Published:Updated:

`நாளை, நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார் பிரதமர் மோடி!’ - புதிய கல்விக் கொள்கை குறித்து பேச வாய்ப்பு #NowAtVikatan

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

31.7.2020 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

31 Jul 2020 12 PM

புதிய கல்விக் கொள்கை குறித்து பேச வாய்ப்பு!

இந்தியாவில் கொரோனா பரவ ஆரம்பித்த காலம் முதலே பிரதமர் மோடி அவ்வப்போது நாட்டு மக்களுக்கு உரையாற்றுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில் பிரதமர் மோடி நாட்டு மக்கள் இடையே நாளை மாலை 4:30 மணிக்கு மீண்டும் உரையாற்றுகிறார். இந்த முறை புதிய கல்விக் கொள்கை தொடர்பாகவும் புதிய அன்லாக் தொடர்பாகவும் பேச வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

31 Jul 2020 10 AM

தமிழகத்தில் ப்ளஸ் 1 தேர்வு முடிவுகள் வெளியானது!

ப்ளஸ் டூ தேர்வு முடிவுகள்
ப்ளஸ் டூ தேர்வு முடிவுகள்

தமிழகத்தில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. 11-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 96.04% பேர் தேர்ச்சி பெறுள்ளதாக அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. இந்தத் தேர்வு முடிவுகளின் படி 97.49 % மாணவிகள், 94.38 % மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். அதிக தேர்ச்சி பெற்ற மாவட்டங்களில் 98.10 சதவிகிதத்துடன் கோவை முதலிடம் பெற்றிருக்கிறது

31 Jul 2020 10 AM

மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு பெயர் மாற்றம்!

`நாளை, நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார் பிரதமர் மோடி!’  - புதிய கல்விக் கொள்கை குறித்து பேச வாய்ப்பு #NowAtVikatan

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு பெயர் மாற்றம் செய்து புதிய உத்தரவு அறிவிக்கபட்டுள்ளது. அதன்படி சென்னை ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு பேரறிஞர் அண்ணா பெயரும், சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு எம்ஜிஆர் பெயரும் சூட்டப்பட்டுள்ளது. மேலும் சென்னை சிஎம்பிடி மெட்ரோ ரயில் நிலையத்திற்கு ஜெயலலிதா பெயர் சூட்டப்பட்டது.

அடுத்த கட்டுரைக்கு