Published:Updated:

`இரண்டு மாதங்களில் சட்டமன்றத் தேர்தல்!’ அமைச்சர் சி.வி.சண்முகம் #NowAtVikatan

சி.வி.சண்முகம்
சி.வி.சண்முகம்

30-12-2020 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

30 Dec 2020 3 PM

இரண்டு மாதங்களில் சட்டமன்றத் தேர்தல்!

சி.வி.சண்முகம்
சி.வி.சண்முகம்

தமிழகத்தில் இன்னும் இரண்டு மாதங்களில் சட்டமன்றத் தேர்தலுக்கு வாய்ப்பிருப்பதாக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்திருக்கிறார். பிப்ரவரி, மார்ச் மாதங்களில் தேர்தல் அறிவிக்கப்பட வாய்ப்பிருப்பதாகவும் அமைச்சர் கூறியிருக்கிறார்.

30 Dec 2020 3 PM

பட்டாசு, தீப்பெட்டித் தொழிலாளர்களுக்கு நலவாரியம்!

பட்டாசு, தீப்பெட்டித் தொழிலாளர்களுக்கு அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியம் அமைக்க தமிழக அரசு, அரசாணை வெளியிட்டிருக்கிறது. தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தலைவராக இருக்கும் இந்த அமைப்புசாரா நலவாரியத்தில் அரசு, தொழிற்சங்கப் பிரதிநிதிகள் இடம்பெறுவர்.

பட்டாசுத் தொழிலாளர்கள்
பட்டாசுத் தொழிலாளர்கள்

தமிழகத்தில் தற்போது 1,250 பட்டாசு ஆலைகளும், 870 தீப்பெட்டித் தொழிற்சாலைகளும் உரிமம் பெற்று இயங்கிவருகின்றன. 62,661 பட்டாசு, தீப்பெட்டித் தொழிலாளர்கள் உறுப்பினர்களாக இருக்கும் இந்த நலவாரியம் சென்னையில் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு