Published:Updated:

UNLOCK2: `நவம்பர் மாதம்வரை இலவச ரேஷன் பொருள்கள்!’- பிரதமர் மோடி #NowAtVikatan

பிரதமர் மோடி
பிரதமர் மோடி ( ANI )

30.6.2020 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

30 Jun 2020 4 PM

நவம்பர் மாதம்வரை இலவச ரேஷன் பொருள்கள்!

பிரதமர் மோடி பேசுகையில், ``இலவச ரேஷன் பொருள்கள் நவம்பர் மாதம் வரை வழங்கப்படும். இந்தத் திட்டத்துக்காகத் தானியங்கள் வாங்க ரூ.90,000 கோடி செலவிடப்படும். பிரதமரின் வறுமை ஒழிப்புத் திட்டமும் நவம்பர் மாதம் வரை நீட்டிக்கப்படுகிறது.

விவசாயிகளும் வரி செலுத்துவோரும் கொரோனா சமயத்தில் நாட்டுக்கு பேருதவி செய்துள்ளனர். அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். நவம்பர் மாதம் வரை 80 கோடி மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் உணவுப் பொருள்கள் வழங்கப்படும்’’ என்றும் அவர் குறிப்பிட்டார்.

30 Jun 2020 4 PM

சிறிய அலட்சியம்கூட உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடும்!

ஊரடங்கில் இரண்டாம் கட்ட தளர்வுகளை #UNLOCK2 என்ற பெயரில் மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று அறிவித்தது. இந்தத் தளர்வுகள் நாளை முதல் அமலாகும் நிலையில், பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றினார். அவர் கூறுகையில், ``உலக அளவில் ஒப்பிடுகையில் இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு விகிதம் மிகவும் குறைவாகவே உள்ளது. சரியான நேரத்தில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் லட்சக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டன. சிறிய அளவிலான அலட்சியம்கூட உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தக்கூடும்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி
ANI

இரண்டாம் கட்ட தளர்வுகளுக்குள் தேசம் நுழைந்திருக்கிறது. பல இடங்களில் ஊரடங்கு சரியாகக் கடைப்பிடிக்கப்படவில்லை. அரசு அதிகாரிகள், மக்கள் தற்போது மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம். ஊரடங்கு விதிகளை மீறிச் செயல்படுபவர்களை மக்கள் அடையாளம் காண வேண்டியது முக்கியம். இதில், சட்டத்துக்கு மேலாக எந்த ஒரு நபரும் கிடையாது. கொரோனாவால் ஏழை மக்கள் பாதிப்பு அடையவில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டியது முக்கியம்’’ என்று பேசினார்.

இந்திய சீன பிரச்னை... பிரதமர் மோடி நடத்திய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நடந்தது என்ன?
அடுத்த கட்டுரைக்கு