesla) மற்றும் ‘ஸ்பேஸ்எக்ஸ்’ (SpaceX) கம்பெனிகளின் நிறுவனர் எலான் மஸ்க், உலகத்தின் டாப் பணக்காரர்கள்ல ஒருவரா ஆகியிருக்கார். அவரோட சொத்துமதிப்பு சுமார் 168 பில்லியன் அமெரிக்க டாலர். இந்திய ரூபாயின் மதிப்புல 12.58 லட்சம் கோடி. இவ்வளவு சொத்தையும் சம்பாதிக்க எலான் மஸ்க்குக்கு வெறும் 22 வருஷம்தான் ஆச்சு.

‘ஓ மை காட்... எப்படி?!’னு கேட்குறீங்களா? இதுக்கான பதிலுக்கு நாம மறுபடியும் எம்.ஜி. டிமார்க்கோவோட புத்தகத்துக்குப் போவோம். ‘நீங்கள் பணம் சம்பாதிக்க வேண்டும் என்றால், வேலை தேடிப் போகக்கூடாது. மார்க்கெட்டில் இருக்கக்கூடிய பிரச்னைகளைத் தேடிப் போக வேண்டும். அந்தப் பிரச்னை களுக்குத் தீர்வு கண்டுபிடிக்க வேண்டும். அந்தத் தீர்வையே ஒரு தொழிலாக உருவாக்க வேண்டும்’னு சொல்றாரு டிமார்க்கோ.

vikatan
vikatan

எலான் மஸ்க், அதைத்தான் பண்ணினார். அவரோட ‘டெஸ்லா’ கம்பெனி, போக்கு வரத்து சாதனங்கள்ல மக்கள்கிட்ட இருக்குற பிரச்னை, பற்றாக்குறை என்னனு யோசிச்சு, ஹைடெக் எலக்ட்ரிக் கார் தயாரிக்கிறாங்க. அவரோட ஸ்பேஸ்எக்ஸ் கம்பெனி, விண் வெளிக்கு அனுப்பும் செயற்கைக்கோள்கள்ல என்னென்ன பிரச்னைகள் இருக்குனு பார்த்து, அதைக் களைந்து, ஹைடெக் செயற்கைகோள்கள் தயாரிக்குறாங்க.

ஆக... உங்களுக்குத் தொழில் தொடங்குற உத்வேகம் வந்தனுனா நீங்க செய்ய வேண்டியது... எந்த மார்க்கெட்ல என்ன பிரச்னை இருக்குனு பாருங்க; மக்களுக்கு அதுல எது பிடிக்கலைனு பாருங்க; மக்கள் எது இருந்தா நல்லாருக்கும்னு நினைக்கிறாங்கன்னு பாருங்க. அவங்களோட பிரச்னையை, தேவையை பூர்த்திசெய்யக்கூடிய தொழிலை உங்களால பண்ண முடியும்னா, பண்ணுங்க. ஸ்டார்ட்அப் பிசினஸ்கள் எல்லாம் இப்படித்தான் உருவாகுது.

நீங்க லட்சம் ரூபாய் பிரச்னைக்கான தீர்வைக் கொண்டு வந்தா, அதுக்கு ஏற்ற தொகையை சம்பாதிப்பீங்க. கோடி ரூபாய் பிரச்னைக்கான தீர்வைக் கொண்டு வந்தா, அதுக்கேற்ற மாதிரி சம்பாதிப்பீங்க.

‘காலேஜ் முடிஞ்சதும் எங்க வேலைக்குச் சேரலாம்?’னு யோசிக்கிற நாம, ‘என்ன தொழில் செய்யலாம்?’னும் இனி யோசிப்போம்.

சியர்ஸ்!