Published:Updated:

கோவிட் 19 உண்டாக்கிய பிரச்னைகள்! - முதலீட்டாளர்களுக்கு ஐந்து பாடங்கள்!

கோவிட் 19
பிரீமியம் ஸ்டோரி
News
கோவிட் 19

இறக்கங்கள்தான் சந்தையில் குறைந்த விலையில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகளை உருவாக்குகின்றன.

ண்டிப்பாக, 2020-ம் ஆண்டு நம்மைச் சிந்திக்க வைத்திருக்கிறது. வரலாற்றுச் சான்றுகளின்படி, இந்த நூற்றாண்டின் மிக மோசமான உடல்நலச் சீர்கேடுகளில் ஒன்றின் காரணமாக அவதிப்பட்டு வருகிறோம். `இன்னும் அதிக பலத்துடன், சிறப்புடன் மீண்டெழுவோம்’ என்ற நம்பிக்கையுடன் இருக்கிறோம்.

நிதிச் சந்தைகள் உட்பட நம் வாழ்வின் எதையும் இந்தப் பிரச்னை விட்டுவைக்கவில்லை. இந்தக் கடுமையான அதிர்ச்சியால் சில்லறை விற்பனையாளர்கள் திகைத்துப் போயிருக்கிறார்கள். நடந்துவிட்ட தவறுகளிலிருந்து, அவற்றை எதிர்கொண்டு மீள்வது எப்படி, முன்னேற என்ன செய்ய வேண்டும் என்பது போன்ற கேள்விகளுக்கு விடை தேடிக்கொண்டிருக்கிறார்கள்.

கோவிட் 19  உண்டாக்கிய  பிரச்னைகள்! - முதலீட்டாளர்களுக்கு ஐந்து பாடங்கள்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

`எல்லாமே விரைவில் சீராகிவிடும்’ என்று நம்பும் சூழலில், கடந்த சில மாதங்களாக இந்த நோய்த் தொற்று நம் மத்தியில் வேகமாகப் பரவியதையும், முதலீடுகள் மற்றும் போர்ட்ஃபோலியோ வழிமுறைகளைப் பொறுத்தவரை கற்றுக்கொண்ட பாடங்களைப் புரிந்துகொண்டதையும் பற்றிப் பேசும் நேரம் இது. அந்த ஐந்து பாடங்கள் இங்கே...

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

1. பங்குச் சந்தையின் நிலையற்ற தன்மையை வசதியானதாக மாற்றிக்கொள்ள வேண்டியது முதலீட்டாளர்களின் பொறுப்பு!

பருவத்துக்கேற்ப / சூழ்நிலைகளுக்கேற்ப முதலீடுகளை மேற்கொள்பவர்களுக்கு இது நன்கு தெரிந்த விஷயம். பங்குச் சந்தைகள் பல்வேறு நிலையற்ற சுழற்சிகளுக்கு உள்ளாகும். முதலீட்டாளர்கள் தங்களது முதலீடுகளைப் புரிந்துகொள்ள ஃபோர்ட்போலியோக்களை கவனத்துடன் அணுக வேண்டும். சந்தையில் தற்போதிருக்கும் நிலையற்ற சூழலையும் (நோய்த் தொற்றின் விளைவு) கவனிக்க வேண்டும். புதிய முதலீட்டாளர்கள் தற்போதைய சூழலைக் கண்டு பயப்படுவதற்குப் பதிலாக, அதை நன்கு புரிந்துகொள்ள வேண்டும். பங்குச் சந்தையின் நிலையற்ற தன்மையைக் கண்டு பயப்படத் தொடங்கினால், பங்கு முதலீட்டின் வளர்ச்சித் திறனில் பங்கேற்பதைத் தடுக்கும் நிலை ஏற்படும். அதனால், அதை ஏற்றுக்கொள்ளப் பழக வேண்டும். முதலீடு செய்வது பற்றிய புகழ்பெற்ற மேற்கோள் ஒன்று, ‘குறுகியகாலத்தில் பங்குகளின் மதிப்பில் 50% சரிவடைவது உங்களுக்குக் கடுமையான துன்பத்தை ஏற்படுத்துமென்றால், நீங்கள் கண்டிப்பாக பங்குச் சந்தையில் முதலீடு செய்யக் கூடாது.’ பல்வேறு காலகட்டங்களில் பங்குச் சந்தைகள் வீழ்ச்சியைச் சந்திக்கும் என்பதை முதலீட்டாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும். அவற்றை நீண்டகாலத்துக்கானதாக ஒதுக்கிக்கொள்ள வேண்டும். நிலையற்ற தன்மையைச் சாதகமாக ஏற்றுக்கொண்டால் நீண்டகாலத்தில் நல்ல லாபம் பார்க்க முடியும்.

கோவிட் 19
கோவிட் 19

2. சந்தையைக் கணிக்க முயலாதீர்கள்!

ஒரு முதலீட்டாளராக, சந்தையின் உயர்வையோ, தாழ்வையோ கண்டறிய, கணிக்க முற்படுவது பயனற்ற வேலை. இறுதியில், இந்த நிலையற்ற நிலையிலிருந்து பங்குச் சந்தைகள் மீண்டுவிடும் என்பதையும் அறிய வேண்டும். உலகளாவிய பிரச்னைகளைக் கடந்த காலத்திலும் எதிர்கொண்டிருக்கிறோம். இனிமேலும் அது தொடரும். அதுபோலவே, இந்த நேரத்தில் எதிர்கொண்டு வருகிறோம். அதனால், சந்தையின் ஏற்ற இறக்கம் கண்டு கவலைகொள்ளத் தேவையில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கோவிட் 19
கோவிட் 19

3. முதலீட்டைப் பிரித்து மேற்கொள்வது..!

நன்கு பரவலாக்கப்பட்ட போர்ட்ஃபோலியோ, நிலையற்ற சந்தைக்கு எதிரான சிறந்த பாதுகாப்பு வழி. எல்லா நகைகளையும் எவரும் ஒரே இடத்தில் வைக்க மாட்டார்கள்; முதலீடுகளும் அதைப் போன்றதுதான். ஒரு குறிப்பிட்ட திட்டத்தில் மட்டுமே எல்லாவற்றையும் முதலீடு செய்யக் கூடாது என்பதை மனதில்கொள்ள வேண்டியது அவசியம். `பன்முகத்தன்மை முதலீடு’ என்பது நல்ல வருமானம் பெற அடிப்படையான விஷயம் என்பதால், லார்ஜ்கேப், மிட்கேப், ஸ்மால்கேப் என எல்லா வகைச் சந்தை மதிப்புகொண்ட பங்குகளிலிருந்தும் வருமானம் பெறும் விதமாக போர்ட் ஃபோலியோவை உருவாக்க வேண்டும். வளர்ச்சி சார்ந்த சொத்துகள் (ஈக்விட்டி சார்ந்த திட்டங்கள்), நிலையான சொத்துகள் (கடன் சார்ந்த திட்டங்கள்) இரண்டும் கலந்ததாக போர்ட் ஃபோலியோவைப் பராமரிக்க வேண்டும்.

corona virus
corona virus

4. நீண்டகால முதலீட்டாளராக இருங்கள்!

வலிமையான நிறுவனங்களாக இருந்தாலும், கோவிட் 19 சூழலில் அவை பாதிப்பை எதிர்கொள்கின்றன. இருந்தபோதும், புளூசிப் பங்குகள் மீண்டும் ஏற்றத்துக்குத் திரும்புகின்றன. சூழலுக்குத் தகுந்தவாறு தொடர்ச்சியாக மாற்றியமைத்துக்கொள்ளும் முதலீட்டாளர்களுக்கு ஒப்பீட்டளவில் அதிக பாதிப்பு இல்லை. குறுகியகாலப் போக்குகளை எந்த யோசனையும் இல்லாமல் பின்பற்றுவது, முதலீட்டாளர்களை அச்சுறுத்தி பங்குகளை வாங்கவோ, விற்கவோ வைக்கும். அதற்குப் பதிலாக, தற்போது சந்தையில் நிலவும் செயல்பாடுகளை அமைதியாக மதிப்பிட வேண்டும். நீண்டகாலத்துக்குப் பிறகான நிலையை மனதில்கொண்டு, தங்களது நிதிக் குறிக்கோளுக்கு ஏற்ற முடிவுகளை மேற்கொள்ள வேண்டும்.

5. சிறப்பான ஒழுங்கு அவசியம்!

யோசித்துச் செயல்படுத்துவதற்கு முன்னதாக ரிஸ்க்கைக் குறைப்பதன் முக்கியத்துவத்தை கோவிட் 19 நோய்த் தொற்று கற்றுத் தந்திருக்கிறது. மீட்புக்கான பாதை நீண்டிருந்தாலும், பங்குச் சந்தைகள் விரைவிலேயே மீண்டெழுவது நிச்சயம். நல்ல விஷயங்களை அடைய, பொறுமை கண்டிப்பாகத் தேவைப்படும். பங்குச் சந்தை முதலீட்டுச் சுழற்சியில் ஏற்றமும் இறக்கமும் ஒரு பகுதி. பங்குச் சந்தையில் நீண்டகாலமாக இருக்கும் முதலீட்டாளர்களுக்குச் சந்தை நல்ல லாபத்தைக் கொடுக்கும். சந்தை நிலையற்ற தன்மையில் இருக்கும் காலகட்டத்தில் பயமும், குறுகியகாலச் சிந்தனையும் முதலீட்டாளர்களின் மோசமான பகைவர்கள். எஸ்.ஐ.பி-க்களின் வழியே தொடர்ந்து முதலீட்டை மேற்கொள்ளும் ஒழுங்கு சிறப்பாகச் செயலாற்றும். இறக்கங்கள்தான் சந்தையில் குறைந்த விலையில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகளை உருவாக்குகின்றன.

முடிவாக, முதலீட்டாளர்கள் தங்களது முதலீடுகளைப் பொறுத்தவரை பொறுமையாக நடந்துகொள்ள வேண்டும் மற்றும் நிதிக் குறிக்கோள்கள் நிறைவேறுவதை உறுதிப்படுத்த போர்ட்ஃபோலியோ சரிபார்ப்பைக் குறிப்பிட்ட இடைவெளியில் மேற்கொள்ள வேண்டும்.