Published:Updated:

சதுரகிரி மலையில் காட்டாற்று வெள்ளம்: 6 பக்தர்கள் பரிதாப பலி!

Vikatan Correspondent
சதுரகிரி மலையில் காட்டாற்று வெள்ளம்: 6 பக்தர்கள் பரிதாப பலி!
சதுரகிரி மலையில் காட்டாற்று வெள்ளம்: 6 பக்தர்கள் பரிதாப பலி!

விருதுநகர்: வத்திராயிருப்பு அருகே சதுரகிரிமலையில் உள்ள கோயிலுக்கு சுவாமி தரிசனத்துக்காகச் சென்றபோது காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி 6 பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்து உள்ளனர்.

சதுரகிரி மலையில் காட்டாற்று வெள்ளம்: 6 பக்தர்கள் பரிதாப பலி!

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள சதுரகிரிமலையில் அமைந்துள்ள சந்தன மகாலிங்க சுவாமி கோயிலுக்கு பவுர்ணமி மற்றும் அமாவாசை நாட்களில் சுவாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். அந்தவகையில், அமாவாசையை முன்னிட்டு நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்காக சதுரகிரிமலை கோயிலுக்கு வந்தனர்.

சதுரகிரி மலையில் காட்டாற்று வெள்ளம்: 6 பக்தர்கள் பரிதாப பலி!

இந்நிலையில், பலர் மலை அடிவாரத்தில் உள்ள தாணிப்பாறை நீர்வீழ்ச்சியில் நேற்று மதியம் மகிழ்ச்சியாக குளித்துக் கொண்டிருந்தனர். மதியம் சுமார் 1 மணி அளவில் திடீரென்று அங்கு பலத்த மழை பெய்தது. மலைப்பகுதியில் பெய்த மழையால், சிறு ஓடைகளில் ஏற்பட்ட நீர்ப்பெருக்கு காட்டாற்று வெள்ளமாக மாறியது. அப்போது, நீரோடைப் பகுதியைக் கடந்த பக்தர்கள் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டனர். இதில், வத்திராயிருப்பு பகுதியைச் சேர்ந்த‌ பாஸ்கர், பொன்ராஜ் உள்பட 4 பேர் காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். இதில் 3 பேரின் உடல்களை மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் மீட்டனர்.

சதுரகிரி மலையில் காட்டாற்று வெள்ளம்: 6 பக்தர்கள் பரிதாப பலி!

இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல், தீயணைப்பு, வனத்துறையினர் மற்றும் மலைவாழ் மக்கள் மீட்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். ஆயிரம் பேர் வரை பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில் மழை காரணமாகவும், இருள் சூழ்ந்ததாலும் பக்தர்களைத்‌ தொடர்ந்து மீட்க முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, கோயில் வளாகத்தில் தங்கி இருக்குமாறு பக்தர்களிடம் தெரிவிக்கப்பட்டது. இன்று காலை மீண்டும் மீட்புப் பணி தொடங்கிய நிலையில் மேலும் ஒருவரது உடல் மீட்கப்பட்டது. அதன்பின் மேலும் 2 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் பலியானோரின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

சதுரகிரி மலையில் காட்டாற்று வெள்ளம்: 6 பக்தர்கள் பரிதாப பலி!

இதேபோல், அந்த பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் என்ற இளைஞர் தனது நண்பர்கள் 7 பேருடன் தானிப்பபாறை அருவியில் குளிக்க சென்றுள்ளார். அப்போது, அவர்கள் அனைவரும் வழுக்குப் பாறையில் குளித்துக் கொண்டிருக்கும்போது வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். இதில், மற்றவர்கள் வெள்ளத்திலிருந்து தப்பி வந்த நிலையில் ராஜ்குமார் மட்டும் வெள்ளத்தில் சிக்கி தவித்தார். உடனடியாக அங்கு சென்ற வனத்துறையினர் அவரை உயிருடன் மீட்டனர்.

சதுரகிரி மலையில் காட்டாற்று வெள்ளம்: 6 பக்தர்கள் பரிதாப பலி!

மேலும், பாறைகளுக்கிடையே வெள்ளப் பெருக்கில் இழுத்துச் செல்லப்பட்டதால் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட ராஜ்குமார், உடனடியாக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

படங்கள்: முத்து ராஜ்