Election bannerElection banner
Published:Updated:

மியான்மர்: 50 பேர் பலி; தவிக்கும் பர்மா தமிழர்கள்; வைரலாகும் நம்பிக்கைப் பெண் - என்ன நடக்கிறது?

க்யால் சின்
க்யால் சின் ( Twitter )

இந்தப் போராட்டங்களில் உயிரிழந்த 50-க்கும் மேற்பட்டவர்களில் 19 வயது க்யால் சின்னும் ஒருவர். இவர் போராட்டத்தில் ஈடுபட்டபோது சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்.

மியான்மாரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக நடந்துவரும் போராட்டங்களில் இதுவரை 50-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருப்பதாக ஐ.நா தெரிவிக்கிறது. ஆனால், இந்த எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என வேறு சில செய்திகள் தெரிவிக்கின்றன.

மியான்மரில் பிப்ரவரி 1-ம் தேதி ராணுவத்தினரால் ஆட்சிக் கவிழ்ப்பு நடத்தப்பட்டு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

மியான்மர் மக்கள் போராட்டம்
மியான்மர் மக்கள் போராட்டம்
STR

ஆங் சாங் சூகி உட்பட முக்கிய அரசியல்வாதிகள், அதிகாரிகள் கைதுசெய்யப்பட்டனர். மியான்மரில் ஆங் சாங் சூகியின் தேசிய ஜனநாயக் லீக் கட்சியினர் ஆட்சியிலிருந்த நிலையில், அந்த ஆட்சியைக் கவிழ்த்து ராணுவத்தினர் அதிகாரத்தைக் கைப்பற்றினர்.

இந்த நடவடிக்கைகளுக்குப் பிறகு நாட்டில் இணையதள மற்றும் வங்கி சேவைகள் முடக்கப்பட்டன. அரசுத் தொலைக்காட்சி சேவையும் முடக்கப்பட்டிருக்கிறது. மக்கள் வீதிகளில் இறங்கி ராணுவ ஆட்சிக்கு எதிராகவும், சூகி உள்ளிட்ட தலைவர்களை விடுவிக்கக் கோரியும் போராட்டங்களை நடத்திவருகின்றனர்.

மியான்மர் மக்கள் போராட்டம்
மியான்மர் மக்கள் போராட்டம்
STR

அதுமட்டுமல்லாமல், போராட்டக் களத்தில் போலீஸாரின் கண்ணீர்ப்புகையால் பாதிக்கப்பட்ட மக்களைக் காப்பாற்ற, தண்ணீர் பைப் ஒன்றை உதைத்துத் திறந்து தன்னால் முயன்ற உதவிகளை அந்தப் பெண் க்யால் சின் செய்திருக்கிறார்.

புதன்கிழமை மட்டும் மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் 38 பேர் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் பல இளைஞர்களும் அடக்கம்.

`அனைத்தும் சரியாகிவிடும்!’

இந்தப் போராட்டங்களில் உயிரிழந்த 50-க்கும் மேற்பட்டவர்களில் 19 வயது இளம்பெண் க்யால் சின்னும் ஒருவர். இவர் போராட்டத்தில் ஈடுபட்டபோது சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்.

போராட்டத்தில் க்யால் சின்
போராட்டத்தில் க்யால் சின்

உயிரிழந்தபோது `அனைத்தும் சரியாகிவிடும்’ (Everything will be ok) என எழுத்துகள் பதிந்த டீ ஷர்ட்டை அந்தப் பெண் அணிந்திருந்தார். அந்தப் புகைப்படம் மியான்மர் மக்கள் மத்தியில் வைரலானது. அதுமட்டுமல்லாமல் க்யால் சின்னுக்கு பலர் தங்களின் அஞ்சலியைச் செலுத்திவருகின்றனர்.

உயிரிழப்பதற்கு முன் அவர் தனது முகநூல் பக்கத்தில் தனது ரத்த வகை குறித்தும், தான் உயிரிழந்தால் தனது உறுப்புகள் தானம் செய்யப்பட வேண்டும் என்றும் கோரியிருக்கிறார். இது குறித்தும் பலர் உருக்கமாகப் பேசிவருகின்றனர்.

ராணுவத்துக்கு எதிராகக் கடுமையாகப் போராடிவரும் மக்களைத் துப்பாக்கியால் சுட்டும், கண்ணீர்ப்புகைக் குண்டைப் பயன்படுத்தியும் கலைக்கும் முயற்சிகளை காவல்துறையினர் எடுத்துவருகின்றனர்.

போராடும் மக்களை நீர்ப்பாய்ச்சிக் கலைக்கும் ராணுவம்
போராடும் மக்களை நீர்ப்பாய்ச்சிக் கலைக்கும் ராணுவம்
STR

காவல்துறையினர் போராட்டக்காரர்களைக் கொடூர முறைகளில் கட்டுப்படுத்தும் பல வீடியோக்களும் வெளியாகின. நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மியான்மரில் ராணுவத்தின் நடவடிக்கைக்கு பல்வேறு நாடுகள் தங்களின் கண்டனங்களை தெரிவித்துள்ளன.

சூகி மீது என்ன குற்றச்சாட்டு?

ராணுவம் ஆட்சியைக் கவிழ்த்து, ஆங் சாங் சூகி உட்பட முக்கிய அரசு அதிகாரிகளைக் கைதுசெய்தது. கைதுக்குப் பிறகு சூகியின் இருப்பிடம் குறித்து தெரியாமல் இருந்த சூழ்நிலையில், சில தினங்களுக்கு முன்னர் அவர்மீது சுமத்தப்பட்ட குற்றங்களின் வழக்கு விசாரணைக்கு வீடியோ கால் மூலம் தோன்றினார் சூகி.

ஆங் சாங் சூகி -யை விடுவிக்கக் கோரும் மக்கள்
ஆங் சாங் சூகி -யை விடுவிக்கக் கோரும் மக்கள்
STR

சூகி மீது சட்டவிரோதமாக வாக்கி டாக்கிகளை வாங்கியது போன்ற குற்றச்சாட்டுகளும், இயற்கைப் பேரழிவுச் சட்டங்களை மீறியது, தேர்தல் பிரசாரத்தின்போது விதிமுறைகளை மீறியது போன்ற குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டுள்ளன.

என்ன சொல்கிறது ராணுவம்?

2015-ம் ஆண்டு சூகி தலைமையிலான தேசிய ஜனநாயக கட்சி தேர்தலில் பெரும் வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்தது. அதன் பிறகு தற்போது 2020-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அந்தக் கட்சி வெற்றிபெற்று, நாடாளுமன்றம் கூடவிருந்த வேளையில்தான் இந்த ஆட்சிக் கவிழ்ப்பு நடந்திருக்கிறது. இந்த ஆட்சிக் கவிழ்ப்புக்கு ராணுவம் சொல்லும் காரணம் தேர்தலில் முறைகேடுகள் நடந்தன என்பதுதான்.

2015-ம் ஆண்டு பெற்ற வெற்றியைக் காட்டிலும் 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற தேர்தலில் பெரிதான ஒரு வெற்றியைத்தான் சூகியின் தேசிய ஜனநாயக் லீக் கட்சி பெற்றது. இந்தத் தேர்தலில் அவர்கள் 83 சதவிகித வாக்குகளைப் பெற்றிருந்தனர். இருப்பினும், ஆட்சிக் கவிழ்ப்பு செய்திருக்கும் ராணுவம், இப்போது அதிகாரத்தை ராணுவத் தலைவர் ஜெனரல் மிங் ஆங் லெய்ங்கிடம் ஒப்படைத்திருக்கிறது.

மியான்மர்: ராணுவப் புரட்சி... நாடாளுமன்ற சாலையில் ஆசிரியையின் உடற்பயிற்சி! - வைரல் வீடியோ

ஓய்வு பெறும் தறுவாயை நெருங்கும் ஜெனரல் மிங் ஆங் லெய், நியாயமான ஒரு தேர்தலை நடத்தி அதில் வெற்றி பெறும் கட்சியிடம் ஆட்சியை ஒப்படைப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.

ஐ.நா இந்த ஆட்சிக் கவிழ்ப்புக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறது. மேலும் கைதுசெய்யப்பட்டவர்களை விடுவிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளது. இந்தியா, ஜப்பான், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரிட்டன் எனச் பல்வேறு நாடுகள் ராணுவத்தினரின் செயலுக்கு கண்டனம் தெரிவித்திருந்தன.

பர்மிய தமிழர்கள்

மியான்மரின் ஆட்சிக் கவிழ்ப்பு குறித்துப் பேசும்போது மியான்மரின் பர்மிய தமிழர்கள் குறித்துப் பேச வேண்டிய அவசியமும் ஏற்படுகிறது. ராணுவத்தால் ஆட்சிக் கவிழ்ப்பு என்பது மியான்மருக்கு ஒன்று புதிதல்ல. இதற்கு முன்பு நடந்த ராணுவ ஆட்சியால் பல லட்சம் பர்மிய தமிழர்கள் தங்கள் சொத்துகளை இழந்துள்ளனர். ஒடுக்கப்பட்டு, நாட்டைவிட்டு வெளியேறும் சூழலும் ஏற்பட்டது.

மியான்மர் மக்கள் போராட்டம்
மியான்மர் மக்கள் போராட்டம்
Sakchai Lalit

19-ம் நூற்றாண்டின் தொடக்க காலங்களில் அப்போது பர்மா என்று அழைக்கப்பட்ட தற்போதைய மியான்மருக்கு தமிழர்கள் சென்று வணிகம் மற்றும் விவசாயம் மேற்கொண்டு வந்தனர். ஆனால் பர்மா பிரிட்டனிடமிருந்து 1948-ம் ஆண்டு சுதந்திரம் பெற்ற பிறகு எல்லாம் மாறியது.

மியான்மரில் 1962-ம் ஆண்டு அப்போதைய ராணுவத் தலைவர் நிவின் தலைமையில் ஆட்சிக் கவிழ்ப்பு நடந்து அதிகாரம் ராணுவத்திடம் சென்றது. அவர் நாட்டில் சிறுபான்மை மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டார். நிலச்சீரமைப்புகளும், பர்மிய மொழி திணிப்பும், உள்ளூர் மக்களுக்குக் கொடுக்கப்பட்ட முன்னுரிமையும் அங்குள்ள தமிழர்களின் வாழ்க்கையைத் துயரமாக்கின. அரசுடைமையாக்கத் தமிழர்களின் விவசாய நிலங்களும் சொத்துகளும் எடுத்துக்கொள்ளப்பட்டன. பல லட்சம் தமிழர்கள் நாட்டைவிட்டு வெளியேறினர்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு