Published:Updated:

`இந்தியாவில் மேலும் 5 பேருக்கு உருமாறிய கொரோனா!’ - 25-ஆக அதிகரித்த மொத்த பாதிப்பு #NowAtVikatan

31-12-2020 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

31 Dec 2020 11 AM

மேலும் 5 பேருக்கு உருமாறிய கொரோனா வைரஸ்!

உருமாறிய கொரோனா வைரஸ் முதன்முதலில் பிரிட்டனில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த உருமாறிய வைரஸ், பழைய கொரோனா வைரஸைவிட மிகவும் வேகமாகப் பரவுவது கண்டுபிடிக்கப்பட்டதால், பிரிட்டனுடனான விமானப் போக்குவரத்தை இந்தியா உட்பட பல நாடுகள் தடை செய்தன.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

தொடர்ந்து, சமீபகாலத்தில் பிரிட்டனிலிருந்து இந்தியா திரும்பியவர்களைக் கண்டறிந்து, அவர்களுக்கும் சோதனைகள் நடைபெற்றன. இதில் இந்தியாவிலும் உருமாறிய கொரோனா வைரஸ் பரவியது கண்டுபிடிக்கப்பட்டது. உருமாறிய கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டவர்கள் தனி அறையில் தங்கவைக்கப்பட்டு, அவர்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டுவருகிறது.

இந்தநிலையில், உருமாறிய கொரோனா இந்தியாவில் மேலும் 5 பேருக்கு இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக, இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை மொத்தம் 25-ஆக உயர்ந்திருக்கிறது. தமிழகத்தில் தற்போது வரை ஒருவருக்கு மட்டும் உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்திருக்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு