Published:Updated:

Corona Live Updates: `3,943 பேருக்கு பாசிட்டிவ்!’ - தமிழகத்தில் 90,000-த்தைக் கடந்த மொத்த எண்ணிக்கை

கொரோனா
கொரோனா

30.6.2020 | கொரோனா வைரஸ் தொடர்பான முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு!

30 Jun 2020 6 PM

தமிழகத்தில் 90,000-த்தைக் கடந்த மொத்த எண்ணிக்கை!

தமிழகத்தில் இன்று மட்டும் 3,943 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 90,167-ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா | Covid-19
கொரோனா | Covid-19

சென்னையில் மட்டும் இன்று 2,393 பேருக்கு பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 58,327 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,325 பேர் குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,201-ஆக அதிகரித்துள்ளது.

30 Jun 2020 6 PM

அமைச்சர் கே.பி.அன்பழகனுக்குக் கொரோனா தொற்று உறுதி!

கே.பி.அன்பழகன்  உயர்கல்வித்துறை அமைச்சர்
கே.பி.அன்பழகன் உயர்கல்வித்துறை அமைச்சர்

உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்குக் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தனியார் மருத்துவமனை தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. அவருக்குக் கொரோனாவுக்கான அறிகுறிகள் எதுவும் தென்படாத நிலையில் நேற்று முதல் லேசான இருமல் இருப்பதாகவும் தற்போது அவர் நலமுடன் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

30 Jun 2020 9 AM

இந்தியாவில் கொரோனா நிலவரம்!

கொரோனா
கொரோனா

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,48,318 -லிருந்து 5,66,840 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில், 24 மணி நேரத்தில் 18,522 பேருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. கொரோனா தொற்றால் 24 மணி நேரத்தில் மட்டும் 418 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 16,475-லிருந்து 16,893 ஆக அதிகரித்திருக்கிறது. அதேபோல், தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3,34,822 ஆகவும் உயர்ந்துள்ளது. 2,15,125 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்றுவருகிறார்கள்.

30 Jun 2020 9 AM

உலக அளவில் கொரோனா பாதிப்பு!

கொரோனா வைரஸ் - உலகம்
கொரோனா வைரஸ் - உலகம்

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,02,38,232-லிருந்து 1,04,02,637 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 55,49,897 -லிருந்து 56,48,728 ஆக உள்ளது. தொற்று காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,04,078 -லிருந்து 5,07,518 ஆக உயர்ந்திருக்கிறது.

30 Jun 2020 9 AM

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு!

கொரோனா வைரஸ் - அமெரிக்கா
கொரோனா வைரஸ் - அமெரிக்கா

உலக அளவில், கொரோனா காரணமாக அதிக பாதிப்புகளைச் சந்திக்கும் நாடான அமெரிக்காவில், கொரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 26,81,775 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,28,777ஆக உள்ளது.

அடுத்த கட்டுரைக்கு