Published:Updated:

Corona Live Updates: தமிழகத்தில் 2.4 லட்சத்தை நெருங்கும் பாதிப்பு - புதிதாக 5,864 பேருக்குத் தொற்று!

corona
corona ( Unsplash )

30.7.2020 | கொரோனா வைரஸ் தொடர்பான முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

30 Jul 2020 6 PM

தமிழகத்தில் புதிதாக 5,864 பேருக்குத் தொற்று!

தமிழகத்தில் இன்று மட்டும் 5,864 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,39,978-ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,295 பேர் குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,72,883 ஆக உயர்ந்தது. தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை 97 அதிகரித்த நிலையில், மொத்த எண்ணிக்கை 3,838 ஆக அதிகரித்துள்ளது.

Corona
Corona

சென்னையில் மேலும் 1,175 பேருக்குத் தொற்று!

சென்னையில் மட்டும் இன்று 1,175 பேருக்கு பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 98,767 ஆக அதிகரித்துள்ளது.

`கொரோனா பரவலை வேகப்படுத்தும் முக்கியக் காரணி புகையிலை!’ - மத்திய சுகாதாரத்துறை
30 Jul 2020 9 AM

இந்தியாவில் 16 லட்சத்தை நெருங்கிய பாதிப்பு!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15,83,792 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் 24 மணி நேரத்தில் 52,123 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

கொரோனா தொற்றால் 24 மணி நேரத்தில் மட்டும் 775 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 34,968 ஆக அதிகரித்திருக்கிறது. அதேபோல், தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 10,20,582 ஆகவும் உயர்ந்துள்ளது.

கொரோனா
கொரோனா

நேற்று வரையில் இந்தியாவில் ஒட்டுமொத்தமாக 1,81,90,382 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது. அதில் நேற்று மட்டும் 4,46,642 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு