Published:Updated:

உடல்நலக் குறைவு - இந்து முன்னணி நிறுவனர் ராமகோபாலன் காலமானார்! #NowAtVikatan

ராமகோபாலன்
ராமகோபாலன்

30-09-2020 | இன்றைய நிகழ்வுகளின் தொகுப்பு..!

30 Sep 2020 4 PM

இந்து முன்னணி நிறுவனர் ராமகோபாலன் காலமானார்!

ராமகோபாலன்
ராமகோபாலன்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இந்து முன்னணி நிறுவனர் ராமகோபாலன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 94. மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்ட நிலையில், சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 26-ம் தேதி ராமகோபாலன் அனுமதிக்கப்பட்டார். இந்தநிலையில், சிகிச்சை பலனின்றி அவர் காலாமானார்.

30 Sep 2020 10 AM

ட்ரம்ப் - ஜோ பைடன் நேரடி விவாதம்!

`கொரோனா உயிரிழப்புகள் குறித்த நேரடி எண்ணிக்கையை சீனா, ரஷ்யா, இந்தியா போன்ற நாடுகள் அளிப்பதில்லை’ என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் குற்றம்சாட்டியிருக்கிறார்.

ஜோ பைடன் - ட்ரம்ப்
ஜோ பைடன் - ட்ரம்ப்
AP | OLIVIER DOULIERY

நவம்பரில் நடைபெறும் அதிபர் தேர்தலுக்கு முன்னதாக தேர்தலில் மோதும் தற்போதைய அதிபர் ட்ரம்ப் மற்றும் அவரை எதிர்த்துப் போட்டியிடும் ஜோ பைடன் ஆகியோர் கலந்துகொண்ட நேரடி விவாதம் கிளைவ்லேண்டில் நடந்தது. அதிபர் தேர்தலுக்கு முன்பாக நடைபெறும் மூன்று விவாதங்களில் முதலாவது விவாதத்தில் கலந்துகொண்டு பேசிய ஜோ பைடன், `அமெரிக்காவில் இதுவரை 70 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால், அதிபரிடம் இது குறித்து எந்தச் செயல் திட்டமும் இல்லை. மற்ற உலக நாடுகளைவிட அமெரிக்கா இந்த விவகாரத்தில் மோசமான நிலையில் இருக்கிறது' என்றார்.

ட்ரம்ப்
ட்ரம்ப்
AP

அப்போது குறுக்கிட்ட ட்ரம்ப், `அது சீனாவின் தவறு. அது நடந்திருக்கவே கூடாது. அரசு நடவடிக்கை எடுக்காமல் இருந்திருந்தால், இறப்பு எண்ணிக்கை மேலும் பல லட்சங்களைத் தாண்டியிருக்கும். இறப்பு எண்ணிக்கை பற்றிப் பேசினால், சீனாவில் எவ்வளவு பேர் இறந்தார்கள் என்பது உங்களுக்குத் தெரியாது. அதேபோல், ரஷ்யா மற்றும் இந்தியாவில் இறந்தவர்கள் எண்ணிக்கை பற்றித் தெரியாது. இறப்புகள் குறித்த நேரடியான எண்ணிக்கையை அவர்கள் அளிக்க மாட்டார்கள்’’ என்று பேசினார்.

10 வருடங்களாக வருமான வரி செலுத்தாத ட்ரம்ப்... நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட ஷாக் தகவல்!
30 Sep 2020 10 AM

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் தீர்ப்பு!

பாபர் மசூதி
பாபர் மசூதி

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் லக்னோ சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. 1992-ம் ஆண்டு பாபர் மசூதி இடிப்பு வழக்கில் பா.ஜ.க மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, உமா பாரதி உள்ளிட்டோர் மீது குற்றம்சாட்டப்பட்டது. வழக்கு விசாரணை நடந்துகொண்டிருந்தபோதே குற்றம்சாட்டப்பட்டவர்களில் 17 பேர் உயிரிழந்தனர். மீதமுள்ள 32 பேரும் தீர்ப்பின்போது நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என சி.பி.ஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.கே.யாதவ் உத்தரவிட்டிருந்தார்.

பாபர் மசூதி இடிப்பு வழக்கு எந்த நிலையில் இருக்கிறது?
அடுத்த கட்டுரைக்கு