Published:Updated:

2K kids: 2கே கிட்ஸ் ஜேஜே சொல்லும் கொரியன் டிராமா... ஏன்?!

கொரியன் டிராமா
பிரீமியம் ஸ்டோரி
News
கொரியன் டிராமா

தாரிணி.வெ.க.

சின்ன வயசுல, ‘ஒரு ஊர்ல...’னு யாராச்சும் கதை சொல்ல ஆரம்பிச்சா ‘ம்ம்...’னு நாம வாய் பார்த்தோமே... அந்த ஆர்வத்தோட நீட்சிதான் இப்போ நாம சீரியல், சினிமா, வெப் சீரிஸ் பார்க்குறது எல்லாம். அப்படி ‘சித்தி...’ பார்க்க ஆரம்பிச்சு இப்போ ‘பாரதி கண்ணம்மா’ வரை சின்சியரா நம்ம கூட தமிழ் சீரியல் பார்த்தவங்க எல்லாம் திடீர்னு நம்மகிட்ட வந்து, ‘அன்யோன் ஹசேயோ’ (Annyeonghaseyo) பாத்தியா? சான்ஸே இல்ல’, ‘ப்ரோ... த லெஜண்ட் ஆஃப் த புளூ சீ’ (The Legend of the Blue Sea) இன்னுமா நீ பாக்கல..?’னு எல்லாம் கேட்கும்போது வரும் பாருங்க நமக்கு ஒரு கடுப்ஸ்..! ‘யார்ரா நீங்கள் லாம்?’னு கேட்டா, ‘ஹே... நாங்க இப்போ கே- டிராமா ஃபேன்ஸ் ஆகிட்டோம்ப்பா... நீயும் அப்டேட் ஆயிடு’னு சொல்லுவாங்க. அதென்ன கே-டிராமானு தோணுதுல..? தெரிஞ்சுப்போம் வாங்க!

கே-டிராமான்னா (K-Drama), கொரியன் டிராமாங்க. அதாவது, கொரியன் சீரியல்ஸ். இது உலக அளவுல ரொம்பப் பிரபலம், நிறைய ஃபேன்ஸ். அப்படி என்ன இருக்கு அதுல?! ஃபேஷன், ஸ்டைல், கலாசாரம்னு இந்த சீரியல்களோட அம்சங்களுக்கு எல்லா நாடுகள்லயும் வரவேற்பு இருக்கு.

கே-டிராமால பெரும்பாலும் 12 - 24 எபி ஸோட்ஸ்தான் இருக்கும். மெகா சீரியல்ஸ் பார்த்துப் பார்த்து போர்னு நினைக்கிற வங்களுக்கு, குறிப்பா, நம்ம 2கே புள்ளைங்களுக்கு அதனாலேயே இந்த கே-டிராமா ரொம்ப பிடிச்சிருக்கு.

சரி, இந்த கே-டிராமால என்ன ஜானர்லாம் எடுப்பாங்க? ஹாரர், க்ரைம், த்ரில்லர்னு எல்லா ஜானருமே எடுப்பாங்க. அதுல வர்ற ட்விஸ்ட்கள்தான் இந்த சீரியல்களோட ஹைலைட். அதோட, கே-டிராமா ரொமான் ஸுக்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்காங்க. ஒளிப்பதிவும் அடடா ரகம்தான். ஹை-ஸ்கூல் ஸ்டோரி, அட அதாங்க, ஸ்கூல் பசங்க வாழ்க்கையை மையமா வெச்சு வரும் கதைகள் கே-டிராமல செம ஹிட். ‘அட நம்ம ‘கனா காணும் காலங்கள்’ மாதிரியா..?’னு கேட்டா, அதுதான் இல்ல. இந்த ஹை-ஸ்கூல் ஸ்டோரி களை எல்லாம் பல ட்விஸ்ட்களோட வித்தியாசமா எடுப்பாங்க.

2K kids: 2கே கிட்ஸ் ஜேஜே சொல்லும் கொரியன் டிராமா... ஏன்?!

உதாரணத்துக்கு, `எக்ஸ்ட்ராடினரி யு’ (Extraordinary You)னு ஒரு டிராமா. அதுல ஒரு ஸ்கூல் பொண்ணுதான் முதன்மை கேரக்டர். திடீர்னு, அவ உலகத்துல எல்லாமே வேக வேகமா நடக்க ஆரம்பிக்குது. அதாவது, இப்போதான் எக்ஸாம் எழுத ஆரம்பிச்சுருப்பா, கண்ண மூடித் திறந்தா எக்ஸாம் முடிஞ்சிருக்கும். என்னடா நடக்குது இங்கனு அவ குழம்ப, தான் உண்மையில காமிக் புக்கோட ஒரு கதா பாத்திரம்னு அவளுக்குத் தெரிய வரும். அவ மட்டுமல்ல... அவ உலகத்துல இருக்குற எல்லாருமே எழுத்தாளர் ஒருத்தரோட கதை யோட கேரக்டர்கள்தாம். குறிப்பா, அந்தப் பொண்ணுக்கு, இதயப் பிரச்னையால சீக்கிரமே மரணத்தைத் தழுவ இருக்குற கேரக்டர். அவளுக்கு இருக்குற சின்ன காலத்துல, எழுத்தாளர் எடுத்திருக்குற கதையோட முடிவுகளை மாத்தி, அவ எப்படி தன்னோட வாழ்க்கையை காப்பாத் திக்கிறா என்பதுதான் `எக்ஸ்ட்ராடினரி யு’.

அடுத்ததா, ‘ஸ்கை கேஸில்’ (Sky Castle)னு ஒரு ஹிட் டிராமா. அதுல, நல்லா படிக்கணும், டாக்டர் ஆகணும்னு சொல்லி பெற்றோர் கொடுக்கும் அழுத்தம், ஒரு பொண்ண எப்படி நெகட்டிவ்வா பாதிக்குது என்பதை ரொம்பவே சுவாரஸ்யமான திரைக்கதை யோட சொல்லியிருப்பாங்க.

கே-டிராமாவுல ‘பீரியட் டிராமாஸ்’ வகையும் ரொம்பவே பிரபலம். இதையும், ஒரு ஊர்ல ராஜா இருந்தாரு, அவர் மக்களுக்கு நல்லது பண்ணினாருனு சொல்லாம, வித்தியாசமா சொல்லியிருப்பாங்க. உதா ரணத்துக்கு, ‘மூன் லவ்வர்ஸ் - ஸ்கார்லெட் ஹார்ட் ரையோ’ (Moon Lovers: Scarlet Heart Ryeo)னு ஓரு டிராமா. அதுல, நிகழ்காலத்துல இருக்குற ஒரு பொண்ணு கடந்த காலத்துக்குப் போயிடறா. அங்க இருக்குற ராஜாவுக்கு 25 பசங்க, 9 பொண்ணுங்க. இவ ஹிஸ்டரி பாடங்கள்ல படிச்ச வரைக்கும், அந்தப் பசங் கள்ல ஒரு பையன் அவன் கூட பொறந்தவங்க எல்லோரையும் கொன்னுட்டு ராஜா ஆவான். ஆனா, உண்மையா என்ன நடந்ததுன்னு சொல்றதுதான் இந்த டிராமா.

பொதுவா, தமிழ் சீரியல்கள்ல பெரும்பாலும் திருமணமான பெண்கள்தாம் முதன்மைக் கதாபாத்திரமா இருக்காங்க. ஆனா கே-டிராமால, பல வெரைட்டி கதைகள் கிடைக்குறதால நிறைய இளம் வயதினர் கொரியன் சீரியல்களே சரணம்னு போறாங்க.

மேலும், அப்போ டிவியில சீரியல், தியேட்டர்ல சினிமானு இதைத் தவிர பொழுதுபோக்குக்கு வேற வழி இல்ல. ஆனா இப்போ, நமக்குப் பிடிச்ச கதைகளை மொழிகள், நாடுகள் தாண்டி யும் தேர்ந்தெடுக்கும் டெக்னாலஜி... நம்ம மொபைல், லேப்டாப்னு நாம மட்டுமே பார்க்குற ப்ரைவஸினு இதெல்லாம் இந்தத் தலைமுறையை கே-டிராமா, இங்கிலீஷ் சீரிஸ் பக்கம் அதிகம் போக வெச்சிருக்கு.

கொரியன் சீரியல்களை நீங்களும் முயற்சி செய்து பார்க்கலாமே?!