லைஃப்ஸ்டைல்
தொடர்கள்
தன்னம்பிக்கை
Published:Updated:

2K kids: நைட் கடை பிரியாணி... ஒரு நடை போலாமா?!

பிரியாணி
பிரீமியம் ஸ்டோரி
News
பிரியாணி

- தே.வே. சௌந்தர்ய லட்சுமி

குறைந்த விலையில தரமான சாப் பாட்டைக் கொடுக் கிற கடைகள் அங்கொண்ணும் இங்கொண்ணுமா இருக்கும். அப்படி ஒண்ணுதான், சென்னையை அடுத்த திருமழிசை `நெல்லை மகா ராஜா நைட் கடை'.

மூணு சகோதரர்களோட கூட்டு உழைப்புல மணக்குற இந்தக் கடைக்கு ஒரு விசிட் போவோமா?! அண்ணன் அருணாசல பாண்டியன், தம்பி கணேசமூர்த்தி... இளைய தம்பி மகாராஜா நம்மகிட்ட பேசினாரு...

 மகாராஜா
மகாராஜா

‘`தூத்துக்குடி மாவட்டம் சிவந்திப் பட்டியில இருந்து அண்ணன், தம்பிங்க நாங்க மூணு பேரும் சென்னைக்கு வேலை தேடி வந்தப்போ, 15, 16 வயசுல இருந்தோம். சென்னைக்கு வந்த புதுசுல திருவொற்றியூர்ல இருந்த ஒரு டீக்கடையில வேலைபார்த்தோம். உழைச்சுக் கொட்டிட்டு காசை வாங்கிட்டுப் போவோம்னு இருக்காம, சொந்தக் கடை ஆரம்பிக்கணும்குற நோக்கத்தோட தொழில், வேலை நுணுக்கங்களைத் தெளிவா கத்துக்கிட்டோம்.

2003-ம் வருஷம் இந்தக் கடையை ஆரம்பிச்சப்போ, கொஞ்சம் காசையும், நிறைய உழைப்பையும் முதலீடா போட்டோம். ஏமாத்தாம வெற்றி எங்ககிட்ட வந்தது. அந்த ஆசையில சாப்பாட்டுல, சுவையுல, தரத்துல எந்த சமரசமும் செய்யாம, பசியோட வர்றவங்களுக்கு வயிறு நிறைய நல்ல சோறு போடுறதையே எங்களோட பிரதான நோக்கமா வெச்சுகிட்டோம்; வருமானம் அப்புறம்தான்.

2K kids: நைட் கடை பிரியாணி... ஒரு நடை போலாமா?!
2K kids: நைட் கடை பிரியாணி... ஒரு நடை போலாமா?!

நைட் கடை பிரியாணி, நைட் கடை அல்வானு நம்ம உணவுகளுக்கு எல்லாம் ஒரு பேரு கிடைக்க ஆரம்பிச்சது. குறிப்பா, கூடுதலா நட்ஸ் தூவி கொடுக்குற எங்க அல்வாவை நீங்க சாப்பிட்டுப் பார்த்தா, ஒரு தடவையோட நிறுத்த மாட்டீங்க.

இன்னொரு சிறப்பான விஷயம் என்னன்னா... ஒரு தடவை எங்க கடையில நீங்க ஒரு டிஷ் ஆர்டர் பண்ணி சாப்பிட்டுட்டு அதே, டிஷ்ஷை மறுபடி ஆர்டர் பண்ணிணா அதுக்கு வெறும் 10 ரூபாய்தான் பில் போடுவோம். உதாரணத்துக்கு நீங்க தக்காளி சாதம் வாங்கு றீங்க. சாப்பிட்டு முடிச்சிட்டு மறுபடியும் அதே சாதத்தை வாங்கினா இரண்டாம் முறை வாங்கின சாதம் வெறும் பத்து ரூபாய்தான்.

பசியோட வாங்க, ருசி யோட சாப்பிடலாம்!” என்கிறார் மகாராஜா.