Published:Updated:

மேகதாது அணை கட்ட எதிர்ப்பு : விவசாயிகள் அனைத்து கட்சி கூட்டம் கூட்ட முடிவு

Vikatan Correspondent
மேகதாது அணை கட்ட எதிர்ப்பு : விவசாயிகள் அனைத்து கட்சி கூட்டம் கூட்ட முடிவு
மேகதாது அணை கட்ட எதிர்ப்பு : விவசாயிகள் அனைத்து கட்சி கூட்டம் கூட்ட முடிவு

திருவாரூர்:  காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு புதிய அணைகள் கட்டுவதை தடுக்க, சென்னையில் வரும் 21ம் தேதி அனைத்து கட்சி கூட்டம் நடத்துவதென்று அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு முடிவு செய்துள்ளது.

காவிரி டெல்டா அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு அவசரக் கூட்டம்  திருவாரூரில் நடந்தது. கூட்டத்தில், காவிரியின் குறுக்கே புதிய அணைகள் கட்டப்படுமேயானால் காவிரி டெல்டா மாவட்ட விவசாயம் முற்றிலும் அழிந்துபோவதோடு 19 மாவட்டங்களின் குடி நீர் ஆதாரம் பறிபோய் விடும்.

மேகதாது அணை கட்ட எதிர்ப்பு : விவசாயிகள் அனைத்து கட்சி கூட்டம் கூட்ட முடிவு

சுமார் 5 கோடி மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க அனைத்து விவசாய சங்கங்களின் சார்பில் பிரதமரை சந்திப்பதற்கு பலகட்ட முயற்சிகளை மேற்கொண்டும், சந்திப்பதற்கு மறுப்பதோடு, இப்பிரச்னையில் பிரதமர் தொடர்ந்து மவுனம் சாதித்து வருகிறார். எனவே காவிரியின் உரிமையை மீட்டு, மக்களை பாதுகாக்க அடுத்த கட்ட அவசர கால நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில், வரும் 21ம் தேதி சென்னையில் அனைத்து கட்சி  தலைவர்கள் பங்கேற்கும் கூட்டம் நடத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது  விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் , நெல் ஜெயராமன், வரதராஜன் மற்றும் பல விவசாயிகள் முன்னிலையில் நிறைவேற்றபட்டது.

மேகதாது அணை கட்ட எதிர்ப்பு : விவசாயிகள் அனைத்து கட்சி கூட்டம் கூட்ட முடிவு

கர்நாடகத்தின் அணை கட்டும் முயற்சியை தடுக்க, விவசாயிகள் சார்பில் சென்னையில் வரும் 21ம் தேதியன்று நடத்தவுள்ள அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்று, விவசாயிகளை வழிநடத்த வேண்டும் என வலியுறுத்தி, அனைத்து கட்சித்தலைவர்களை சந்திக்க திட்டமிட்டு சென்னையில் அனைத்து அரசியல் கட்சி தலைவர்களையும் சந்திக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் முதல் படியாக, அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் தமிழக முதல்வருமான செல்வி .ஜெயலலிதா அவர்களிடம் போயஸ் காடர்னில் உள்ள அவரது இல்லத்தில் சென்று அழைப்பு கொடுத்தனர் விவசாயிகள்.

செய்தி மற்றும் படங்கள்
: த. க. தமிழ் பாரதன் (மாணவ பத்திரிகையாளர்)