Published:Updated:

குடியிருப்போரிடம் ஒரு மாத வாடகை வசூலிக்கத் தடை! -வீட்டு ஓனர்களுக்கு எச்சரிக்கை #Corona #NowAtVikatan

கொரோனா
கொரோனா

31.3.2020 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

31 Mar 2020 4 PM

வாடகை வசூலிக்கத் தடை!!

தமிழகத்தில் வாடகை வீட்டில் குடியிருப்போர் யாரிடமும் உரிமையாளர்கள் ஒரு மாதம் வாடகை வசூலிக்கக்கூடாது என்றும் வெளிமாநிலத்தவர் உட்பட யார் தங்கியிருந்தாலும் மார்ச் மாதத்திற்கான வாடகையை வீட்டின் உரிமையாளர்கள் யாரும் தமிழ்நாட்டில் வசூலிக்க கூடாது. கட்டாயப்படுத்தி வசூலிக்க முயன்றால் சட்ட நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும். மேலும் தொழிலாளர்கள் அனைவருக்கும் நிறுவனங்கள் பிடித்தம் செய்யாமல் ஊதியம் வழங்க வேண்டும் என்றும், தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

31 Mar 2020 11 AM

தமிழகத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா!

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 17 பேருக்கு கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்ட நிலையில் இன்று மேலும் 7 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா வைரஸால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 74 ஆக உயர்ந்துள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரம் சென்று வந்தவருக்கு சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. ஏற்கெனவே திருவண்ணமலை பகுதியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவருடன் பணியாற்றிய ஒருவருக்கும் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், டெல்லியிலிருந்து விழுப்புரம் திரும்பிய மூவருக்கும் மதுரை திரும்பிய இருவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

31 Mar 2020 8 AM

இந்தியாவில் 1,251 ஆக அதிகரித்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை!

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,251 ஆக அதிகரித்திருக்கிறது. இதனால் உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் 32 ஆக அதிகரித்திருக்கிறது. நேற்று ஒரேநாளில் புதிதாக 157 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

கொரோனா
கொரோனா

உலக அளவில் இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7,84,716 ஆக இருக்கிறது. அதேநேரம் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 37,639 ஆக அதிகரித்துள்ளது. இத்தாலியில் 11,591 பேரும் ஸ்பெயினில் 7,716 பேரும் அமெரிக்காவில் 3,146 பேரும் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பரிசோதனைக்கு இந்தியாவில்தான் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறதா..? #VikatanFactCheck 
அடுத்த கட்டுரைக்கு