Published:Updated:

நெல்லை: லாரி மோதியதில் மேய்ச்சலுக்குச் சென்ற 37 ஆடுகள் பலி! - கதறிய விவசாயி

ஆட்டுக் கூட்டத்தில் புகுந்த லாரி

வழக்கமாக ஆடுகள் அனைத்தையும் காலை நேரத்தில் மேய்ச்சலுக்காக தாமிரபரணி நதிக்கரையோரம் கொண்டுசெல்வது வழக்கம். ஆடுகள் சாலையைக் கடந்தபோது வேகமாக வந்த லாரி ஆட்டுக் கூட்டத்துக்குள் புகுந்தது.

நெல்லை: லாரி மோதியதில் மேய்ச்சலுக்குச் சென்ற 37 ஆடுகள் பலி! - கதறிய விவசாயி

வழக்கமாக ஆடுகள் அனைத்தையும் காலை நேரத்தில் மேய்ச்சலுக்காக தாமிரபரணி நதிக்கரையோரம் கொண்டுசெல்வது வழக்கம். ஆடுகள் சாலையைக் கடந்தபோது வேகமாக வந்த லாரி ஆட்டுக் கூட்டத்துக்குள் புகுந்தது.

Published:Updated:
ஆட்டுக் கூட்டத்தில் புகுந்த லாரி

நெல்லையை அடுத்த நடுக்கல்லூர் பகுதியைச் சேர்ந்தவர், நாகராஜன். விவசாயியான இவருக்குச் சொந்தமாக நூற்றுக்கும் அதிகமான செம்மறி ஆடுகள் உள்ளன. ஆடுகளை வீட்டிலேயே வளர்க்கும் அவர், காலை நேரத்தில் மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றுவிட்டு மாலையில் அவற்றை வீட்டுக்குக் கொண்டுவந்து அடைத்துவிடுவார்.

சிதறிக் கிடக்கும் ஆடுகள்
சிதறிக் கிடக்கும் ஆடுகள்

வழக்கம்போல, இன்று ஆடுகளை ஓட்டிக்கொண்டு பசுமையான புற்கள் வளர்ந்துள்ள தாமிரபரணி ஆற்றோரப் பகுதிக்குச் செல்லத் திட்டமிட்டுள்ளார். அதற்காக ஆடுகளுடன் கல்லூர் ரயில்வே கேட் அருகே செல்லும்போது அந்த வழியாக எம்-சாண்ட் ஏற்றிக்கொண்டு வேகமாக வந்த லாரி ஆட்டுக் கூட்டத்துக்குள் புகுந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

லாரியில் சிக்கிய ஆடுகள் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன. இந்த விபத்தில் 37 ஆடுகள் பலியாகின. மேலும் பல ஆடுகளுக்குப் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. ஆட்டுக் கூட்டத்துக்குள் லாரி நுழைந்ததால் ஏற்பட்ட விபத்தில் பெரும் சேதம் ஏற்பட்டதை அறிந்த லாரி டிரைவர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

விபத்தைப் பார்த்துக் கதறும் விவசாயிகள்
விபத்தைப் பார்த்துக் கதறும் விவசாயிகள்

ஆடுகள் பலியானதால் ஏற்பட்ட இழப்பு காரணமாக விவசாயி நாகராஜன் கதறித் துடித்தார். சுத்தமல்லி சாலையில் பகல் மற்றும் இரவு நேரங்களில் ஏராளமான கனரக வாகனங்கள் அதி வேகத்தில் செல்வதால் அவற்றைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆடுகள் வளர்ப்பின் மூலம் குடும்பத்தை நிர்வகித்துவந்த விவசாயி நாகராஜனுக்கு உரிய இழப்பீடு கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நடுக்கல்லூர் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பலியான ஆடுகள்
பலியான ஆடுகள்

சம்பவம் பற்றி அறிந்த சுத்தமல்லி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தலைமறைவான லாரி டிரைவரைத் தேடிவருகின்றனர். மேய்ச்சலுக்குச் சென்ற ஆட்டுக் கூட்டத்தில் லாரி மோதி 37 ஆடுகள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism