Published:Updated:

`அசத்திய ராகுல், கோலி!'- மீண்டும் சூப்பர் ஓவர்; மீண்டும் வெற்றி #NZvIND #NowAtVikatan

கோலி
கோலி

31.1.2020 - இன்றைய முக்கிய நிகழ்ச்சிகளின் தொகுப்பு!

31 Jan 2020 4 PM

`சூப்பர்' ஓவர்!

சூப்பர் ஓவரில் முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 6 பந்துகளில் 13 ரன்கள் எடுத்தது. பின்னர் 14 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கணக்கில் இந்திய அணி களமிறங்கியது. கடந்த போட்டியில் மாஸ் காட்டிய ரோஹித் இந்தப் போட்டியில் இல்லாததால் கேப்டன் கோலி களமிறங்கினார். முதல் பந்திலே ராகுல் சிக்ஸர் அடித்து அமர்களப்படுத்த அடுத்த பந்திலே பவுண்டரி. அடுத்த பந்தில் ஆட்டத்தை முடித்து வைப்பார் என நினைத்த வேளையில் ராகுல் அவுட். 3 பந்தில் 4 ரன்கள் தேவை. முதல் பந்தில் கோலி 2 ரன்கள் எடுத்தார். அடுத்த பந்த ஃபோர். இலக்கை துரத்திப் பிடித்தது இந்தியா. இதன் மூலம் 4 -வது டி20 ஆட்டத்தையும் வென்று இந்திய அணி 4-0 என தொடரில் முன்னிலையில் உள்ளது. வழக்கம்போல் சூப்பர் ஓவர் நியூசிலாந்து அணிக்கு சாதகமாக அமையவில்லை.

31 Jan 2020 4 PM

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 4-வது டி20 போட்டி வெலிங்டனில் நடைபெற்றது. இந்தப்போட்டியில் நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் தோள்பட்டை காயம் காரணமாக களமிறங்கவில்லை. அதற்குப் பதிலாக சௌதி கேப்டன் பொறுப்பை ஏற்றார். டாஸ் வென்ற சௌதி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பு 165 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணியில் அதிகபட்சமாக மனீஷ் பாண்டே அரை சதம் விளாசினார். நியூசிலாந்து தரப்பில் இஷ் சோதி அதிகபட்சமாக 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி 7 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுக்க டை ஆனது. 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் இந்தியா 3 மூன்று போட்டிகளில் வெற்றிபெற்று தொடரை வென்றுள்ளது.

31 Jan 2020 2 PM

166 ரன்கள் இலக்கு!

நியூசிலாந்துக்கு எதிரான 4வது டி20 போட்டி வெலிங்டனில் நடைபெறுகிறது. இதில் நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் தோள்பட்டை காயம் காரணமாக களமிறங்கவில்லை. அதற்குப் பதிலாக சௌதி கேப்டன் பொறுப்பை ஏற்றார். டாஸ் வென்ற சௌதி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். மூன்று மாற்றங்களுடன் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பு 165 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணியில் அதிகபட்சமாக மனீஷ் பாண்டே அரை சதம் விளாசினார். நியூசிலாந்து தரப்பில் இஷ் சோதி அதிகபட்சமாக 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இளம்வீரர்கள் சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் சோபிக்கவில்லை. கேப்டன் கோலியும் விரைவாக அவுட் ஆனார்.

31 Jan 2020 1 PM

நான் மீண்டும் வருவேன்! - விஜயகாந்த்

உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற தே.மு.தி.க பிரதிநிதிகளுக்கு பாராட்டு தெரிவிக்கும் நிகழ்ச்சி அக்கட்சியின் தலைமையகமான கோயம்பேடு அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. கட்சியின் பொதுச் செயலாளர் விஜயகாந்த், பொருளாளர் பிரேமலதா உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். இதில் முதலில் பேசிய பிரேமலதா, ``தொண்டர்களே எங்கள் குடும்பம். எங்கள் திருமண நாளை உங்களுடன் கொண்டாட வேண்டும் என எண்ணிதான் இந்த நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது. .

கூட்டணி தர்மத்தைக் கடைப்பிடிக்கும் ஒரே கட்சி தே.மு.தி.க தான். கூட்டணி என்பதால் குட்ட குட்ட குனிய மாட்டோம். குட்ட குட்ட குனியும் சாதி இல்லை தே.மு.தி.க. நாங்கள் மீண்டு எழுவோம். 2021-ம் ஆண்டு தேர்தலுக்கு கிராமம் கிராமமாக சென்று சுற்றுப்பயணம் மேற்கொள்வோம். விஜயகாந்த் மீண்டும் தமிழகம் முழுவதும் பிரசாரம் மேற்கொள்வார். 2021-ம் ஆண்டு தேர்தலில் தே.மு.தி.க மிகப்பெரிய கட்சியாக வரும்.

விஜயகாந்த் தலைமையில் நல்லாட்சி வருவதுதான் நோக்கம். விஜயகாந்த் ஆட்சி வரும் வரையில் ஓயமாட்டோம். கூட்டணியா அல்லது கூட்டணி இல்லாமல் தேர்தலை சந்திக்க உள்ளோமா என்பதை உரிய நேரத்தில் தலைவர் அறிவிப்பார்” என்று ஆவேசமாகப் பேசினார். தொடர்ந்து விஜயகாந்த் பேசுகையில், `` மக்களுக்கு நல்லது செய்ய நான் மீண்டும் வருவேன்" என்று கூறினார்.

31 Jan 2020 12 PM

இந்தியா பேட்டிங்!

நியூசிலாந்துக்கு எதிரான 4வது டி20 போட்டி வெலிங்டனில் நடைபெறுகிறது. இதில் நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் தோள்பட்டை காயம் காரணமாக களமிறங்கவில்லை. அதற்குப் பதிலாக சௌதி கேப்டன் பொறுப்பை ஏற்றார். டாஸ் வென்ற சௌதி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இந்திய அணி ஏற்கெனவே தொடரை வென்றுவிட்டதால் இந்தப் போட்டியில் அணி வீரர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி ரோஹித், ஷமி, ஜடேஜா ஆகியோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு அதற்குப் பதிலாக சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர், நவதீப் சைனி ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

31 Jan 2020 10 AM

தமிழில் மட்டும் குடமுழுக்கு- மனு தள்ளுபடி!

தஞ்சை பெரிய கோயிலில் தமிழில் மட்டும் குடமுழுக்கு நடத்தக்கோரி தாக்கல் செய்யப்பட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடுக்கப்பட்ட மனுவை விசாரித்த நீதிபதிகள் தமிழில் மட்டும் குடமுழுக்கு நடத்தக்கோரிய முறையீட்டை நிராகரித்தனர். மேலும், தமிழ் மற்றும் சம்ஸ்கிருதத்தில் குடமுழுக்கை நடத்தலாம் என்று அறநிலையத்துறைக்கு அனுமதி கொடுத்தனர். குடமுழுக்கு நடத்தி அதுதொடர்பான அறிக்கையை 4 வாரங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

31 Jan 2020 10 AM

ராணுவ வீரர்மீது துப்பாக்கிச் சூடு!

ஆவடியில் ராணுவ கனரக வாகன பாதுகாப்பு தொழிற்சாலையில் கிரிஜேஷ்குமார் என்ற சி.ஆர்.பி.எப் வீரர் சக வீரரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். சென்னை ஆவடி ராணுவ கனரக வாகன பாதுகாப்பு தொழிற்சாலையில் பாதுகாப்பு பணியில் இருந்த வீரர் நிலம்பாசின்ஹா என்பவர் தூங்கிக்கொண்டிருந்த கிரிஜேஷ்குமார்மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுள்ளார். கிரிஜேஷ்குமாரின் தலையில் 6 தோட்டாக்கள் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்தச் சம்பவம் குறித்து வழக்கு பதிந்த போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

31 Jan 2020 8 AM

ஐ.டி ரெய்டு!

ரெய்டு
ரெய்டு

கரூரை அடுத்த ராமேஸ்வரபட்டியில் உள்ள தி.மு.க எம்.எல்.ஏ செந்தில்பாலாஜி வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. வீட்டில் செந்தில் பாலாஜி இல்லையென்றும், அவரது பெற்றோர்களிடம் போலீஸ் விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதேபோல் கரூரில் உள்ள செந்தில் பாலாஜிக்கு சொந்தமான ஜவுளி நிறுவனத்திலும், அவரது தம்பி அசோக் வீட்டிலும் சோதனை நடத்தி வருகின்றனர் என்று கூறப்படுகிறது. மூன்று இடங்களில் சென்னையில் இருந்து வந்துள்ள சீருடையணிந்த அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.

பின் செல்ல