Election bannerElection banner
Published:Updated:

இது `புத்தாண்டு பரிசு?’ - டிக்கெட் கட்டணத்தை உயர்த்திய ரயில்வே அமைச்சகம் #NowAtVikatan

ரயில்
ரயில்

31.12.2019 - இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

31 Dec 2019 8 AM

`குளோப் சாக்கர் விருது’

கால்பந்து உலகின் இரு ஜாம்பவான்கள் கிறிஸ்டியானோ ரொனால்டோ, மெஸ்ஸி. இருவருக்குள் களத்தில் மட்டுமல்லாது விருதுகள் வாங்கிக் குவிப்பதிலும் எப்போதும் போட்டி நிலவும். இந்த ஆண்டுக்கான பலூன் டி’ஆர் விருதை ரொனால்டோவை வீழ்த்தி மெஸ்ஸி கைபற்றியிருந்தார்.

இந்நிலையில் ஆண்டின் இறுதியில் குளோப் சாக்கர் விருதைக் கைபற்றியுள்ளார் ரொனால்டோ. இது தொடர்பாக ட்வீட் செய்துள்ள ரொனால்டோ, ``மீண்டும் ஒரு குளோப் சாக்கர் விருது கிடைத்துள்ளதை மதிப்பிற்குரியதாகக் கருதுகிறேன். எனது குடும்பத்தினருடன் இந்த விருதைப் பகிர்ந்துகொள்ளும்போது எமோஷ்னலாக உணர்கிறேன்” என்றார்.

31 Dec 2019 10 AM

முப்படை தளபதி!

இந்தியாவின் முப்படைகளுக்கும் ஒரே தளபதியாக பிபின் ராவத் நேற்று மத்திய அரசால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து இன்று அவர் ராணுவ தளபதி பதவியில் இருந்து அவர் விலகுகிறார். நாளை அவர் `முப்படை தளபதி’யாக பதவியேற்று கொள்வார் என கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று அவருக்கு ராணுவம் சார்பில் பிரிவு உபசார விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது . அந்து கலந்து கொண்ட பிபின் ராவத் மரியாதையை ஏற்றுக்கொண்டார்,

பின்னர் பேசிய பிபின் ராவத், ``இத்தனை காலம் எனக்கு உறுதுணையாக இருந்த வீரர்கள், அதிகாரிகள் அனைவருக்கும் நன்றி. புதிய ராணுவ தளபதியாக பதவியேற்கும் மனோஜ் -க்கு வாழ்த்துகள். தேசிய பாதுகாப்பு தொடர்பான சவால்களையும் எதிர்கொள்ள முப்படைகளும் தயார் நிலையில் உள்ளது” என்றார்.

31 Dec 2019 1 PM

தேசிய குடிமக்கள் பதிவேடு - பா.ம.க தீர்மானம்!

இது `புத்தாண்டு பரிசு?’ - டிக்கெட் கட்டணத்தை உயர்த்திய ரயில்வே அமைச்சகம் #NowAtVikatan

`தமிழகத்தில் தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்தை செயல்படுத்தக்கூடாது’ என பாட்டாளி மக்கள் கட்சி பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் வழக்கறிஞர் பாலு தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

31 Dec 2019 4 PM

சர்வதேச முதலீட்டாளர் மாநாடு!

டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ``2024-25ஆம் ஆண்டில் 5 ட்ரில்லியன் என்ற பொருளாதார இலக்கை இந்தியா எட்டிவிடும். ரூ.102 லட்சம் கோடிக்கு உள்கட்டமைப்பு திட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. உள்நாட்டு உற்பத்தித் தொகையில் 6% உள்கட்டமைப்புக்கு செலவிடப்படும். 2020ஆம் ஆண்டின் பிற்பகுதியில் சர்வதேச முதலீட்டாளர் மாநாடு நடத்தப்படும்" என்று தெரிவித்துள்ளார்.

31 Dec 2019 5 PM

`தளபதி 64' ஃபர்ஸ்ட் லுக்!

இது `புத்தாண்டு பரிசு?’ - டிக்கெட் கட்டணத்தை உயர்த்திய ரயில்வே அமைச்சகம் #NowAtVikatan

விஜய் - லோகேஷ் கனகராஜ் இணைந்துள்ள தளபதி 64 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக கர்நாடகாவில் நடந்து வருகிறது. விஜய் சேதுபதி, மாளவிகா மேனன், ஆண்ட்ரியா, ஆண்டனி வர்கீஸ், சாந்தனு, ஸ்ரீமன், சஞ்சீவ், விஜே ரம்யா உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்களே படத்தில் நடித்துவருகின்றனர். கத்தி படத்தை தொடர்ந்து, இந்த படத்துக்கும் அனிருத் இசையமைத்து வருகிறார்.

இதனிடையே, புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும்விதமாக இன்று இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் ல் லுக் வெளியிடப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று காலை முதலே விஜய் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்துவந்த நிலையில் தற்போது படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. `மாஸ்டர்' எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. குறியீடுகள் பல நிரம்பியிருக்கும் வகையில் ஃபர்ஸ்ட் ல் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

31 Dec 2019 7 PM

கட்டணத்தை உயர்த்திய ரயில்வே!

உயர்த்தப்பட்ட கட்டண விவரம்!
உயர்த்தப்பட்ட கட்டண விவரம்!

இன்று நள்ளிரவு முதல் ரயில்வே டிக்கெட் கட்டணங்கள் கூடுகிறது என்று ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, ஏசி அல்லாத எக்ஸ்பிரஸ் ரயில்களின் கட்டணம் கிலோ மீட்டருக்கு இரண்டு பைசாவும், ஏசி எக்ஸ்பிரஸ் ரயில்களின் கட்டணம் கிலோ மீட்டருக்கு நான்கு பைசாவும் உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் புறநகர் ரயில்களின் கட்டணம் கிலோ மீட்டருக்கு ஒரு பைசாவும் உயர்த்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு இன்று நள்ளிரவு முதல் உடனடியாக அமலுக்கு வருகிறது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு