Published:Updated:

3 நாள்களுக்கு தடுப்பூசி போடும் பணி நிறுத்தம் - சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் #NowAtVikatan

குழந்தைகளுக்கான தடுப்பூசி
குழந்தைகளுக்கான தடுப்பூசி

31-05-2021 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

31 May 2021 6 PM

தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தம்

தமிழகத்துக்கு தேவையான தடுப்பூசிகள் மத்திய அரசிடமிருந்து கிடைக்காததால், 3 நாட்களுக்கு தடுப்பூசி போட முடியாத சூழல் நிலவுவதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ஜூன் 3-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை தடுப்பூசி போடப்படாது. 6-ம் தேதி 3 லட்சம் டோஸ்கள் தமிழகத்துக்கு வரும். அதன் பின்னர் பணிகள் தொடங்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ராதாகிருஷ்ணன்
ராதாகிருஷ்ணன்
31 May 2021 3 PM

பாலியல் புகார்: கராத்தே பயிற்சியாளர் கைது!

சென்னை அண்ணாநகரைச் சேர்ந்தவர் 26 வயது இளம்பெண், அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 29.5.2021-ல் புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில், ``நான் 2014-ம் ஆண்டு அண்ணாநகர் ஹெச் பிளாக், 1-வது மெயின் ரோடு பகுதியில் செயல்பட்டு வந்த தற்காப்பு கலை பயிற்சியகத்தில் சேர்ந்து பயிற்சி வந்தேன். அதை கெபிராஜ் என்பவர் நடத்திவருகிறார். ஜூடோ போட்டிக்காக நாமக்கலுக்கு காரில் பயிற்சியாளர் கெபிராஜ் என்பவருடன் சென்றேன். பின்னர் காரில் திரும்பிவரும்போது பயிற்சியாளர் கெபிராஜ், எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். அதை வெளியில் சொன்னால் என்னை அவர் கொலை செய்துவிடுவதாக மிரட்டல் விடுத்தார். எனவே எனக்கு பாலியல் தொல்லை கொடுத்த பயிற்சியாளர் கெபிராஜ் மீது நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

பாலியல் தொல்லை
பாலியல் தொல்லை

அதன்பேரில் போலீஸார் இந்திய தண்டனைச் சட்டம், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டப்பிரிவுகளின்படி கெபிராஜ் (44) என்பவர் மீது போலீஸார் வழக்குபதிவு செய்து அவரிடம் விசாரணை நடத்தியிருக்கின்றனர். இந்த நிலையில் கராத்தே மாஸ்டர் போலீசார் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

31 May 2021 9 AM

இந்தியாவில் கொரோனா நிலவரம்!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் புதிதாக 1,52,734 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. தொடர்ந்து நான்காவது நாளாக இந்தியாவில் பாதிப்பு 2 லட்சத்துக்கும் குறைவாக பதிவாகி உள்ளது. இதன் காரணமாக, இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு 2,80,47,534 என்ற எண்ணிக்கையை எட்டியிருக்கிறது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 3,128. இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பு காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 3,29,100 -ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா சிகிச்சை
கொரோனா சிகிச்சை

இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வந்தவர்களின் எண்ணிக்கை 2,56,92,342 -ஆக இருக்கிறது. தற்போது மருத்துவமனைகளில் 20,26,092 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள். ஒரே நாளில் 2,38,022 பேர் பாதிப்பிலிருந்து மீண்டு வீடு திரும்பியிருக்கிறார்கள்.

இந்தியாவில் இதுவரை 21,31,54,129 பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது.

31 May 2021 9 AM

`ஜூன் மாதத்தில் 12 கோடி தடுப்பூசிகள் கிடைக்கும்!’ 

இந்தியாவில் கொரோனா வைரஸின் பரவல் வேகம் குறைந்து வருகிறது. என்றாலும் கொரோனா வைரஸில் இருந்து முழுமையாக தப்பிக்க தடுப்பூசி ஒன்றே தற்போதைய ஆயுதம். மே மாதம் முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கும் கொரோனா தடுப்பூசிகள் போடப்படும் என அறிவிக்கப்பட்டாலும், தடுப்பூசிகளின் தட்டுப்பாடுகள் காரணமாக தடுப்பூசி திட்டம் வேகம் எடுக்கவில்லை. இரண்டாவது டோஸ் போடுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பதால், முதல் டோஸுக்குக்காக மக்கள் அதிக காலம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது.

தடுப்பூசி
தடுப்பூசி

இந்த நிலையில் மத்திய சுகாதார அமைச்சகம் தடுப்பூசி கிடைப்பது தொடர்பாக ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், மே மாதத்தில் தேசிய அளவிலான தடுப்பூசி திட்டத்துக்கு 7.94 கோடி தடுப்பூசிகள் கிடைத்தன என்றும். ம் இதில் 4.03 கோடி தடுப்பூசிகள் மத்திய அரசால் மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் நேரடியாக வழங்கப்பட்டன என்றும், 3.90 கோடி நேரடி கொள்முதல் திட்டத்தின்கீழ் விநியோகிக்கப்பட்டன என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு தடுப்பூசி ஒதுக்கீடு என்பது, அவர்களின் நுகர்வு முறை, மக்கள் தொகை, வீணாகும் தடுப்பூசிகள் ஆகியவற்றின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது என்ற விளக்கத்தையும் வழங்கி இருந்தது.

ஜூன் மாதம் தடுப்பூசி கொள்முதல்:

ஜூன் மாதத்தைப் பொறுத்தவரையில் கிட்டத்தட்ட 12 கோடி டோஸ் தடுப்பூசிகள் கிடைக்கும். இதில் 6.09 கோடி தடுப்பூசிகள், மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் சுகாதார பணியாளர்கள், முன்களப்பணியாளர்கள், 45 வயதுக்கு மேற்பட்டோர் ஆகியோருக்கு செலுத்த முன்னுரிமை அடிப்படையில் விநியோகிக்கப்படும். மேலும் 5.86 கோடி தடுப்பசிகள், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு, தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு நேரடி கொள்முதல் திட்டத்தின்கீழ் கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு